டாடா குழுமம் வரலாறு : "நான் முதலில் டாடா என நிரூபிக்க வேண்டும்" - ஜே ஆர் டி | பகுதி 12

தினம் ஒரு துறை என, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் ஆலையில் தினசரி நடப்பதையும், அத்துறையின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள பணிக்கப்பட்டார் ஜே ஆர் டி
JRD Tata

JRD Tata

Twitter

Published on

தினம் ஒரு துறை என, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் ஆலையில் தினசரி நடப்பதையும், அத்துறையின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள பணிக்கப்பட்டார் ஜே ஆர் டி. ஒவ்வொரு கோடை காலத்திலும் ரத்தன்ஜி டாடா பிரான்ஸ் செல்வது வழக்கம். 1926ஆம் ஆண்டிலும் பிரான்ஸ் செல்லும் போது, ஜே ஆர் டியை உடன் அழைத்துச் செல்லாமல், டாடா ஸ்டீலில் தன் பயிற்சியைத் தொடருமாறு கூறிவிட்டார் ஆர் டி.

JRD Tata

JRD Tata

Facebook

தி ஷேபிங் ஆஃப் ஸ்டீல்

ஜே ஆர் டி இப்போது தான் முறையாக கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார். அந்த கற்றல் ஓட்டத்தை தடை செய்ய வேண்டாம் என்பது தான் அவரது நோக்கம். அதே போல ‘தி ஷேபிங் ஆஃப் ஸ்டீல்’ என்கிற டாடா ஸ்டீல் உருவான கதையைக் கூறும் வரலாற்றுப் புத்தகத்தையும் ஜே ஆர் டி படித்தார். பிரான்ஸ் சென்ற ரத்தன் ஜி டாடா, கடும் மாரடைப்பு காரணமாக காலமானார். அது டாடா குழுமத்தில் அடியெடுத்து வைத்திருந்த ஜே ஆர் டிக்கு பேரிடியாக இருந்தது.

தந்தைக்கான காரியத்தை எல்லாம் செய்துவிட்டு, வியாபாரத்தில் நுழைந்த போது, ஹாங்காங்க், சிங்கப்பூரில் அலுவலகம் திறந்திருந்தது, பல நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது, போதாக்குறைக்கு பம்பாய், பஞ்ச்கனி, பூனா, ஹார்டெலாட் (பிரான்ஸ்) என பல நகரங்களில் தன் தந்தை ரத்தன்ஜி டாடா வீடு கட்டி இருந்தது அவருக்கு தெரிய வந்தது. மேலும், பணத்தை சந்தையில் முதலீடு செய்ய வேண்டிய லண்டனில் இருந்த முகவர் ஒருவரும், லாபத்தை திசை திருப்பி நஷ்டத்தை அதிகரித்திருந்தார்.

JRD Tata

டாடா குழுமம் வரலாறு : "இவன் உலகை வெல்வான்” ஜே ஆர் டி டாடாவின் அத்தியாயம்! | பகுதி 11

France

France

Twitter

ஜே ஆர் டியால் பிரெஞ்சு மொழியில் சிந்திப்பதை மறக்க முடியவில்லை

இது ஏற்கனவே நிலைகுலைந்திருந்த ஜே ஆர் டி-யை மேலும் கதிகலங்கச் செய்தது. குடும்பத்துக்கு மூத்த ஆண் வாரிசு என்கிற நிலையில் இந்த நிதி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது, அவரது முதல் கடமையாக அமைந்தது.

நஷ்டம் ஏற்படுத்தி வந்த நிறுவனங்களை மூடுவது, தன் காதல் மனைவிக்காக, தன் தந்தை கட்டிய வீட்டை விற்று பணத்தை திரட்டி நிதி நிலையையும், கடனையும் சரி செய்யத் தொடங்கினார் ஜே ஆர் டி. தன் சகோதர சகோதரிகளோடு தாஜ் மஹால் ஹோட்டலில் குடியேறினார்.

டாடா குழும நிறுவனங்களில் தன் முழு கவனத்தைச் செலுத்த தன் பிரெஞ்சு குடியுரிமையை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் வந்தது. ஆனால் அது அவருக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. காரணம் அவர் தாய் மொழி பிரெஞ்சு. அவர் தாய் பிரெஞ்சு மொழி பேசக் கூடியவர். அவர் தந்தைக்கு பிரான்ஸ் நாடு உயரிய விருதுகளை எல்லாம் வழங்கி இருந்தது.

ஒரு தமிழர், என்ன தான் பிரம்மாண்ட உயரங்களுக்குச் சென்றாலும், உலகின் பல முன்னேறிய நாடுகளுக்குச் சென்றாலும், தன் சொந்த மொழியில் சிந்திப்பதை மறக்கமாட்டாரோ, அப்படி ஜே ஆர் டியால் பிரெஞ்சு மொழியில் சிந்திப்பதை மறக்க முடியவில்லை.

JRD Tata

JRD Tata

Facebook

நான் முதலில் டாடா என நிரூபிக்க வேண்டும்

ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவுக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இருப்பினும் அவர் டாடாவின் வியாபாரங்களை கவனித்துக் கொள்வதையும், வியாபாரம் சார்ந்த பணிகளைச் செய்வதையும் நிறுத்தவில்லை. அப்போதெல்லாம் அவர் சகோதரி ரொதாபேதான் அவரை கவனித்துக் கொண்டார். உடல் நலக்குறைவு இருப்பதைத் தெரிந்தும் ஏன் இவ்வளவு உழைக்கிறாய், முதலில் உடல் தேரட்டுமே என ரொதாபே சகோதரன் மீதான அக்கறையில் கூறியதற்கு 'நான் முதலில் டாடா என நிரூபிக்க வேண்டும்' என்று விடை கொடுத்தார் ஜே ஆர் டி. ரத்தன்ஜி டாடாவின் மகன், டாடா குழுமத்தை தோலில் சுமக்கத் தொடங்கிவிட்டார் என்பதை உணர்த்துவதாக இருந்தது.

அதற்கு சான்றாக அவருடைய அடுத்த வியாபாரம், டாடா குழுமத்தின் அப்போதைய தலைவர் தொராப்ஜி டாடா உட்பட எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அப்படியென்ன பிரமாதமான வியாபாரமது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com