Jio அம்பானி கதை : ஒரு ஐஸ்கிரீமுக்காக உயிரை பணையம் வைத்து நீந்திய திருபாய் அம்பானி| பகுதி 2

ஸ்ட்ரிக்டான பள்ளி ஆசிரியர் ஹீராசந்த் அம்பானியின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த திருபாய் அம்பானி, வறுமை காரணமாக இளம் வயதிலேயே பெரிய குடும்ப பொறுப்புகளை எல்லாம் சுமக்க வேண்டி வந்தது
Dhirubhai Ambani

Dhirubhai Ambani

Twitter

Published on

20ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தலையெழுத்தை தன் போக்கில் எழுதிய திருபாய் அம்பானி, இளம் வயதில் சுதந்திர வேட்கையால் ஈர்க்கப்பட்டு தன்னளவில் போராடிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. அப்போது தான் காவலர்களால் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் கிருஷ்ணாவை தைரியமாக போராடி மீட்ட சம்பவம் எல்லாம் நடந்தது.

பதினெட்டு வயது கூட நிரம்பாத திருபாய் அம்பானியை ஏமன் நாட்டுக்கு அனுப்புவது பற்றி, அம்பானி குடும்பத்திற்கு வருத்தம் ஒன்றும் இல்லை, காரணம் அவருடைய சகோதரர் ராம்னிக்பாய் ஏமனில் தான் வேலை செய்து கொண்டிருந்தார்.

Dhirubai Ambani with his Sons

Dhirubai Ambani with his Sons

Facebook

1949ஆம் ஆண்டு திருபாய் ஏமனுக்கு புறப்பட்டதாக ரிலையன்ஸ் குழும வலைதளம் கூறுகிறது. 'கபொடா' என்கிற கப்பல் அம்பானியை இந்தியாவிலிருந்து எமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றது. 1950களிலேயே ஏமன் மிக பிசியான வர்த்தக துறைமுக நகரம். அன்றைய தேதிக்கு, பல நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களில் எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது, மாலுமிகள் இளைப்பாறிப் போகும் ஒரு முக்கிய வழித்தட நகரமாக இருந்தது.

எனவே, யேமன் துறைமுகத்தில் இறங்கிய உடன், திருபாய் அம்பானிக்கு ஒரு நிறுவனத்தில் உதவியாளர் பணி கிடைத்தது. பத்தாம் வகுப்பையே அரியர் வைத்து தேறிய 17 வயது இளைஞனுக்கு நிறுவனத் தலைவர் பதவியா கிடைக்கும். நம்ம ஊரு மதிப்பில் சுமார் 125 ரூபாய் சம்பளம். அப்பாடா வீட்டுக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது இனி ஜாலிதான்... என மகிழ்ச்சியடையவில்லை அம்பானி.

என்னையா உப்புச்சப்பில்லாத வேலை இது... என அலுத்துக் கொண்டார். ஆனால் தனக்கு கொடுக்கப்படும் வேலைகளில் எந்தவித குறையும் வைக்கவில்லை. தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், அண்ணன் ராம்னிக் பாய் என பலரிடமும் வேறு வேலை கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அண்ணன் ராம்னிக்பாய் மூலமாக A. Besse & Co நிறுவனத்தில் பெட்ரோல் பங்க் உதவியாளர் பணி கிடைத்தது. இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 300 ரூபாய்.

Dhirubhai Ambani

Russia - Ukraine war : இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் தர ரஷ்யா முடிவு ?

Dhirubai Ambani

Dhirubai Ambani

Twitter

1940 களின் இறுதியில், குஜராத்தைச் சேர்ந்த மகன்பாய் படேல், A Besse & Co நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்தார். அந்நிறுவனத்தில் சுமார் 30% ஊழியர்கள் இந்தியர்கள், பெரும்பாலும் குஜராத்திகளாக இருந்தனர்.

கிட்டத்தட்ட மூன்று மடங்கு சம்பள உயர்வு, ஷெல் நிறுவன பொருட்களை விற்கும் பணி... கல்யாணம் குழந்தை குட்டி என, ஏமனிலேயே செட்டிலாகி வாழ்க்கையை ஒட்டி விட வேண்டியதுதானே! இப்படித்தான் 100க்கு 90 இந்தியர்கள் யோசித்திருப்பார்கள்.

