சக்திகாந்த தாஸ் : "பணவீக்கம் அதிகரிப்பு" ரிசர்வ் வங்கி கவர்னர் கவலை

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்திலும் மாற்றமிருக்காது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Shaktikanta Das
Shaktikanta Dastwitter
Published on

ரிசர்வ் வங்கியிடம் மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டிதான் ரெப்போ வட்டி விகிதம். ரெப்போ வட்டி விகிதம் ஏற்ற இறக்கத்திற்கேஏற்ப சாதாரண மக்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் மாறுபடும். அதே போல, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும் தொகைக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டிதான் ரிவர்ஸ் ரெப்போ.

இந்த வட்டி விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைப்பார்கள். அதனால் மக்களிடம் பணப்புழக்கம் குறைய வாய்ப்பு ஏற்படும்.

RBI
RBITwitter
Shaktikanta Das
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 4% ஆகவே தொடரும் என்றார். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்திலும் மாற்றமிருக்காது என தெரிவித்தார்.

மேலும் வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.35% லிருந்து 3.75% ஆக உயர்த்தப்படுகிறது என்றார். வெளித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் சரி சமமான மட்டத்தில் உள்ளது என்றார்.

RBI
RBI Twitter
Shaktikanta Das
காஷ்மீர் : பொட்டு வைக்க கூடாது; ஹிஜாப் அணிய கூடாது - 2 பெண் குழந்தைகளை தாக்கிய ஆசிரியர்

பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதாவது பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளாதாரத்தின் சரக்கு மற்றும் சேவை பொருட்களின் மீது ஏற்படும் விலை உயர்வு ஆகும். பணவீக்கத்தால் நாணயத்தின் வாங்கும் திறன் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com