NFT : 500 கோடிக்கு விற்ற ஓர் ஓவியம் - வியப்பூட்டும் ஒரு டிஜிட்டல் வணிகம்

இந்த 2022ஆம் ஆண்டில் திடீரென NFT குறித்து அதிகம் விவாதிக்கப் படுகிறது. கலை முதல் இசை வரை, டாகோஸ் முதல் டாய்லெட் பேப்பர் வரை இந்த டிஜிட்டல் சொத்து பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நெதர்லாந்து டுலிப் மலர்களைப் போல பல பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்படுகின்றன.
Bitcoin
Bitcoin NewsSense
Published on

மனித குலத்துக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை எல்லாம் தாண்டி, பணம் ஆட்டுவிக்கும் ஆயுதமாக மாறி பன்னெடுங்காலமாகிவிட்டது. பணத்துக்காக மட்டுமே பல போர்கள் நடத்தப்பட்ட கதைகளை எல்லாம் நாம் படித்திருக்கிறோம்.

இப்போது சமீப காலமாக என் எஃப் டி (NFT) என ஒன்று பிரபலமடைந்து வருகிறது. ஒரே ஒரு நல்ல என் எஃப் டியில் பல கோடி பார்த்துவிடலாம் என்கிறார்கள்.

NFT -யின் விரிவாக்கம் ​​non-fungible token.

இந்த 2022ஆம் ஆண்டில் திடீரென NFT குறித்து அதிகம் விவாதிக்கப் படுகிறது. கலை முதல் இசை வரை, டாகோஸ் முதல் டாய்லெட் பேப்பர் வரை இந்த டிஜிட்டல் சொத்து பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நெதர்லாந்து டுலிப் மலர்களைப் போல பல பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்படுகின்றன.

உண்மையிலேயே NFTக்கள் அத்தனை மதிப்புமிக்கவைகளா அல்லது வெற்று பேச்சு தானா. டாட் காம் பூம் போல சில நிபுணர்கள் இது காலப்போக்கில் கடந்து செல்லப்பட வேண்டிய ஒரு சாதாரண விஷயம்தான் என்கிறார்கள். மற்றவர்களோ, என் எஃப் டிக்கள் இனி சந்தைவெளியில் நிரந்தரமாக நிலைக்கக் கூடியவை, அது மக்கள் முதலீடு செய்யும் முறையையே மாற்றக்கூடியவை என்கிறார்கள்.

NewsSense

NFT என்றால் என்ன?

எதார்த்த உலகத்தில் இருக்கும் கலை, இசை, விளையாட்டு, காணொளி போன்றவைகளைப் பிரதிபலிக்கும் ஒரு டிஜிட்டல் சொத்தே என் எஃப் டி. அதை கிரிப்டோகரன்சிகளைக் கொண்டு இணைய தளத்தில் வாங்கவும் விற்கவும் முடியும். கிரிப்டோகரன்சியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமே இதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

2014ஆம் ஆண்டு முதல் என் எஃப் டிக்கள் உலகில் பரவலாகக் காணப்படுகின்றன. இந்த டிஜிட்டல் கலைப்படைப்புகளை டிஜிட்டல் சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான ஆர்வம் தற்போது அதிகரித்து வருவதால், அது பிரபலமடைந்து வருகிறது. கடந்த நவம்பர் 2017 முதல் 174 மில்லியன் டாலர் இதில் செலவிடப்பட்டிருக்கிறது.

பொதுவாக என் எஃப் டிக்கள் குறைந்த எண்ணிக்கை கொண்டதாக, அதை அடையாளம் காணும் கோட்களோடு இருக்கும். சுருக்கமாக, என் எஃப் டிக்கள் டிஜிட்டல் உலகில் ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கும் என்கிறார் எல்லோ அம்பிரல்லா வெஞ்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அரி யூ.

பொதுவாக டிஜிட்டலில் உருவாக்கப்படும் பெரும்பாலான பொருட்களின் விநியோகம் தாராளமாக அளவற்றதாக இருக்கும். அதற்கு நேர் மாறாக இருக்கிறது என் எஃப் டி.

ஒரு பொருளுக்கான தேவை இருக்கிறது என்றால், அதன் விநியோகம் குறையும் போது அதன் விலை அதிகரிக்கும் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் என் எஃப் டிக்களின் விலை இயங்குகின்றன.

ஆரம்ப நாட்களில் பல என் எஃப் டிக்கள், ஏற்கனவே டிஜிட்டலில் ஏதோ ஒரு வடிவத்தில் உருவாக்கப்பட்ட படைப்புகளாக இருந்தன. உதாரணத்துக்கு என்பிஏ கூடைப்பந்து விளையாட்டின் காணொளிகள் அல்லது டிஜிட்டல் கலை படைப்புகளின் பாதுகாக்கப்பட்ட பதிப்புகள் என சில வடிவங்களில் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உலவிக் கொண்டிருந்தன.

