Moderna : ஊழியர்களை விட 12,000 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் CEO - வலுக்கும் கண்டனம்!

”இரண்டாம் உலகப்போரின் போது அதிக பணம் சம்பாதித்தவர்களைப் போல இவர்கள் இந்த காலத்து போர்களில் பணம் சம்பாதிக்கின்றனர். இவர்களின் பேராசைக்கு எல்லையே இல்லை”
Moderna : ஊழியர்களை விட 12,000 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் CEO - வலுக்கும் கண்டனம்!
Moderna : ஊழியர்களை விட 12,000 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் CEO - வலுக்கும் கண்டனம்!Twitter
Published on

மாடெர்னா நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் பான்செல் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 393 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார். இதில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரது சம்பளம். 

2021ம் ஆண்டுக்குப் பிறகு தனது சம்பளத்தை 50% உயர்த்தியுள்ளார் ஸ்டீபன். இந்த சம்பளத் தொகையானது அவர் நிறுவனத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட 12,000 மடங்கு அதிகமென்பது தெரியவந்துள்ளது. 

மாடெர்னா ஒரு மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமாகும். ஸ்டீபனின் சம்பள உயர்வுக்கு பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

தி பீபிள்’ஸ் வாக்சின் அலையன்ஸ் என்ற அமைப்பு கோவிட் காலத்தில் மார்டெனா நிறுவனம் அமெரிக்க மக்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர்கள் பணத்தை உறுஞ்சியதாக குற்றம் சாட்டியிருக்கிறது. 

பீபிள்’ஸ் வாக்சின் கூட்டமைப்பு தலைவரான மோகா கமல்-யானி, “கடந்த ஆண்டு மாடெர்னா சிஇஓ கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் அடிப்படை சம்பளத்தை விட 12,000 மடங்கு அதிகம்.” எனக் கூறி விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் மாடர்னா நிறுவனத்தின் சிஇஓ-வான பான்செல் கோவிட் தடுப்பு மருந்துகளின் விலையை கூட்ட உள்ளதாகவும் கூறியுள்ளார். 

Moderna : ஊழியர்களை விட 12,000 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் CEO - வலுக்கும் கண்டனம்!
Karl Marx : சமத்துவக் கொள்கையின் பிதாமகனாக வாழ்ந்த கார்ல் மார்க்ஸின் பொன்மொழிகள்

”இரண்டாம் உலகப்போரின் போது அதிக பணம் சம்பாதித்தவர்களைப் போல இவர்கள் இந்த காலத்து போர்களில் பணம் சம்பாதிக்கின்றனர். இவர்களின் பேராசைக்கு எல்லையே இல்லை” என மோகா தெரிவித்துள்ளார்.

சிஇஓ-வின் வருமான அதிகரிப்பை மார்டனா நிறுவனம் நியாப்படுத்தி பேசிவருகிறது.

Moderna : ஊழியர்களை விட 12,000 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் CEO - வலுக்கும் கண்டனம்!
சுந்தர் பிச்சை : கூகுள் CEO வாழும் சொகுசு வீடு குறித்து தெரியுமா? மதிப்பு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com