TATA குழுமம் வரலாறு : அறிவியல் நிறுவனம் தொடங்க போராடிய ஜாம்செட்ஜி டாடா | பகுதி 5

இந்தியாவுக்கென தனி அறிவியல் நிறுவனம் அமைப்பது பற்றி அன்றைய வைசிராய் கர்சன் கருதியது என்ன? அறிவியல் நிறுவனம் குறித்து ஜாம்செட்ஜி தன் உயிலில் குறிப்பிட்டது என்ன?
Tata Groups

Tata Groups

Twitter

Tata Groups

Money Heist தொடரில் நரேந்திர மோடி ஹீரோ? | பகுதி 3

தன் மனதில் இருந்த அறிவியல் நிறுவன யோசனையை, ஆசிரியர்கள் படை சூழ, அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்த ஜார்ஜ் நதேனியல் கர்சனைச் சந்தித்து விளக்கினார் ஜாம்செட்ஜி டாடா. அறிவு சார் விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்ட மனிதராகக் கருதப்பட்ட கர்சன், ஜாம்செட்ஜி டாடாவின் அதி உயர்தர அறிவியல் நிறுவன திட்டத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இந்தியாவில் அத்தனை தரமான நிறுவனத்தில் சேர போதுமான மாணவர்கள் கிடைப்பார்களா, அப்படியே கிடைத்தாலும் அந்நிறுவனத்தில் அவர்கள் படித்து முடித்த பின் அவர்கள் என்ன செய்வார்கள் என்று கருதினார்.

டாடாவோ பிடித்த பிடியை விடுவதாகத் தெரியவில்லை. காது கொடுக்காத கர்சனை விடுத்து, அன்றைய இந்தியாவின் செகரட்டரி ஆஃப் ஸ்டேட் என்கிற உள் துறை அமைச்சர் பதவியில் இருந்த லார்ட் ஹமில்டனுக்கு கடிதம் எழுதினார்.

ஹமில்டன்னை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்த போது, மீண்டும் அறிவியல் நிறுவன திட்டத்தை விளக்கினார் டாடா. பொறுமையாக மொத்த திட்டத்தையும் உள்வாங்கிக் கொண்ட ஹமில்டன், அன்றைய ராயல் சொசைட்டி ஆஃப் இங்கிலாந்தின் தாளாளராக இருந்த வில்லியம் ராம்சேவிடம் அத்திட்டத்தை ஆய்வு செய்யுமாறு கூறினார்.

டாடாவின் திட்டத்தை ஆய்வு செய்த ராம்சே, இந்தியாவுக்கு இப்படிப்பட்ட உயர் தர நிறுவனமில்லாமல் கொஞ்சம் குறைந்த தரத்திலான கல்வி நிறுவனத்தை அமைக்கலாம் என பரிந்துரைத்தார். இதில் ஆங்கிலேயே அரசுக்கு லாபம் உண்டு என்கிற கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆனால் டாடா, தன் அறிவியல் நிறுவன தரத்தில் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. பச்சை கொடி கிடைத்த உடனேயே ஜாம்செட்ஜி டாடா தன் சொந்த பணத்திலிருந்து 8,000 பவுண்ட் (அன்று இந்திய மதிப்பில் 1.25 லட்சம் ரூபாய்) நன்கொடையாக வழங்கினார். இந்தியாவுக்கென தனி அறிவியல் நிறுவனத்தின் மதிப்பை உணர்ந்து மற்ற தொழிலதிபர்களும் அதிகம் நன்கொடை வழங்குவர் என டாடா எதிர்பார்த்தார்.

Donations of Buisness men

Donations of Buisness men

Twitter

தொழிலதிபர்கள் அளித்த நன்கொடைகள்

அன்றைய மைசூரு சமஸ்தானத்தின் மாகாராஜா, தன் ஆளுகைக்கு உட்பட்ட 371 ஏக்கர் நிலத்தை அந்நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கினார். அது போக 5 லட்சம் ரூபாய் ஒரு முறை நன்கொடையாகவும், ஒவ்வொரு ஆண்டும் 50,000 ரூபாய் நன்கொடையாக வழங்க ஒப்புக் கொண்டார்.

