Netflix : 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்ஃபிளிக்ஸ் - காரணம் என்ன?

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து தனது சந்தாதாரர்களை இழந்து வருவதால் பங்குகள் மதிப்பு 20% குறைந்துள்ளது.
Netflix
NetflixTwitter
Published on

முன்பு ஒரு காலத்தில் உலகின் அதிகம் பயனர்களைக் கொண்ட வீடியோ ஸ்டிரீமிங் தளமாக நெட்ஃபிளிக்ஸ் திகழ்ந்தது. பிரத்தியேக தொடர்கள், திரைப்படங்களை மக்களுக்கு வழங்கியது தான் இதற்கு முக்கிய காரணம்.

அதன் பின்னர் போட்டி நிறுவனங்களாக அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்றவை இந்த துறைக்குள் காலடி எடுத்து வைத்து, டஃப் கொடுக்க ஆரம்பித்தது.

குறைந்த விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து, பயனர்களை தங்கள் வசம் திருப்ப முயன்றது.

அதற்கேற்ப நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் விலை மாற்றங்கள் கொண்டு வந்தது. இதனால் நெட்ஃபிளிக்ஸ் , தாங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்ததாகச் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதன் மூலம் தெரிய வந்தது.

Netflix
சர்வதேச அளவில் அசத்தும் 11 ஐஐடி மாணவர்கள் : யார் யார் தெரியுமா.?
Netflix
NetflixTwitter

நிபுணர்கள் கருத்து

சந்தா திட்டங்களின் விலையை நெட்ஃபிளிக்ஸ் உயர்த்தியதே இந்த இழப்பிற்கு முக்கிய காரணம் என்றும், உலகளவில் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் நெட்ஃபிளிக்ஸ் எடுத்த இந்த முடிவு தவறானது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யா சந்தாதாரர்கள்

ரஷ்யாவிலிருந்து கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இழந்தது. போருக்கு இடையில் ரஷ்யாவில் வணிகத்தின் இடைநிறுத்தம் காரணமாக மட்டுமே, இதுவரை சுமார் 700,000 சந்தாதாரர்களை நிறுவனம் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Netflix
NetflixTwitter

நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் வீழ்ச்சி

தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வருவதால் சந்தை வர்த்தகத்தில் நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் சுமார் 25 சதவீதம் சரிந்து $262 ஆக உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Netflix
பீகார் : கல்லூரி வாசலில் டீ விற்கும் பட்டதாரி இளம்பெண் பிரியங்கா

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com