ஆனால் திருபாயோ, இவ்வளவு பெரிய நிறுவனம் எப்படி இயங்குகிறது என உற்று நோக்கத் தொடங்கினார். அங்கு சாதாரண உதவியாளர் முதல் மேலாளர்கள், துறைத் தலைவர்கள் என அனைவரின் பணிகளையும் அலசத் தொடங்கினார். இந்த வேலையை ஏன் இப்படி செய்ய வேண்டும்? இப்படி மாற்றி செய்தால் என்ன? என தனக்குள்ளேயே ஒரு எம்பிஏ மாணவரைப் போல பகுப்பாய்வு செய்து கொள்ளத் தொடங்கினார்.

தன்நிறுவனம், வெறுமனே ஒரு தந்திக்காக பல்லாயிரம் ரூபாயை செலவழித்ததைப் பார்த்து மிரண்டு போனார் திருபாய். அடேய்களா, இந்த செய்தியை சொல்லாவிட்டால் இப்போது குடியா முழுகிவிடும்? நிறுவனத்துக்கு பல்லாயிரம் ரூபாய் மிச்சமாகுமே என கணக்குபோட்டார்... காலப் போக்கில், அந்தத் தந்தியில் இருக்கும் செய்தியால் குடி முழுகிப் போகலாம் என்பதை புரிந்து கொண்டார். ஒரு துண்டுச் செய்தியால் நிறுவனத்துக்கு பல லட்சம் ரூபாய் லாபமும் கிடைக்கலாம் அல்லது பலத்த நஷ்டத்தை தவிர்க்கலாம் என்பதை புரிந்து கொண்டார்.

ஆக, தந்திக்கான செலவு செலவல்ல... முதலீடு என்பதை உணர்ந்தார். வியாபாரத்தில் செய்யும் செலவுகளுக்கும் முதலீட்டுக்குமான வித்தியாசங்களை இப்படி எதார்த்த சம்பவங்கள் மூலம் உணர தொடங்கி இருந்தார் திருபாய். ஏமன் வந்த புதிதில், ஒரு ஐஸ்கிரீமுக்காக உயிரை பணையம் வைத்து நீந்தியது எல்லாம் இந்த காலகட்டத்தில் தான் நடந்தேறியது.

Dhirubai Ambani

Dhirubai Ambani

Twitter

எல்லா நிறுவனங்களிலும் புதிய திறமைசாலிகளை கண்டு அவர்களை ஊக்குவித்து பதவி மற்றும் பொறுப்புகளை கொடுக்கும் நபர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி திருபாய் அம்பானியின் சுறுசுறுப்பையும் தன் பணியைத் தாண்டி நிறுவன செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவதையும் அவர் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கண்டுகொண்டார். திருபாய் அம்பானிக்கு டெலிவரி கிளார்க்காக பதவி உயர்வு கிடைத்தது. கூடிய விரைவில் அந்நிறுவனத்தின் சரக்குகளை கையாளும் அளவுக்கு உயர் பதவிகளை எட்டிப் பிடித்தார்.

BP என்கிற பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனம், ஏமனில் எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலையைத் தொடங்கவிருந்தது. அப்போது அந்நிறுவனம் தொடர்பான கட்டுமானப் பணிகளை எல்லாம் நோட்டம்விட்டார் திருபாய். அம்பானியின் வியாபார அணுகுமுறைகள் மற்றும் அனுபவங்கள் கூர்மையடைந்து கொண்டிருந்ததற்கு சாட்சியாக அம்பானி நடுத்தெருவில் நின்ற சம்பவம் ஒன்றும் ஏமனிலேயே அரங்கேறியது.

முந்தைய பகுதியைப் படிக்க

Dhirubhai Ambani

Jio அம்பானி கதை : திருபாய் நவீன இந்திய பொருளாதாரத்தின் குருபாய் | பகுதி 1

Dhirubhai Ambani

Jio அம்பானி கதை : முகேஷ், அனில் அம்பானி - களமிறக்கப்பட்ட காளையர்கள் | பகுதி 20

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com