Bitcoin
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்
NewsSense

500 கோடிக்கு விற்ற ஓவியம்

"பீப்பிள்" என்று அழைக்கப்படும் பிரபல டிஜிட்டல் கலைஞர் மைக் விங்கிள்மேன், 2021 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான என் எஃப் டி-யை உருவாக்கினார். அவரது 'எவரிடேஸ்; தி பர்ஸ்ட் 5000 டேஸ்' என்கிற டிஜிட்டல் படைப்பை கிறிஸ்டிஸ் ஏல நிறுவனத்தின் வழி $69.3 மில்லியனுக்கு விற்றார் அதாவது தோரயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 5,34,32,12,000.

யார் வேண்டுமானாலும் அந்த தனிப்பட்ட படங்களையோ அல்லது பல படங்களின் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட தொகுப்பு படங்களையோ இணையத்தில் இலவசமாகப் பார்க்கலாம். அப்படி என்றால், ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளக் கூடிய, டவுன்லோட் செய்து கொள்ளக்கூடிய ஒரு விஷயத்திற்காக மக்கள் ஏன் மில்லியன் கணக்கில் செலவழிக்கிறார்கள்?

காரணம் எளிமையானது. என் எஃப் டி-யைப் பொறுத்தவரை அசல் படைப்புகளை ஒருவர் சொந்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது. மேலும் உரிமையாளரை உறுதி செய்யும் வகையில் என் எஃப் டிக்களில் பாதுகாப்பு வசதிகள் உள்ளன. என் எஃப் டிக்களை இத்தனை விலை கொடுத்து வாங்குபவர்கள், அப்படைப்பை விட, அந்த உரிமைகளைத் தான் பெரிதும் மதிக்கிறார்கள்.

Bitcoin
செளதி அரேபியா வரலாறு : அந்நாட்டு அரச குடும்பம் எங்கெல்லாம் முதலீடு செய்து இருக்கிறது? | 3
NewsSense

Crypto vs NFT

கிரிப்டோகரன்சிக்கும், என் எஃப் டிக்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

என் எஃப் டி என்றால் நான் ஃபங்கிபில் டோக்கன் என்பார்கள். இதைக் கட்டமைக்க கிரிப்டோகரன்சியில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது.

அன்றாடம் பயன்படுத்தும் ரொக்கப் பணம், கிரிப்டோகரன்சி போன்றவைகளை பரிமாற்றம் செய்யலாம். ஒரு பிட்காயினைக் கொடுத்து அதற்கு இணையான மதிப்பு கொண்ட பொருட்களை வாங்கலாம்.

ஆனால் என் எஃப் டிக்கள் இதிலிருந்து வேறுபட்டவை. ஒவ்வொரு என் எஃப் டியிலும் ஒரு டிஜிட்டல் கையெழுத்து இருக்கும். எனவே என் எஃப் டிக்களை பரிமாற்றம் செய்ய முடியாது. ஒரு என் பி ஏ கூடைப்பந்தாட்ட என் எஃப் டியை, எவரிடேஸ் என்கிற என் எஃப் டிக்கு பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது. இரண்டுமே பிரபலமான என் எஃப் டிக்கள் தான், ஆனால் அதை பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது.

Pixabay

என் எஃப் டிக்கள் எப்படி செயல்படுகின்றன?

என் எஃப் டிக்கள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. பிளாக் செயின்கள் ஒரு பொது பதிவேடு போன்றது. அதில் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதே தான் கிரிப்டோகரன்சிகளில் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக என் எஃப் டிக்கள் எதிரியம் பிளாக்செயினில் வைக்கப்பட்டுள்ளன. மற்ற பிளாக்செயின்களிலும் அது செயல்படும்.

கிராஃபிக் கலைப் படைப்புகள், ஜிஃப்கள், காணொளிகள் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகள் சேகரித்து வைக்கப்படக் கூடிய கலைப்படைப்புகள் வெர்ச்சுவல் அவதாரங்கள், வீடியோ கேம் ஸ்கின்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்னீக்கர் காலணிகள்

இசைப் படைப்புகள்.... போன்ற தொட்டு உணரக் கூடிய மற்றும் தொட்டு உணர முடியாதவைகளை பிரதிபலிக்கும் விதத்தில் என் எஃப் டிக்கள் உருவாக்கப்படுகின்றன.

