RG சந்திர மோகன்: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர், 18000 கோடிக்கு அதிபதியானது எப்படி?

13000 ரூபாயில் தொடங்கிய அவரது கடை எப்படி பல்லாயிரம் கோடி மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்தது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
RG சந்திர மோகன்
RG சந்திர மோகன்Twitter

இந்திய பில்லியனர்களில் பலரும் ரோலெக்ஸ் போல ஸ்கிராட்சில் இருந்து வளர்ந்தவர்கள். விக்ரம் வேதா படத்தில் மாதவன், “எல்லா ரௌடிங்களுக்கும் ஒரே கதைதான. முன்னாடி கீழ இருந்தே, நாய் மாதிரி இருந்தே, அப்பறம் இத செஞ்சி அத செஞ்சி பெரிய ஆளா ஆயிட்டே” என ஒரு வசனம் பேசுவார். 

நம் ஊர் பணக்காரர்கள் ஒவ்வொருவரும் கூட தங்களுக்கான கதைகளை வைத்திருக்கின்றனர். சென்னைக்காரரான RG சந்திர மோகனின் கதையும் சுவாரஸ்யமானது.

படிப்பை பாதியில் நிறுத்தியவர் பால் விற்பனைத் துறையில் பெரிய நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். 13000 ரூபாயில் தொடங்கிய அவரது வணிகம் எப்படி பல்லாயிரம் கோடியாக வளர்ந்தது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

RG சந்திர மோகன் கணிதத்தில் கெட்டிக்காரர். கணக்கு வழக்கு பார்ப்பதில் அவரை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதால் மனிதக் கணினி என நெருங்கிய வட்டாரத்தினர் கூறுவர். ஆனால் அவர் பள்ளியில் கணிதத்தில் ஃபெயில் ஆனார். அதன் விளைவாக பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போனது.

இவரது அப்பா சாதாரண மளிகைக்கடை வைத்திருந்தார். பள்ளிக்கு போகாததால் சந்திர மோகன் ஒரு மர டிப்போவில் 65 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார்.

ஒரு கட்டத்தில் சொந்த தொழில் தொடங்குவதற்காக வேலையை விட்டவர் 250 சதுர அடி உள்ள சிறிய கடையில் 3 நபர்களுடன் ஐஸ்கிரீம் வணிகத்தைத் தொடங்குகிறார். 

இந்த கடையைத் தொடங்க அவருக்கு 13000 ரூபாய் தேவைப்பட்டது, பூர்வீக சொத்தை விற்றதன் மூலம் இந்த தொகையை பெற்றிருக்கிறார். 15 தள்ளுவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்கப்பட்டது.

ஆரம்பத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும் முதல் ஆண்டில் அவருக்கு 1.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. இதனால் உறுதியாக தனது வியாபாரத்தை முன்னெடுத்தார் சந்திரமோகன்.

RG சந்திர மோகன்
Bernard Arnault: அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கும் உலகின் No.1 பணக்காரர் - எப்படி தெரியுமா?

சந்திரமோகன் சிறிய நகரங்களுக்கு ஐஸ்கிரீம் பெரிய அளவில் சென்று சேரவில்லை என்பதை கவனித்தார். பெரிய நிறுவனங்களும் பெரிய நகரங்களையே குறிவைத்து வியாபாரம் செய்தனர். 

அந்த இடத்தை நிரப்ப தனது அருண் ஐஸ்கிரீம் நிறுவனத்தை 1981ம் ஆண்டு உருவாக்கினார் சந்திர மோகன். 1986ம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை ஹட்சன் என மாற்றினார். 

RG சந்திர மோகன்
அம்பானி to சாவித்ரி: படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்!

இப்போது இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது ஹட்சன். தினமும் 10000 கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து பால் வாங்குகின்றனர்.

சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்ட ஹட்சனின் இப்போதைய சந்தை மதிப்பு 18,889 கோடி. 42 நாடுகளில் ஹட்சன் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார் RG சந்திர மோகன். அவரது மகன் சி.சத்யன் எம்.டி ஆக உள்ளார்.

RG சந்திர மோகன்
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com