19 வயதில் 1000 கோடி சொத்து - இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் - யார் இந்த இணை?

இந்த பட்டியலில் இளம் நபராக இடம் பெற்றிருக்கிறார் கைவல்யா வோஹ்ரா என்ற 19 வயது 2கே கிட். இவரது சொத்து மதிப்பு 1000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கைவல்யாவின் நண்பரும் பிசினஸ் பாட்னருமான ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு 1200 கோடி!
Kaivalya Vohra And Adit Palicha
Kaivalya Vohra And Adit PalichaTwitter
Published on

அதிவேகமாக வளர்ந்து வரும் உலகில் விரைவான வளர்ச்சியை எட்டிய நண்பர்கள் கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பலிச்சா. செப்டோ (Zepto) என்ற டெலிவரி நிறுவனத்தை கடந்த 2021ம் ஆண்டு நிறுவிய இவர்கள் இப்போது AIIFL-ன் Hurun இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் இளம் நபராக இடம் பெற்றிருக்கிறார் கைவல்யா வோஹ்ரா என்ற 19 வயது 2கே கிட். இவரது சொத்து மதிப்பு 1000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கைவல்யாவின் நண்பரும் பிசினஸ் பாட்னருமான ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு 1200 கோடி!

Zepto
Zepto

இப்போது ஹுரன் பட்டியலில் முறையே 1036 மற்றும் 950வது இடங்களைப் பெற்றுள்ள இவர்கள் முன்னதாக ஃபோர்ப்ஸின் 30 வயதுக்கு உட்பட்ட செல்வாக்கு மிக்க 30 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.

இளம் பணக்காரர்களான இவர்கள் தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கியதிலும் இளையவர்கள். இந்த இணையின் வெற்றி இந்தியாவில் ஸ்டார்ட் அப்களைத் தொடங்வதற்கான நம்பிக்கையை அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர்.

ஹூருன் பட்டியலில் டீனேஜர்கள் இடம் பெறுவது இதுவே முதன்முறை. 10 ஆண்டுகளுக்கு முன்பு 1000 கோடி சொத்து வைத்திருக்கும் இளம் நபரின் வயது 37, ஆனால் இப்போது 19 என ஹூருன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Kaivalya Vohra And Adit Palicha
365 நாளில் ரூ.30 ஆயிரம் கோடி; அசத்திய 59 வயது பெண் - யார் இந்த Falguni Nayar?

மும்பையைச் சேர்ந்த சிறுவயது நண்பர்களான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பலிச்சா இருவரும் துபாயில் வளர்ந்தனர். கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்துவந்தவர்கள் தங்களது படிப்பினை நிறுத்திவிட்டு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினர்.

ஆதித் 17 வயதில் தொழில்முனைவோராக தனது பயணத்தைத் தொடங்கினார். அப்போது மாணவர்கள் கார்களை பங்கிட்டுக்கொள்ளும் படி கோபூல் (GoPool) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இப்போது அதித்துக்கு வயது 21. செப்டோவை நிறுவுவதற்கு முன்னர் PryvaSee என்ற ஏ.ஐ தொடர்பான புராஜெக்டில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kaivalya Vohra And Adit Palicha
Amazon நிறுவனரை விட அதிக சொத்து மதிப்பை எட்டிய அதானி! - எப்படிச் சாத்தியமானது தெரியுமா?

2020ம் ஆண்டு ஆதித் மற்றும் கைவல்யா இணைந்து கிரன்கார்ட் என்ற டெலிவரி நிறுவனத்தை மும்பையில் நிறுவினர். இது ஜூன் 2020 முதல் மார்ச் 2021 வரை செயல்பட்டது. அதன் பின்னர் அவர்கள் ஏப்ரல் 2021ல் செப்டோவை நிறுவினர். வேகமாக வளர்ந்த செப்டோவின் இப்போதைய மதிப்பு 900 மில்லியன் டாலர்கள்.

செப்டோ ஒரு டெலிவரி நிறுவனம், அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. கோவிட் காலத்தில் டெலிவரிகளின் தேவை அதிகமாக இருந்த சூழலில் செப்டோ வெற்றிகரமாக செயல்பட்டு வென்றிருக்கிறது.

Kaivalya Vohra And Adit Palicha
கனிகா : 22 வயதில் ஸ்டார்ட் அப்; 32ல் தொழிலதிபர் - ஒரு பெண் அடைந்த அசுர வளர்ச்சி | Podcast

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com