டாடா குழுமம் வரலாறு : ரதன் டாடாவுக்கு அனுபவம் தேவை என்று கருதிய ஜே ஆர் டி |பகுதி 20

1991ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், டாடா குழுமம், மீண்டும் விபி சிங் மூலம் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
JRD Tata

JRD Tata

Twitter

Published on

ராஜிவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், டாடா குழுமம் சடசடவென பல்வேறு விரிவாக்கங்களைச் செய்தது. டாடா ஸ்டீலின் உற்பத்திக் கொள்ளவை அதிகரிக்க 210 கோடி ரூபாய் முதலீடு, டெல்கோவில் 36,000 ஆக இருந்த உற்பத்தி எண்ணிக்கை 56,000 ஆக அதிகரித்தது, டாடா கெமிக்கல்ஸ் இரு உர ஆலைகளில் முதலீடு செய்தது, 500 மெகாவாட் மின்சார விரிவாக்கத் திட்டத்துக்கு 180 கோடி ரூபாய் டாடா பவரில் முதலீடு என அனல் பறந்தது, 1985ஆம் ஆண்டில் டாடா குழுமம் 250 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. முதலீட்டாளர்கள் பலே லாபம் பார்த்தனர்.

Rajiv Gandhi

Rajiv Gandhi

Twitter

ராஜீவ் காந்தி படுகொலை

1991ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், டாடா குழுமம், மீண்டும் விபி சிங் மூலம் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

அலஹாபாத்தில் 1989ஆம் ஆண்டு “டாடா, பிர்லா, அம்பானி, தாபர், டிசிஎம் ஆகியோர் ஒரு பொருளாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் விலை மதிப்புமிக்க பங்குகளை வெளிநாட்டவர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நிதி அமைச்சராக அதை நிறுத்த நான் முயன்றேன். அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும்” என ஒரு கூட்டத்தில் பேசினார்.

அதற்கு அம்பானி, பிர்லா போன்ற குழுமங்கள் எதிர்வினையாற்றவில்லை, ஆனால் ஜே ஆர் டி, அது அடிப்படையற்றது, அதை வி பி சிங் திரும்பப் பெற வேண்டும் என ஒரு பதில் கடிதத்தை தயார் செய்து, தன் மூத்த அதிகாரிகளிடம் காண்பித்துவிட்டு, வி பி சிங்குக்கு அனுப்பினார்.

அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. பதில் கிடைக்காதததால் சில நாட்களில் அக்கடிதத்தை பத்திரிகைகளுக்கு அனுப்பினார் ஜே ஆர் டி. அடுத்த நாள் சுமார் 70 பத்திரிகைகளில், விபி சிங்குக்கு ஜே ஆர் டி கொடுத்த பதில் என பொருள் தொனிக்கும் தலைப்பில் செய்திகள் வெளியாயின. அப்போதும் வி பி சிங் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை.

JRD Tata

Halamathi Habibbo : ரீல்ஸ்-ல் கலக்கிய பிரபலங்கள்

Nusli Wadia

Nusli Wadia

Facebook

என்னால் எப்போதுமே டாடாவாக முடியாது

இதற்கிடையில் இன்று இந்தியாவின் பிரபல வாட்ச், பிராண்டெட் நகைகள், பைகள் என இளைஞர்கள் சார் பொருட்களில் முன்னணியில் இருக்கும் டைட்டன் நிறுவனத்தை, 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசோடு இணைந்து தொடங்கியது டாடா.

நுஸ்லி வாடியா, ஜே ஆர் டிக்கு மகன் போல நெருக்கமாகப் பழகியவர். ஒருகட்டத்தில் நுஸ்லி வாடியாவின் தந்தை நெவில் வாடியா, தன் பாம்பே டையிங் நிறுவனத்தை ஆர் பி கோயங்கா குழுமத்திடம் விற்க இருந்த போது, அதை தலையிட்டு நிறுத்துமாறு நுஸ்லி வாடியா ஜே ஆர் டியைத் தான் அணுகினார். டாடா நெவில்லிடம் பேசி விற்பனையை தடுத்து நிறுத்தினார்.

அடுத்த சில ஆண்டுகளில் பாம்பே டையிங் நிறுவனத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றார் நுஸ்லி வாடியா. அதற்கு ஜே ஆர் டியும் பக்கபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த உறவுமுறைகளை எல்லாம் வைத்து, தனக்கு வயதாவதை உணர்ந்த ஜே ஆர் டி தனக்குப் பின், நுஸ்லி வாடியாவை தலைவராக்குவது தொடர்பாக அவரிடம் பேசினார்.

நுஸ்லி வாடியாவோ, பணிவோடு, நான் ஒரு வாடியா, என்னால் எப்போதுமே டாடாவாக முடியாது என்று கூறி மறுத்துவிட்டார்.

Ratan Tata

Ratan Tata

Twitter

ரத்தன் டாடாவுக்கு இன்னும் அனுபவம் தேவை என அப்போது கருதினார் ஜே ஆர் டி டாடா

1962ஆம் ஆண்டில், டாடா குழுமத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த ரத்தன் டாடா படிப்படையாக முன்னேறிக் கொண்டிருந்தார்.

