க்ரிப்டோகரன்சியை கைவிட்ட எலான் மஸ்க்: பிட்காயினை விற்று வெளியேறிய டெஸ்லா - இனி?

டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்திருந்த பிட்காயினில் சுமார் 75 சதவீத பிட்காயின்களை விற்று பணமாக மாற்றியுள்ளது
Elon Musk
Elon MuskNewsSense
Published on

225 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு எவரும் எளிதில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் எலான் மஸ்க், உலகின் அதிமுக்கிய எலெக்ட்ரானிக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.

அந்நிறுவனம் சமீபத்தில்தான் 2022ஆம் ஆண்டுக்கான தன் இரண்டாவது காலாண்டு (ஏப்ரல் - ஜூன்) முடிவுகளை வெளியிட்டது.

டெஸ்லா நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 16.9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த முதல் காலாண்டில் ஈட்டிய 18.8 பில்லியன் டாலரை விட சுமார் 10 சதவீதம் குறைவு.

அதே போல டெஸ்லா நிறுவனத்தின் லாபம் இரண்டாவது காலாண்டில் 2.3 பில்லியன் டாலராக இருக்கிறது. முந்தைய முதல் காலாண்டில் டெஸ்லாவின் லாபம் 3.3 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட 30 சதவீதம் லாபம் சரிவு.

பணவீக்கம், உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையிலான போர், சீனாவில் ஏற்பட்ட புதிய கொரோனா வெடிப்பு போன்ற பல பிரச்னைகளால் இந்த காலாண்டில் டெஸ்லா அதிக வருவாயையும், லாபத்தையும் ஈட்ட முடியவில்லை என கூறியது டெஸ்லா தரப்பு. குறிப்பாக சீனாவில் ஏற்பட்ட கட்டுப்பாடுகளால் செமிகண்டெக்டர் போன்ற முக்கிய ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் கூறியது.

இதில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்திருந்த பிட்காயினில் சுமார் 75 சதவீத பிட்காயின்களை விற்று பணமாக மாற்றியுள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனத்துக்கு 936 மில்லியன் அமெரிக்க டாலர் பணவரவாக அதன் நிதி நிலை அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனம் கிரிப்டோகரன்சி நெருக்கடியில் நிறைய பணத்தை இழந்திருப்பதாகக் காயின் டெஸ்க் என்கிற கிரிப்டோ நிறுவனம் தன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. மேலும் 460 மில்லியன் அமெரிக்க டாலர் வரை பிட்காயின் கிரிப்டோ கரன்சியில் இழக்கலாம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Elon Musk
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லையா..? எலான் மஸ்க் பதில் இணையத்தில் வைரல்

தற்போது கிரிப்டோ சந்தையில் பிட்காயின் விற்றுவருவதை விட, சுமார் 35 சதவீதம் அதிக விலையிலிருந்த போது, டெஸ்லா நிறுவனம் கடந்த பிப்ரவரி 2021-ல் பிட்காயினில் முதலீடு செய்தது நினைவுகூரத்தக்கது.


கடந்த நவம்பர் 2021-ல் சுமார் 68,500 டாலருக்கு மேல் வர்த்தகமான பிட்காயின் சமீபத்தில் சுமார் 21,000 டாலருக்குக் கீழ் சரிந்து வர்த்தகமானது. அது கிட்டத்தட்ட 70 சதவீதம் சரிவு. இப்போதும் பிட்காயின் சுமார் 25,000 டாலருக்குள்தான் வர்த்தகமாகி வருகிறது.

இப்படி ஒரு இக்கட்டான சூழலில் கிரிப்டோகரன்சியை ஆதரித்து வந்த எலான் மஸ்க் போன்றவர்களின் நிறுவனமே கிரிப்டோகரன்சிகளை விற்று வெளியேறுவது, கிரிப்டோ ஆதரவாளர்கள் மத்தியிலேயே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படையில் கிரிப்டோ போன்றவைகளை வாங்க ஆள் இல்லையெனில், அதன் மதிப்பு அதிவிரைவாக சரிந்துவிடும்.

Elon Musk
ஓவர்நைட்டில் 14,400% வளர்ச்சி கண்ட கிரிப்டோ: எதனால் தெரியுமா? - அதிர்ச்சி தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com