அவ்வளவு ஏன் ட்விட்டர் பதிவுகள் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ட்விட்டர் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜாக் டார்ஸி தன் முதல் ட்விட்டை NFTஆக 2.9 மில்லியன் டாலருக்கு மேல் விற்றார்.

என் எஃப் டிக்கள் டிஜிட்டலில் மட்டுமே கிடைப்பவை. எனவே எதார்த்தத்தில் ஒரு பொருளை வாங்கினால், தொட்டுணரக் கூடிய விதத்தில் நமக்கு கிடைக்கும். ஒரு என் எஃப் டியை வாங்கினால் அது ஒரு டிஜிட்டல் ஃபைல் வடிவில் கிடைக்கும். அதோடு பிரத்யேக உரிமையாளர் உரிமையும் கிடைக்கும்.

என் எஃப் டிக்களைப் பொறுத்தவரை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருக்க முடியும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் என் எஃப் டிக்களின் உரிமையாளர்களை எளிதில் சரி பார்க்கலாம். அதோடு உரிமையாளர்களுக்கு மத்தியில் டோக்கன் பரிமாற்றங்களும் எளிதாகின்றன.

என் எஃப் டியை உருவாக்குபவர்கள், சில பிரத்யேக விவரங்களை என் எஃப் டி மெடா தரவுகளில் சேமித்து வைக்கலாம். உதாரணமாக டிஜிட்டல் படைப்பை உருவாக்கும் கலைஞர் ஒருவர், தன் கையெழுத்ததை படைப்போடு இணைக்கலாம். அது படைப்பில் கலைஞர் கையெழுத்திட்டது போலாகிவிடும்.

Bitcoin
கௌதம் அதானி வெற்றிக் கதை : கடத்தப்பட்ட பணையக் கைதி அம்பானியை முந்திய வரலாறு
NFT
NFTNewsSense

NFT எதற்கு பயன்படுத்தப்படுகின்றன?


பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் என் எஃப் டிக்கள் கலைஞர்கள் மற்றும் அவர்களது படைப்புகளை பணமாக்க ஒரு அரிய வாய்ப்பைத் தருகிறது.

உதாரணமாக கலைஞர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்த அரங்குகளையோ, தங்கள் படைப்புகளை விற்று பணமாக்க ஏல நிறுவனங்களையோ நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு பதிலாக கலைஞர் தன் படைப்புகளை ஒரு என் எஃப் டியாக நேரடியாக வாடிக்கையாளரிடம் விற்றுவிடலாம். அதில் கிடைக்கும் கணிசமான லாபத்தையும் அவர்களே வைத்துக் கொள்ளலாம்.

மேலும் இதில் ராயல்டி விவரங்களையும் புரோகிராம் செய்து வைக்கலாம். அவர்களுடைய கலைப்படைப்புகளை விற்கும் போதெல்லாம், விற்பனைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கலைஞர்களுக்கு ராயல்டியாக கிடைக்கும். பொதுவாக ஒரு முறை ஒரு படைப்பை விற்றுவிட்டால் அதன் பிறகு அதிலிருந்து கலைஞர்களுக்கு பணம் கிடைக்காது. ஆனால் மேலே விளக்கப்பட்ட ராயல்டி இணைப்பு முறையால், என் எஃப்டியில் இந்த நிலை மாறியுள்ளது.

என் எஃப் டியில் காசு பார்க்க, கலை மட்டுமே ஒரே வழியல்ல. நன்கொடை வழங்க, சார்மின் மற்றும் டாகோ பெல் போன்ற நிறுவனங்கள் தங்களின் தீம் பொருந்திய என் எஃப் டிக்களை வெளியிட்டு காசு பார்த்தன. சார்மின் நிறுவனம் என் எஃப் டி பி (நான் ஃபங்கிபில் டாய்லெட் பேப்பர்) மற்றும் டாகோ பெல் நிறுவனத்தின் என் எஃப் டி கலை படைப்புகள் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. அதிகபட்சமாக 1.5 WETH-க்கு ஏலம் கோரப்பட்டது. இது சுமார் $3,750 மதிப்பு கொண்டது.

நைன் கேட் என்கிற 2011ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த பூனையின் ஜிஃப் கடந்த பிப்ரவரி மாதம் 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனையானது. கடந்த மார்ச் மாத இறுதியில் என்பிஏ கூடைப்பந்தாட்ட டாப் ஷாட் விற்பனை 500 மில்லியன் டாலருக்கு மேல் தொட்டுள்ளது. லெப்ரான் ஜேம்ஸின் ஒற்றை ஹைலைட் காட்சி என் எஃப் டி மட்டும் 2 லட்சம் டாலருக்கு மேல் ஈட்டியுள்ளன.

