Swiggy : ஊழியர்களுக்கு பலே அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் - என்ன அது?

உணவு டெலிவரி என்ற ரிஸ்கான தொழில் வெற்றியடையும் என கணித்து முன்னுதாரணமாக களமிறங்கிய ஸ்விக்கி நிறுவனம் தற்போது அதே போல மற்றொரு முடிவையும் எடுத்திருக்கிறது.
Swiggy
SwiggyTwitter
Published on

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விக்கி. நவீன உலகில் மெட்ரோ நகரங்களில் முக்கிய தொழிலாக வளர்ந்திருக்கிறது உணவு டெலிவரி.

சில ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் உணவை வீட்டில் சமைக்காமல், ஹோட்டலில் அதுவும் வீட்டிலிருந்தே வாங்கி உண்போம் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டோம். ஆனால் அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

உணவு டெலிவரி என்ற ரிஸ்கான தொழில் வெற்றியடையும் என கணித்து முன்னுதாரணமாக களமிறங்கிய ஸ்விக்கி நிறுவனம் தற்போது அதே போல மற்றொரு முடிவையும் எடுத்திருக்கிறது.

Working Hours
Working HoursTwitter

ராஜினாமா செய்யும் ஊழியர்கள்

கொரோனாவுக்கு அடுத்த காலங்களில் உலகப் பொருளாதாரமே நிலை குலைந்துக் காணப்படுகிறது. இந்த சூழலில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் பணிச்சூழலை விரும்பாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு பிறகான விலைவாசி உயர்வு ஊதியப் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டில் இருந்து வேலை செய்து பழகிய ஊழியர்கள் அலுவலகம் செல்ல துவங்கியுள்ள நேரத்தில், அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், உணவு ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது.

ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது முதல் பல வசதிகளை எதிர்பார்ப்பது முக்கியக் காரணமாக இருக்கிறது. பணியிடத்தில், நட்பான, சுமூகமான சூழல் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் நிறுவனங்கள் வேலையிலிருந்து விலகும் ஊழியர்களை தக்கவைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

Swiggy
கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்த ’நாத்திக’ ஊழியர்கள் - என்ன காரணம் தெரியுமா?
Swiggy
SwiggyTwitter

Moonlighting Policy

ஸ்விக்கி நிறுவனத்தில் 5000 முழு நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

உணவு டெலிவரி செய்பவர்கள் இந்த எண்ணிக்கையில் அடங்கமாட்டார்கள். அவர்கள் ஸ்விக்கியின் ஃப்ரீலான்சர்கள். ஸ்விக்கியில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஃப்ரீலான்சர்கள் பணியாற்றுகின்றனர்.

ஒரு நிறுவனத்தின் முழுநேர ஊழியர்கள் மற்ற நிறுவனத்தில் வேலை செய்வது இந்தியாவில் விதிமீறலாக கருதப்படுகிறது. இதற்கு மாறாக ஸ்விக்கி தங்களது முழுநேர ஊழியர்கள் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் வேறு நிறுவனத்தில் வேலைப் பார்க்கலாம் என கூறியிருக்கிறது. இதனை Moonlighting பாலிசி என்று அழைக்கின்றனர்.

Swiggy
ஒரு நல்ல சேதி - ஊழியர்கள் சம்பளத்தை 10% உயர்த்த இந்திய நிறுவனங்கள் திட்டம்: காரணம் என்ன?

இது குறித்து ஸ்விக்கி நிறுவனம், "இனி எங்கள் ஊழியர்கள் அவர்களுக்கு விருப்பமான விஷயங்களில் கவனம் செலுத்தி கூடுதலாக வருவாய் ஈட்டிக்கொள்ளலாம். இப்படி இரண்டு வேலைகளை செய்வதால் அவர்களின் திறன் மேம்படவே செய்யும் " எனக் கூறியுள்ளது.

ஆனால், ஸ்விக்கிக்கு போட்டியான நிறுவனங்களில் வேலை செய்யக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கியின் இந்த அறிவிப்புகள் வரவேற்பைப் பெற்றாலும் டெலிவரி செய்யும் ஃப்ரீலான்ஸ் ஊழியர்கள் குறைந்தபட்ச வருமானத்துக்கு உறுதி அளிக்க வேண்டி போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்விக்கியைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இந்த யுக்தியை பின்பற்றக் கூடும் எனக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இது போலவே பணிச்சூழல் அமையும் என்றும் கூறப்படுகிறது.

Swiggy
Swiggy : முகம் நிறைந்த புன்னகையுடன் உணவு டெலிவரி செய்யும் மாற்றுதிறனாளி - ஓர் அடடே சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com