Swiggy, Zomato நிறுவனங்களு போட்டியாகும் டாடா - தக்வல்கள் சொல்வதென்ன?

ஏற்கெனவே 2 ஜாம்போவான்கள் இருக்கும் சந்தையில் புதிதாக நுழைவதும் கட்டுமானத்தை உருவாக்குவதும் கடினமானதாகும். வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் உணவக உரிமையாளர்களின் நம்பிக்கையையும் பெற வேண்டும்.
Swiggy, Zomato நிறுவனங்களு போட்டியாகும் டாடா - தக்வல்கள் சொல்வதென்ன?
Swiggy, Zomato நிறுவனங்களு போட்டியாகும் டாடா - தக்வல்கள் சொல்வதென்ன?Twitter

டாடா நிறுவனம் இந்தியாவில் பிரபலமாக இருக்கக் கூடிய உணவு டெலிவரித் துறையில் கால் பதிக்கவுள்ளது. தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் 1000 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்திய டாடா நியோ செயலியை இதற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2022 டாடா ஐபிஎல் தொடங்கிய போது தொடங்கப்பட்டது டாடா நியோ. டாடா நியோவை முன்னிறுத்தி பல விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவை பெரிய அளவில் பலனளிக்கவில்லை. இந்த செயலியை உணவு டெலிவரி துறையில் திருப்ப டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

ஏற்கெனவே இந்தியாவின் உணவு டெலிவரி துறையில் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ என்ற இரண்டு நிறுவனங்கள் ஜாம்போவான்களாக உருவாகியிருக்கின்றன.

புதிதாக சந்தையில் நுழைவதும் கட்டுமானத்தை உருவாக்குவதும் கடினமானதாகும். வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் உணவக உரிமையாளர்களின் நம்பிக்கையையும் பெற வேண்டும்.

இந்த சிக்கலை எதிர்கொள்ள இந்திய அரசாங்கத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை உருவாக்கிய ONDC உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது டாடா நிறுவனம்.

ONDC உடன் இணைவது மூலம் தொடக்க நிலை சிக்கல்களை எளிதாக எதிர்கொள்ளலாம். ஏற்கெனவே சந்தை கட்டமைப்பில் அங்கமாக இருக்கும் உணவகங்களை சென்றடைய முடியும். டாடா நிறுவனத்தின் நியோ செயலி இந்தமுறை மக்கள் செல்வாக்கைப் பெறுகிறதா எனப் பொருத்திருந்து பார்க்கலாம்.

Swiggy, Zomato நிறுவனங்களு போட்டியாகும் டாடா - தக்வல்கள் சொல்வதென்ன?
உலக முதலீட்டாளர் மாநாடு : தென்மாவட்டங்களில் முதலீடு செய்யும் டாடா நிறுவனம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com