சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி முடித்தார் எலான் மஸ்க். கருத்து சுதந்திரத்துக்கு முக்கியதுவம் கொடுப்பது குறித்து பேசி ட்விட்டர் நிறுவனத்தை கைக்குள் போட்டுக்கொண்டுள்ள அவர் அதற்காக நல்ல விலையும் கொடுத்தார்.
ட்விட்டரை வாங்கிவிட்ட உற்சாகத்தில் அவர் போட்ட சில ட்விட்டுகள் ட்விட்டர் வாசிகளை கடுப்பேற்றியது. “கொக்கைனை திருப்பவும் சேர்பதற்கு, கோகோ - கோலாவை வாங்கப்போகிறேன்” என ட்விட் செய்திருந்தார்.
ஃபின்ட்விட் எனும் நிதி மேலாண்மை தொடர்பான கணக்கு எலான் மஸ்கிற்கு பதில் சொல்லும் வகையில் “எலான், நீங்கள் மிகவும் ஏழை, கோகோ - கோலாவை வாங்கமுடியாது” என ஒரு ட்விட் செய்திருந்தது அதில் கோகோ - கோலாவின் மதிப்பு விவரங்கள் இருந்தன.
உலகின் மிகப் பெரிய கூல்ட்ரிங்ஸ் நிறுவனமான கோகோ - கோலா நிறுவனத்தின் பங்குகளின் விலை, எலான் மஸ்க் ட்விட்டர் பங்குகளுக்கு கொடுத்ததை விட அதிகம். ஏறத்தாழ 65 அமெரிக்க டாலர்கள் விலைக்கு கோகோ - கோலா பங்குகள் விற்கப்படுகின்றன. அந்நிறுவனத்தின் மதிப்பு 284.20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு $289 பில்லியன் டாலர்கள். இதனால் அவரால் அந்த நிறுவனத்தை வாங்கமுடியாது என ஃபின்ட்விட் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் எலான் மஸ்கை கலாய்க்கத் தொடங்கினர்.
ஃபின்ட்விட்டின் பதிலுக்குப் பதிலடி கொடுத்த எலான் மஸ்க். கோகோ - கோலா நிறுவனத்தை டேக் செய்து ஹாய் சொல்லி பின்பு, “உண்மையான மாயாஜாலம் ஒரு மிடறுக்கு பின் தான் இருக்கிறது” என்றகோகோ - கோலாவின் விளம்பர வரியை குறிப்பிட்டு ட்விட் செய்திருந்தார்.
ஒரு வேலை மஸ்க் மாயாஜாலங்கள் செய்து கோகோ - கோலா நிறுவனத்தை வாங்கலாமோ? என நெட்டிசன்கள் கணக்குப்போடத் தொடங்கியுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com