ரத்தன் டாடாவுக்கு இன்னும் அனுபவம் தேவை என அப்போது கருதினார் ஜே ஆர் டி டாடா. அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கும் பயணத்துக்கு மத்தியில், ஏசிசி நிறுவனம் விரிவாக்கத்துக்காகவும் 26 கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிட்டது. அதில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை தர்பாரி சேத் (டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர்) பல்வேறு வழிகளில் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

டெல்கோ நிறுவனத்தின் தலைவராக ருசி மோடியும், துணைத் தலைவராக ரத்தன் டாடாவும் பொறுப்பேற்க விரும்பினார் ஜே ஆர் டி. ஆனால் டெல்கோ நிறுவனத்துக்குள், ருசி மோடியை வரவிடமாட்டேன் என உறுதியாக இருந்தார் சுமந்த் முல்காவுகர். இப்படி டாடா நிறுவனத்துக்குள்ளேயே உள்ளடி வேலைகள் மற்றும் தலைவர் போட்டிக்கு அரசியல் காய் நகர்த்தல்கள் நடக்கத் தொடங்கின.

டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு டாடா நிறுவனத்தின் மேல் உள்ள பிடி தளர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இந்த வயதானவர்கள் யாரும் எதிர்கால பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான நபர்கள் எல்ல என்று கருதினார் ஜே ஆர் டி.ஆனால் டாடா குழுமத்தில் குட்டி குட்டி சாம்ராஜ்ஜியங்களை ஆண்டு கொண்டிருக்கும் பல தலைமைகளை நீக்கிவிட்டு, ஒரே தலைமையைக் கொண்டு வர வேண்டி இருந்தது.

என்ன ஆனதோ, ஏதானதோ தெரியவில்லை... 1991 மார்ச் 25ஆம் தேதி, டாடா குழுமத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ரத்தன் டாடாவை அடுத்த டாடா குழுமத்தின் தலைவர் என முன்மொழிந்தார் ஜே ஆர் டி. அதை பலொன்ஜி மிஸ்திரி வழிமொழிந்தார்.

இன்று வரை இந்த ஷபூர்ஜி பலொன்ஜி மிஸ்திரிதான் டாடா குழும பங்குகளை அதிக அளவில் வைத்திருக்கும் தனி நபர் அல்லது தனி அமைப்புகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

JRD Tata

JRD Tata

Facebook

துருவ நட்சத்திரமாக விளங்கிய ஜே ஆர் டி

இந்திய தொழில்துறையின் துருவ நட்சத்திரமாக விளங்கிய ஜே ஆர் டியின் சொந்த வாழ்கை அத்தனை சிறப்பாக இல்லை. அவருக்கு வாரிசுகள் யாரும் கிடையாது. அவர் மனைவி தெல்லி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், அவர் சகோதரி ரொதாபே மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மாலை அலுவலகப் பணிகளை முடித்தபின், அவர் உதவியாளர் ‘சார் வீட்டுக்குப் புறப்படலாமா?’ என்று கேட்கும் போது “நான் வீட்டுக்குச் சென்ற பின் என்ன செய்வேன்? என கண்ணீர் வீட்டு அழுதிருப்பதாக கிரீஷ் குபேரின் The Tatas: How a family built a business and the nation என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜே ஆர் டிக்கு பெரிய ஆன்மிக நாட்டமோ, பக்தியோ கிடையாது. கடவுளுக்கு நிறைய வேலை இருக்கிறது, நாம் ஏன் தொந்தரவு செய்வானேன் என வேடிக்கையாக சில முறை குறிப்பிட்டதுண்டு.

ஜே ஆர் டியின் சுய சரிதையை எழுதிய ஆர் எம் லாலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். கவலைப்படாதீர்கள், இந்த புத்தகத்தை முடிக்காமல் நாம் புறப்படமாட்டோம் என அவருக்கு உடல் நலமில்லாத போதும் வேடிக்கையாகக் லாலாவிடம் கூறியுள்ளார் ஜே ஆர் டி.

அதீத நினைவாற்றல் கொண்ட ஜே ஆர் டி தன் கடைசி காலகட்டத்தில் கோமாவில் சிக்கி, 1993 நவம்பர் 29ஆம் தேதி காலமானார். ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா என்கிற இந்திய தொழில்துறையின் சூரியன் அஸ்தமித்தது.

டாடா சாம்ராஜ்ஜியத்தில் அணுகுண்டளவுக்கு சக்திவாய்ந்த பிரச்சனைகள், ஒவ்வொன்றாக வெடிக்கக் காத்திருந்தன. மறுபக்கம் இந்தியா உலகமயத்துக்கும், தனியார்மயத்துக்கும் கதவுகளைத் திறந்துவிட்டிருந்தது.

முந்தைய பகுதியைப் படிக்க

JRD Tata

டாடா குழுமம் வரலாறு : டாடாவை வம்பிற்கு இழுத்த மொரார்ஜி தேசாய் அரசு| பகுதி 19

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com