Sanjay Agarwal: 8ம் வகுப்பு ஃபெயிலான நபர் 10,000 கோடிக்கு அதிபதியானது எப்படி?

மும்பையில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனாலும் சொந்த ஊரை விட்டுச் சென்று மற்றொருவருக்காக உழைக்க சஞ்சய்க்கு மனமில்லை. இதனால் அவர் தனது தொழிலில் முதலீடு செய்யும் நபர்களைத் தேடினார்.
Sanjay Agarwal: 8ம் வகுப்பு ஃபெயிலான நபர் 10,000 கோடிக்கு அதிபதியானது எப்படி?
Sanjay Agarwal: 8ம் வகுப்பு ஃபெயிலான நபர் 10,000 கோடிக்கு அதிபதியானது எப்படி?Twitter
Published on

சஞ்சய் அகர்வால் இந்தியாவின் இளம் தொழிலதிபர்களில் ஒருவர். மிகப் பெரிய பின்புலம் இல்லாமல் உருவான கோடீஸ்வரர்.

ராஜஸ்தானின் முக்கிய பணக்காரர்களில் ஒருவர். சாதாரண ஃபைனான்ஸ் நிறுவனமாக தொடங்கி பெரிய வங்கியை உருவாக்கிய இவரது கதையைக் காணலாம்.

சஞ்சய் அகர்வால் ராஜஸ்தானின் வெற்றிகரமான வங்கிகளில் ஒன்றான AU small Finance Bank-ன் நிர்வாக இயக்குநராகவும் சிஇஓவாகவும் இருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.45,000 கோடியாகும். படிப்பு முடிந்ததும் ஃப்ரெஷ்ஷாக சஞ்சய் உருவாக்கிய கம்பனி தான் இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது. ஆனால் இந்த இடத்துக்கு சஞ்சய் எளிதாக வளர்ந்துவரவில்லை.

சஞ்சய் படிப்பை விட கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்த சிறுவனாக இருந்தார். அவரது 8ம் வகுப்பைக் கூட அவரால் பாஸ் செய்ய முடியவில்லை.

இதனால் ஆங்கில வழியில் இருந்து இந்தி வழிக்கு பள்ளியை மாற்றினார். இந்தியில் படிப்பது அவருக்கு எளிதாக இருந்ததால் பள்ளிப்படிப்பை முடித்தார். தொடர்ந்து கல்லூரியிலும் பி.காம் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர் சிஏ நிறுவனத்தில் சேர்ந்தார். அவரால் சிஏ தேர்வில் இரண்டு முறை தேர்ச்சி பெற முடியாமல் போனது.

இடையில் நரம்பு முறிவாலும் அவதிப்பட்டு வந்தார் சஞ்சய். சிஏ முடித்திருந்தாலும் சஞ்சயிடம் தொழில்தொடங்க கையில் பணம் இல்லை.

மும்பையில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனாலும் சொந்த ஊரை விட்டுச் சென்று மற்றொருவருக்காக உழைக்க சஞ்சய்க்கு மனமில்லை. இதனால் அவர் தனது தொழிலில் முதலீடு செய்யும் நபர்களைத் தேடினார்.

25 வயது இளைஞனாக ஜெய்பூரில் தொழிலதிபர் ஒருவரிடம் முதலீட்டை பெற்றார்.

Sanjay Agarwal: 8ம் வகுப்பு ஃபெயிலான நபர் 10,000 கோடிக்கு அதிபதியானது எப்படி?
LULU யூசுஃப் அலி : அரபு நாடுகளில் கொடிக்கட்டி பறக்கும் ஓர் இந்தியரின் வெற்றி கதை

முதலில் வாகனங்களுக்கு நிதி அளிப்பது போன்ற சிறிய வேலைகளைச் செய்து பணம் ஈட்டி வந்தார். தொடர்ந்து கிராணைட், வாகன நிறுவனங்களைத் தொடங்கினார்.

மீண்டும் ஃபைனான்ஸ் பக்கம் கவனம் செலுத்தியவர் 2002ம் ஆண்டு ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்துடன் கைக்கோர்த்தார்.அது இவரது வளர்ச்சியில் மைல் கல்லாக அமைந்தது.

Sanjay Agarwal: 8ம் வகுப்பு ஃபெயிலான நபர் 10,000 கோடிக்கு அதிபதியானது எப்படி?
19 வயதில் 1000 கோடி சொத்து - இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் - யார் இந்த இணை?

2009ம் ஆண்டு மோடிலால் ஓஸ்வால் உடன் கைக்கோர்த்தார். இதனால் ஃபைனான்ஸ் துறையில் குறுப்பிடத்தக்க நபராக மாறினார்.

2017ம் ஆண்டு அவரது AU ஃபைனான்ஸ் நிறுவனத்தை வங்கியாக மாற்றினார். இதன் தலைமையகம் ஜெய்பூரில் இருக்கிறது. நாடுமுழுவதும் 1000த்துக்கும் மேற்பட்ட கிளைகளும் இருக்கின்றன.

2023 நிலவரப்படி சஞ்சய் அகர்வாலின் சொத்துமதிப்பு ரூ.10,6000 கோடி!

Sanjay Agarwal: 8ம் வகுப்பு ஃபெயிலான நபர் 10,000 கோடிக்கு அதிபதியானது எப்படி?
அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா : உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் இருக்கும் நாடு எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com