மற்ற சமஸ்தானங்களும், தொழிபதிபர்களும் உடனடியாக பெரிய அளவில் நன்கொடை வழங்கவில்லை. சபில்தாஸ் லாலுபாய் என்கிற பம்பாயைச் சேர்ந்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபர், மைசூரு சமஸ்தானத்தின் நன்கொடையை சமன் செய்வதாகக் கூறிய பின் பல்வேறு தொழிபதிபர்கள் நன்கொடை வழங்கினர். இத்திட்டத்துக்கு தேவையான நிதி திரட்ட, ஜாம்செட்ஜி டாடா, பம்பாயில் இருந்த தனக்குச் சொந்தமான 17 கட்டடங்களை விற்று பணம் திரட்டினார்.

ஒருபக்கம் நன்கொடை மெல்ல வந்துகொண்டிருக்க, மறுபக்கம் இந்தியாவின் வைசிராய் அறிவியல் நிறுவன பணிகளுக்கு அனுமதி கொடுக்க தொடர்ந்து மறுத்து வந்தார். அவரைப் பொருத்த வரை, டாடா உலகில் இல்லாத ஊருக்கு, வழி தேடுவதாகக் கருதினார்.

Indian Institute of Science

Indian Institute of Science

Twitter

இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சயின்ஸ்

கடைசியில் இந்தியாவுக்கென தனியே ஓர் உயர்தர அறிவியல் நிறுவனம் உருவாவதற்குள் ஜாம்செட்ஜி காலமானார். அவரது மகன் தொராப்ஜி, தந்தையின் கனவை நனவாக்க களமிறங்கினார்.

ஜாம்செட்ஜி டாடாவோ, தன் உயிலில், தன் வாழ்நாளுக்குள் இந்தியாவுக்கென தனி அறிவியல் நிறுவனம் உருவாகவில்லை எனில், அந்நிறுவனத்தைக் கட்டியெழுப்ப தன் சொந்த சொத்துக்களைப் பயன்படுத்தலாம் என்று எழுதினார்.

ஜாம்ட்செட்ஜி காலத்திலிருந்து அறிவியல் நிறுவன திட்டத்தை கேட்டு வந்த கர்சன், தொராப்ஜி காலத்திலும் அதே நிலைப்பாட்டில் இருந்தார். மேலும் டாடா குடும்பம், இத்திட்டத்தில் தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவதாகக் கருதினார். ஆனால் தொராப்ஜி டாடா, அப்படியொரு எண்ணம் டாடா குழுமத்துக்கு இல்லை என ஆங்கிலேயர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

மேலும், தனது தந்தை கூறியது போலவே தொராப்ஜி டாடா, அவரது மொத்த பணத்தையும் அறிவியல் நிறுவன உருவாக்கத்துக்கு உழைக்கும் பிரத்யேக டிரஸ்ட் அமைப்புக்கு மாற்ற விரும்புவதாகவும் கூறினார். இருப்பினும் கர்சன் மசியவில்லை. சில அரசியல் காரணங்களுக்காக கர்சன் இந்தியாவின் வைசிராய் பதவியிலிருந்து விலக, லார்ட் மிண்டோ வைசிராயானார்.

மார்ச் 1909-ல் இந்தியாவுக்கென தனி அறிவியல் நிறுவனம் தொடங்க அனுமதி கொடுத்தார். நிறுவனத்துக்கு டாடா அறிவியல் நிறுவனம் என பெயர் வைத்திருக்கலாம், ஆனால் ஜாம்செட்ஜி, அந்நிறுவனத்தின் பெயரில் இந்தியத்தன்மை இருக்க வேண்டும் என கனவு கண்டிருந்ததால், இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சயின்ஸ் என பெயர் சூட்டப்பட்டது.

இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அந்நிறுவனத்திலிருந்து சதீஷ் தவான், சுதா மூர்த்தி என பல இந்தியர்கள், இந்தியாவுக்கும், இந்திய பொருளாதாரத்துக்கும் சேவையாற்றினர், பணி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கான விதை ஜாம்செட்ஜி டாடா தூவியது.

பகுதி மூன்றை படிக்க

Tata Groups

டாடா குழுமம் வரலாறு : தாஜ் ஹோட்டலை கட்டியது இதனால் தானா ? |விறுவிறுப்பான கதை | 4

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com