ஸ்னோப் டாக், லிண்ட்சே லோஹன் ஆகியோர் கூட என் எஃப் டிக்களில் குதித்து மல்லுகட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரத்யேக நினைவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Bitcoin
அம்பானி, அதானி மற்றும் ஒரு தமிழர் : இவர்கள்தான் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்

NFT எப்படி வாங்குவது?

நீங்கள் உங்களுக்கென தனியாக சொந்த என் எஃப் டிக்களை தொடங்க ஆர்வமாக இருந்தால், நீங்கள் சில முக்கிய விஷயங்களைப் பெற வேண்டும்:

முதலில், நீங்கள் என் எஃப் டிக்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகளை சேமிக்க அனுமதிக்கும் டிஜிட்டல் வாலட்டைப் பெற வேண்டும். உங்கள் என் எஃப் டி வழங்குநர் என்ன மாதிரியான நாணயங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதைப் பொறுத்து, ஈதர் போன்ற சில கிரிப்டோகரன்சிகளை நீங்கள் வாங்க வேண்டியிருக்கும்.

நீங்கள் இப்போது Coinbase, Kraken, eToro, PayPal, Robinhood போன்ற தளங்களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகளை வாங்கலாம். அதன் பிறகு, நீங்கள் அதை பரிமாற்ற தளத்திலிருந்து உங்களுக்கு விருப்பமான வேலட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். கிரிப்டோகரன்சிகளை வாங்கும் போது அதற்கான கட்டணங்களையும் நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலான பரிமாற்ற தளங்கள் குறைந்தபடம் 1%-த்தையாவது கட்டணமாக வசூலிக்கும்.

Bitcoin
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

பிரபல என் எஃப் டி சந்தைகள்

மேலே கூறியது போல வேலட்டையும் கிரிப்டோகரன்சியையும் தயார் செய்த பிறகு, என் எஃப் டிக்களை வாங்க வேண்டியது தான்.

OpenSea.io

Rarible

Foundation போன்ற தளங்களில் என் எஃப் டிக்களை பார்த்து மதிப்பிட்டு வாங்கத் தொடங்கலாம்.

இப்படி ஆயிரக் கணக்கிலான தளங்கள் என் எஃப் டி படைப்பாளிகள் மற்றும் என் எஃப் டிக்களைச் சேகரிக்கும் நபர்களை இணைக்கின்றன. ஒரு என் எஃப் டியை வாங்குவதற்கு முன் அது குறித்து தீர விசாரித்து விட்டு வாங்குவது நல்லது. ஒருவரின் படைப்பை, அவரது அனுமதியின்றி போலி நபர்களால் விற்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.

பல தளங்களில் என் எஃப் டிக்களை பட்டியலிடுவோர் குறித்த விஷயங்களை பதிவிட்டு சரிபார்க்க வேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை. என் எஃப் டிக்களை வாங்குவோர் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.

நீங்கள் என் எஃப் டியை வாங்கலாமா?

உங்களால் என் எஃப் டிக்களை வாங்க முடியும் என்பதால் மட்டும் நீங்கள் அதை வாங்கலாமா?

"என் எஃப் டிக்கள் அதிக ரிஸ்க் நிறைந்தவை, அதன் எதிர்காலம் உறுதியற்றதாக இருக்கிறது. என் எஃப் டிக்கள் எப்படி செயல்படும் என்பதைக் குறித்து மதிப்பிட போதுமான வரலாறு இல்லை" என்கிறார் யூ. "என் எஃப் டிக்கள் புதியவைகள் என்பதால், ஒரு சிறு தொகையை வேண்டுமானால் முதலீடு செய்து பார்க்கலாம்" என்கிறார் அவர்.

சுருக்கமாக, என் எஃப் டியில் முதலீடு செய்வது என்பது முற்றிலும் தனிப்பட்ட முடிவு. உங்களிடம் அதிக பணம் இருக்கிறது என்றால், அது குறித்து ஆலோசிக்கலாம்.

மற்றவர்கள் ஒரு என் எஃப் டிக்கு எவ்வளவு பணம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து தான், அதன் மதிப்பு கணக்கிடப்படுகிறது. எனவே ஒரு என் எஃப் டியின் மதிப்பு சந்தையின் அடிப்படை அல்லது தொழில்நுட்ப அல்லது பொருளாதார காரணிகளை விட, அதன் தேவை தான் தீர்மானிக்கும்.

அதாவது, நீங்கள் வாங்கும் என் எஃப் டிக்களுக்கு போதிய டிமாண்ட் இல்லை எனில், நீங்கள் வாங்கிய விலையை விட குறைந்த விலையில் கூட விற்க வேண்டி வரலாம் அல்லது விற்கவே முடியாமலும் கூட போகலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com