Priyank Sukhija: B.Com டிகிரியை பாதியில் நிறுத்தியவர் 100 கோடி சம்பாதித்தது எப்படி?

படிக்க சிரமப்பட்டதால் கல்லூரி செல்வதை பாதியில் நிறுத்திய சுகிஜா வாழ்க்கையில் தோற்றுவிடவில்லை. 19 வயதில் முதல் நிறுவனத்தை நிறுவிய இவர், இப்போது 30 ரெஸ்டரண்ட்களுக்கு உரிமையாளராக இருக்கிறார்.
Priyank Sukhija: B.Com டிகிரியை பாதியில் நிறுத்தியவர் 100 கோடி சம்பாதித்தது எப்படி?
Priyank Sukhija: B.Com டிகிரியை பாதியில் நிறுத்தியவர் 100 கோடி சம்பாதித்தது எப்படி?Twitter

ரெஸ்டாரண்ட் அல்லது ஹோட்டல்களில் பணியாற்றத் தேவையான பயிற்சிகளைப் பெற வேண்டியது அவசியம். அதற்கெனத் தனியான படிப்புகளும் கூட வந்துவிட்டன. 

ஆனால் இந்த படிப்புகளில் சேராதது பிரியங்க் வெற்றியைத் தவிர்க்கவில்லை. படிப்பு வராத டீனேஜராக இருந்து கல்லூரியை விட்டு வெளியேறியவர் ஒரு தொழில்முனைவோராக வெற்றிபெற்றார்.

இன்று 30 ரெஸ்டாரண்ட்கள் மற்றும் 15 பிராண்டுகளுக்கு உரிமையாளராக இருக்கும் இவரது வாழ்க்கையை ஒரு இன்ஸ்பிரேஷன் எனக் கூறாமல் இருக்க முடியாது!

இவர் வக்கீல்கள் குடும்பத்தில் பிறந்தார். 1997ம் ஆண்டு தனது 19 வயதில் தொழில்முனைவோராக உருவானார். அப்பாவின் முதலீட்டுடன் முதலாமாண்டு கல்லூரிப்படிக்கும் போது bowling alley ஒன்றை நடத்தினார். அது ஒரு பேஸ்மண்டில் அமைந்திருந்தது.

ஆனால் அப்போதுதான் டெல்லியில் உப்பார் சினிமா விபத்து நடந்தது. அந்த தீவிபத்தில் 59 பேர் மரணித்தனர். அதனால் பேஸ்மண்ட் ஆக்டிவிட்டிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்தது. பிரியங்க் சுகிஜாவின் முதல் தொழில் இப்படியாக ஃபெயிலியரானது. 

சுகிஜா dyslexia-வால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரால் படிக்க முடியவில்லை. அவருக்கு வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருந்தது எனினும் தனக்கு பிடித்த விஷயங்களை நோக்கி நகர்ந்தார். 

1999ம் ஆண்டு அவர்  Lazeez Affaire என்ற உணவகத்தைத் தொடங்கினார். விரைவிலேயே அது டெல்லி முழுவதும் பரவலாக அறியப்படக் கூடிய பிராண்டாக வளர்ந்தது.

Priyank Sukhija: B.Com டிகிரியை பாதியில் நிறுத்தியவர் 100 கோடி சம்பாதித்தது எப்படி?
மும்பை டு பெங்களூரு: இந்தியாவின் 5 பணக்கார நகரங்கள் இவைதான்- சென்னைக்கு இடமிருக்கிறதா?

ஒரு கடையுடன் அவரது வெற்றியைக் குறுக்கிக்கொள்ள சுகிஜா விரும்பவில்லை. தொடர்ந்து பல உணவகங்களைத் தொடங்கினார். 

இப்போது சென்னை, ஹைத்ராபாத் புனே போன்ற நகரங்களில் 30 ரெஸ்டாரண்ட்களை வைத்துள்ளார்.  Lord of the Drinks, The Flying Saucer Cafe, Teddy Boy and Noche ஆகியவை இவர் உருவாக்கிய பிராண்ட்கள்.

நிதியாண்டு 2023ல் இவரது நிறுவனம் 300 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுத்தரும் என எதிர்பார்ப்பதாக தொழிலதிபர் சுகிஜா தெரிவித்துள்ளார்.

Priyank Sukhija: B.Com டிகிரியை பாதியில் நிறுத்தியவர் 100 கோடி சம்பாதித்தது எப்படி?
சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com