Moonlighting Policy: இந்திய ஐடி துறையில் வரும் மாற்றம்? எதிர்க்கும் Wipro Explained

இந்தியாவைப் பொறுத்த வரை எந்த ஒரு தனியார் நிறுவனமும், ஸ்டார்ட் அப் நிறுவனமும் தன் ஊழியர்கள், வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதை ஊக்குவிப்பது இல்லை
Employee (Rep)
Employee (Rep)Twitter
Published on

இந்திய ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தான் புதிய நிறுவன கலாச்சாரங்கள் மற்றும் புதிய யோசனைகள் பலதும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிதாக Moonlighting Policy என ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி, தன் ஊழியர்களுக்கு Moonlighting Policy என ஒரு புதிய கொள்கையைக் கொண்டு வர இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Moonlighting Policy என்றால் என்ன?

ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளராக பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே, அந்த ஊழியர் வேறு ஒரு நிறுவனத்திலும் பணியாற்ற அல்லது வேறு பணிகளைச் செய்ய அனுமதி வழங்குவதே Moonlighting Policy என்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்த வரை எந்த ஒரு தனியார் நிறுவனமும், ஸ்டார்ட் அப் நிறுவனமும் தன் ஊழியர்கள், வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதை ஊக்குவிப்பது இல்லை. சொல்லப் போனால், அப்படி இரண்டு நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வேலை பார்ப்பது தெரிய வந்தால், அந்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்படுவார் அல்லது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Employee (Rep)
வேலையை விட்டு நீக்கும் போது அழுத CEO, ஊழியருக்கு குவிந்த வேலை வாய்ப்பு - என்ன நடந்தது?

இது ஏமாற்று வேலை - ரிஷாத் பிரேம்ஜி

அப்புதிய கொள்கையின் படி, ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர், மற்றொரு நிறுவனத்திலும் ஊழியராக பணியாற்ற வழி வகுக்கிறது. இதை விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தவறான கொள்கை எனக் கண்டித்துள்ளார்.

Moonlighting Policy குறித்து தகவல் தொழில்நுட்பத் துறையில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. அது ஒரு ஏமாற்று வேலை என நேரடியாக தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு நபர், ஒரே நேரத்தில், இரு நிறுவனங்களில் முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Employee (Rep)
Swiggy : ஊழியர்களுக்கு பலே அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் - என்ன அது?

இந்திய ஐடி நிறுவனங்களின் சங்கம் போல் செயல்படும் நாஸ்காமின் தலைவராக இருக்கும் இவர், சமீபத்தில் தான் விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் ரிஷாத் ப்ரேம்ஜி வழிநடத்தும் விப்ரோ நிறுவனத்தில், அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளப் பிடித்தம் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மார்ஜின் குறைந்ததால் இந்த சம்பளக் குறைவு என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 செப்டம்பர் 1ஆம் தேதி மீண்டும் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாயின.

Employee (Rep)
Ola: பாதியில் நிறுத்தப்பட்ட பயணம்; 95,000 ரூபாய் இழப்பீடு வழங்கிய நிறுவனம் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com