காஃபி ஷாப்பில் ஆர்டர் எடுத்த டிவிட்டர் சிஇஓ பராக் - வைரல் புகைப்படங்கள்

ஒரு காஃபி ஷாப் ஊழியர் போல் பராக் ஆர்டர் கேட்கும் வகையிலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Parag Agrawal
Parag Agrawal Twitter
Published on

உலகின் சமூக வலைத்தளங்களின் ஜாம்பவானான டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அகர்வால் பணியாற்றி வருகிறார்.

38 வயதே ஆன இவர் இளம் சிஇஓ-களில் ஒருவர். இவர் ஐஐடி பாம்பேவின் முன்னாள் மாணவர்.

அங்கு இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பி‌எச்டி முடித்தார்.

 Twitter CEO - Parag Agrawal
Twitter CEO - Parag AgrawalTwitter

ஸ்டான்போர்டில் படிக்கும்போதே மைக்ரோசாஃப்ட், யாகூ மற்றும் ஏடி&டி லேப்ஸ் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

2011-ல் டிவிட்டரில் சாதாரண மென்பொறியாளராக இணைந்தார் பராக். தனது திறனாலும் புதிய யுக்திகளாலும் டிவிட்டரில் பல முன்னெடுப்புகளை எடுத்து வெற்றிகண்ட பராக் கடந்த ஆண்டு முதல் சிஇஓ பதவியிலிருந்து வருகிறார்.

இதற்கிடையில் பராக் அகர்வால் தங்கள் நிறுவனத்தின் இங்கிலாந்து அலுவலகத்துக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார்.

இந்நிலையில், ஒரு காஃபி ஷாப் ஊழியர் போல் பராக் ஆர்டர் கேட்கும் வகையிலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பராக் அகர்வாலுடன் டிவிட்டர் நிறுவனத்தின் மற்றொரு உயர்மட்ட நிர்வாகியும், நிதி அலுவலருமான நெட் சேகல் அங்கிருந்தவர்களுக்கு பிஸ்கெட்டுகள் பரிமாறும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Parag Agrawal
Twitter CEO பராக் முதல் ISRO சிவன் வரை; IIT -ல் படித்து உச்சத்தை எட்டிய 10 பேர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com