உலகப் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனம், பல பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
உலகின் நம்பர் 1 பணக்காரர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கவிருப்பதாகக் கூறியதிலிருந்து, டிவிட்டர் நிறுவனம் புதிதாக ஆட்களை பணிக்கு எடுப்பதை நிறுத்திக் கொண்டது.
பொதுவாகவே இப்படி பெரிய நிறுவனங்கள் கையகப்படுத்தப்படும் போது, வேலைக்கு ஆட்களை எடுப்பது கணிசமாகக் குறைவதும், நிறுத்தி வைக்கப்படுவதும் இயல்பே. அது போக டிவிட்டரின் நிதி நிலைகளும் நிலையாக இல்லாதது, புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை டிவிட்டர் நிறுவனம் தன் மனித வள மேம்பாட்டுத் துறையில் சுமார் 30 சதவீதம் பேரை வேலையைவிட்டு நீக்கி இருப்பதாக டெக் கிரன்ச் என்கிற தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 பேராக இருக்கலாம் என வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கூறப்பட்டுள்ளது.
வேலையை விட்டு நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை உட்பட அனைத்தும் முறையாகக் கொடுக்கப்படும் என டிவிட்டர் நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு பணம், என்ன பெயரில் கொடுக்கப்படும் என்கிற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
இப்போது வரை, அதிமுக்கிய பொறுப்புகள் மற்றும் பதவிகளுக்கு மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். புதிய பதவிகள் உருவாக்கப்படுவது மற்றும் காலி இடங்கள் நிரப்பப்படுவது எல்லாம் டிவிட்டரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான போரைத் தொடர்ந்து ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமே தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான மென்பொருள் பணியாளர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மெடா, ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதள ஜாம்பவான் நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைவான ஆட்களோடு அதிகப்படியான பணியைச் செய்ய உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள் என மெடா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தன் ஊழியர்கள் மத்தியில் பேசியது இங்கு நினைவுகூரத்தக்கது.
மெடா நிறுவனம் தன்னுடைய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக நெருக்கடியான சூழலைச் சந்தித்து வருவதாகவும் மார்க் கூறினார். மெடா நிறுவனம் புதிதாக பணிக்கு எடுக்கக் கூடியவர்கள் தொடர்பான இலக்குகளைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது.
2022ஆம் ஆண்டில், உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கலாம் என தன் கணிப்பைக் குறைத்துக் கொண்டுள்ளது சர்வதேச பன்னாட்டு நிதியம் என்றழைக்கப்படும் ஐஎம்எஃப். உலக வங்கி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) என பல்வேறு பொருளாதார அமைப்புகளும் பன்னாட்டு நிதியத்தின் கணிப்பை ஆமோதிக்கின்றன.
இது போக ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற உலகின் பல முக்கிய நாடுகள், அடுத்த 12 மாதங்களுக்குள் ரெசசனை எதிர்கொள்ளலாம் என நோமுரா என்கிற நிதி நிறுவனம் கணித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust