சுந்தர் பிச்சை : கூகுள் CEO வாழும் சொகுசு வீடு குறித்து தெரியுமா? மதிப்பு என்ன?

மலை உச்சியில் 31.17 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து அமைந்துள்ளது. இதனை சுற்றுலாத்தலமாகவும் கருதலாம். இந்த வீட்டின் உள்வடிவமைப்பு செலவு மட்டுமே ரூ. 49 கோடிக்கு செய்யப்பட்டதாம்.
சுந்தர் பிச்சை : கூகுள் CEO வாழும் சொகுசு வீடு குறித்து தெரியுமா? - மதிப்பு என்ன?
சுந்தர் பிச்சை : கூகுள் CEO வாழும் சொகுசு வீடு குறித்து தெரியுமா? - மதிப்பு என்ன?Twitter
Published on

Google-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக் குறித்து அறிமுகப்படுத்தத் தேவையில்லை.

தமிழகத்தில் பிறந்து தனது கடின உழைப்பாலும் படிப்பாலும் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுளுக்கு தலைமைத்தாங்கி வருகிறார்.

சுந்தர்பிச்சையின் சாதனைகளை அல்லாமல் அதன் விளைவாக அவர் சேர்த்திருக்கும் செல்வம் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

குறிப்பாக அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள அவரது வீடு. சாண்டா கிளாரா பகுதியில் இருக்கும் அந்த வீட்டுக்கு லாஸ் அல்டோஸ் என்று பெயர்.

மலை உச்சியில் 31.17 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து அமைந்துள்ளது. நம் வீடுகளைப் போல அல்ல, இதனை தினமும் வசிக்கும் சுற்றுலாத்தலமாகவும் கருதலாம். அந்த அளவு ரம்மியமான காட்சிகள் சூழ அமைந்திருக்கிறது.

இந்த வீட்டை 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலைக்கு வாங்கினார் சுந்தர் பிச்சை. இதன் இந்திய மதிப்பு 2022 நிலவரப்படி 10,215 கோடி ரூபாய்.

இந்த வீட்டின் உள்கட்டமைப்பு முழுவதும் சுந்தர் பிச்சையின் மனைவி விருப்பப்படியே வடிவமைக்கப்பட்டதாம். உள்வடிவமைப்பு செலவு மட்டுமே ரூ.49 கோடி செய்யப்பட்டதாம்.

ஒரு குளம், ஒரு இன்ஃபினிடி குளம், ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு ஸ்பா, ஒரு மது பாதாள அறை, சோலார் பேனல்கள், லிஃப்ட் மற்றும் வேலையாட்கள் குடியிருப்புகள் போன்ற பல்வேறு நவீன மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் பல இருக்கின்றன.

சுந்தர் பிச்சை : கூகுள் CEO வாழும் சொகுசு வீடு குறித்து தெரியுமா? - மதிப்பு என்ன?
Google: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள்? CEO சுந்தர் பிச்சை விளக்கம்

ஐஐடியில் படித்த சுந்தர் பிச்சை, கல்லூரி தோழியான அஞ்சலி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பல புதுமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி பல இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக திகழ்கிறார் சுந்தர் பிச்சை.

அவருக்கு இருக்கும் பல சொத்துகளில் மிகவும் பிரதானமானது கலிஃபோர்னியா வீடுதானாம்!

சுந்தர் பிச்சை : கூகுள் CEO வாழும் சொகுசு வீடு குறித்து தெரியுமா? - மதிப்பு என்ன?
கூகுள் CEO சுந்தர் பிச்சை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com