ட்விட்டரை பாக்கெட்டில் போட்ட எலான் மஸ்க்: ட்விட்டர் கணக்கு மட்டுமல்ல ட்விட்டரே என்னது தான்

இந்த டீலுக்கு முன்பே, எலான் மஸ்க் பல்வேறு ட்விட்டர் பங்குதாரர்களிடம், தன் டீலைக் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மையைக் குறித்தும் பேசியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற பிரபல பத்திரிகை ஒனறில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்Twitter

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி போன்ற பல முன்னணி நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் கொடுத்த டீலை, ட்விட்டர் பங்குதாரர்கள் ஏற்றுக் கொண்டதாக சிஎன்பிசி தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இது டெக்னாலஜி உலகின் மிகப் பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்த போது, வேடிக்கையாகக் கூறுகிறார் போல என்றே பலரும் கருதினர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ட்விட்டர் டீலுக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகக் கூறினார் மஸ்க்.

ஒரு பங்குக்கு 54.20 அமெரிக்க டாலர் என்பதே தன் தரப்பில் கொடுக்கப்படும் நல்ல டீல் என எலான் மஸ்க் கூறி இருந்தார். அதற்காக, எலான் மஸ்க் தன் சொந்த பணத்திலிருந்து 21 பில்லியன் டாலரையும், டெஸ்லா பங்குகளை நிதி நிறுவனங்களிடம் அல்லது மற்றவர்களிடம் அடமானம் வைத்து 12.5 பில்லியன் டாலர் நிதி உதவி வழியாகக் கூடுதல் பணத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

Elon Musk
Elon MuskNewsSense

அதோடு, மார்கன் ஸ்டான்லி நிறுவனத்திடமிருந்து 13 பில்லியன் டாலர் கடன் என மொத்தம் 43.5 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் தயார் செய்தது ட்விட்டரை வாங்கத் தான் தயாராக இருப்பதாக மறைமுகமாகவே கூறியது, இணையவாசிகளின் புருவத்தை உயர்த்தச் செய்தது.

தொடக்கத்தில், எலான் மஸ்கின் டீலை ட்விட்டர் பங்குதாரர்கள் குழு வரவேற்கவில்லை. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க விரும்பியதைத் தொடர்ந்து, பாய்சன் பில் என்கிற ஒரு விதமான கார்ப்பரேட் தடுப்பு முறையைக் கையில் எடுத்தது ட்விட்டர்.

ஆனால் ஆச்சரியமாக, நேற்று (ஏப்ரல் 25, திங்கட்கிழமை) ட்விட்டர் பங்குதாரர்கள் குழு, எலான் மஸ்கோடு ட்விட்டர் விற்பனை டீல் தொடர்பாக விவாதித்ததாகச் செய்திகள் வெளியாயின.

இந்த டீலுக்கு முன்பே, எலான் மஸ்க் பல்வேறு ட்விட்டர் பங்குதாரர்களிடம், தன் டீலைக் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மையைக் குறித்தும் பேசியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற பிரபல பத்திரிகை ஒனறில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்
கொரோனா : 505 நாட்கள் அவதிப்பட்ட மனிதர்- என்ன ஆச்சு அவருக்கு?
Twitter
TwitterNews Sense

"என்னுடைய மிகக் கடுமையான விமர்சகர்கள் கூட ட்விட்டரில் இருப்பர் என்றே நம்புகிறேன், அது தான் கருத்து சுதந்திரம்" என தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.

அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணம் ஒன்றில் "உலகம் முழுக்க கருத்துச் சுதந்திரத்தின் தளமாக ட்விட்டர் இருப்பதற்கான திறன் கொண்டது என நான் நம்புவதால் ட்விட்டரில் முதலீடு செய்துள்ளேன், கருத்துச் சுதந்திரம் ஒரு செயல்படும் ஜனநாயகத்துக்கு அதி அவசியமானது என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ட்விட்டர் தளம் பிரமாதமான திறன்களைக் கொண்டுள்ளது, அதை நான் வெளிக்கொணர்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க்
ட்விட்டர் : மனம் மாறி எலான் மஸ்கோடு டீல் பேசும் Twitter நிறுவனம் - என்ன நடந்தது?
 Twitter CEO - Parag Agrawal
Twitter CEO - Parag AgrawalTwitter

ஒருவேளை, ட்விட்டரை நாங்கள் வாங்கினால் பாட்(Bot)களால் இயங்கும் போலிக் கணக்குகளை ஒழிப்போம் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்றும் கூறியிருந்தார் எலான் மஸ்க். அதோடு ஒரு ட்விட்டை திருத்துவதற்கான எடிட் பட்டன் வசதி குறித்தும் கருத்துக் கேட்டிருந்தார் மஸ்க். ட்விட்டர் நிறுவனமும் எடிட் வசதியை அறிமுகப்படுத்த ஆமோதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

"ட்விட்டர் ஒப்பந்தத்துக்குப் பின், நிறுவனம் எந்த திசையை நோக்கிச் செல்லும் என்று நமக்குத் தெரியாது" என ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக உள்ள பராக் அகர்வால் ஒரு கூட்டத்தில் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ட்விட்டரை வாங்கிய பிறகு, அந்நிறுவனத்தின் ஊழியர்களோடு எலான் மஸ்க் கலந்து பேசி, அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்க்
நெட்ஃபிளிக்ஸை விமர்சித்த எலான் மஸ்க் - பற்றி எரியத் தொடங்கிய இணையம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com