LIC IPO: கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

மொத்தம் 22,13,74,920 பங்குகள் வெளியிடப்பட உள்ளன. அதில் 15,81,869 பங்குகள் எல் ஐ சி நிறுவன ஊழியர்களுக்கும், 2,21,38,492 பங்குகள் எல் ஐ சி நிறுவன பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
LIC
LICTwitter

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான லைஃப் இன்ஷூரன்ச் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவன பங்குகளை, கடந்த மே 4ஆம் தேதி முதல் முதலீட்டாளர்கள் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் சந்தையில் வெளியாகியுள்ளன.

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் தன்னுடைய 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ எனப்படும் முதன்மை பங்கு வெளியீடு முறையில் பங்குச்சந்தையில் வெளியிட்டு சுமார் 20,500 கோடி ரூபாயைத் திரட்ட உள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை இந்த நிறுவன பங்குகளை வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 22,13,74,920 பங்குகள் வெளியிடப்பட உள்ளன. அதில் 15,81,869 பங்குகள் எல் ஐ சி நிறுவன ஊழியர்களுக்கும், 2,21,38,492 பங்குகள் எல் ஐ சி நிறுவன பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த பங்கு வெளியீட்டில் 50 சதவீத பங்குகளை நிறுவன முதலீட்டாளர்கள் பெறுவர். மீதமுள்ள 50 சதவீத பங்குகளில் 35 சதவீத பங்குகளை சிறு முதலீட்டாளர்கள் மற்றும் 15 சதவீத பங்குகளை நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பெறுவர்.

Share Market
Share MarketTwitter

எல் ஐ சி பங்கு வெளியீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

எல் ஐ சி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 902 ரூபாய் முதல் 949 ரூபாயாக இருக்கும்.

ஏற்கனவே எல் ஐ சி நிறுவனத்தின் காப்பீடு பாலிசிகளை வாங்கியிருக்கும் பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 60 ரூபாய் தள்ளுபடியும், சிறு முதலீட்டாளர்கள் மற்றும் எல் ஐ சி நிறுவன ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு 45 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும்.

எல் ஐ சி நிறுவன பங்குகளை வாங்க விரும்புவோர் குறைந்தபட்சம் ஒரு லாட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு லாட் என்பது 15 பங்குகளைக் கொண்டது. ஒரு லாட்டின் அதிகபட்ச விலை 14,235 ரூபாய்.

LIC
Xiaomi : ஏன் சியோமியின் 5,500 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத் துறை?

மே 17ஆம் தேதி எல் ஐ சி நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம்.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பீடு இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் முதன்மை பங்கு வெளியீடு முறையில் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயை திரட்டியது. அதற்கு முன் 2010ஆம் ஆண்டு கோல் இந்தியா என்கிற நிறுவனம் 15 ஆயிரத்து 200 கோடி ரூபாய் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

LIC
Qimat Rai Gupta : பள்ளி ஆசிரியர் டூ பில்லியனர் - கிமத் ராய் குப்தாவின் வியக்க வைக்கும் கதை

கடந்த பல வாரங்களாக எல் ஐ சி நிறுவனப் பங்கு வெளியீடு தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தொடக்கத்தில் ஐந்து சதவீத பங்குகளை விற்பதாக இருந்த நிறுவனம் சமீபத்தில் தான் 3.5 சதவீதமாக தன் பங்கு வெளியீட்டைக் குறைத்துக் கொண்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

LIC
டெல்லி விமான நிலையம் : துபாயை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஓர் சாதனை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com