ஓவர்நைட்டில் 14,400% வளர்ச்சி கண்ட கிரிப்டோ: எதனால் தெரியுமா? - அதிர்ச்சி தகவல்

எலான் பைஸ் ட்விட்டர் என்கிற கிரிப்டோ பாதுகாப்பற்ற வலைத்தளத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. அந்த கிரிப்டோ வலைத்தளத்தில் எலான் மஸ்கின் படம் புரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.
Crypto Currency
Crypto CurrencyTwitter

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர் மற்றும் உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான திட்டத்துக்கு, ட்விட்டர் பங்குதாரர்கள் சம்மதித்துள்ளதாகச் சமீபத்தில் தான் செய்திகள் வெளியாயின.

இந்த டீல் நல்லதா கெட்டதா என்று இணையம் விவாதித்து முடிப்பதற்குள், யாரோ ஒருவர் 'Elon Buys Twitter' என்கிற பெயரில் ஒரு புது கிரிப்டோ காயின்களை வெளியிட்டு கல்லாகட்டத் தொடங்கிவிட்டார்.

காயின் மார்கெட் கேப் என்கிற வலைத்தள விவரங்கள் படி, அந்த கிரிப்டோக்கள் ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு 0.000000035 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது சுமார் 0.000005102 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

சுருக்கமாக ஒரு சில நாட்களில் 'எலான் பைஸ் ட்விட்டர்' என்கிற கிரிப்டோவின் மதிப்பு 14,400 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளது.

Elon Musk
Elon MuskTwitter

ஸ்குவிட் கேம் என்கிற பெயரில் நெட்ஃப்ளிக்ஸில் ஒரு சுவாரசியமான வெப் சீரிஸ் வெளியாகி, உலகப் புகழ்பெற்றது நினைவிருக்கிறதா? அந்த வெப் சீரிஸ் வெளியான போது 'ஸ்குவிட்' என்கிற பெயரில் ஒரு கிரிப்டோ வர்த்தகமாகத் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே பல ஆயிரம் சதவீதம் விலை ஏற்றம் கண்டது.

ஆனால் திடீரென அதன் மதிப்பு சரிந்து பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்தனர். அப்படி ஒரு ஏமாற்று வேலைக்கான கிரிப்டோவாகக் கூட 'எலான் பைஸ் ட்விட்டர்' இருக்கலாம் என எச்சரிக்கை செய்திகள் வெளியாகி உள்ளன.

எலான் பைஸ் ட்விட்டர் என்கிற கிரிப்டோ பாதுகாப்பற்ற வலைத்தளத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. அந்த கிரிப்டோ வலைத்தளத்தில் எலான் மஸ்கின் படம் புரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.

Crypto Currency
கோழிப்பண்ணை தொடங்கும் தோனி - இதுதான் காரணமா?

எச்சரிக்கை:

கிரிப்டோ வல்லுநர்களோ, இது போலப் பல கிரிப்டோ காயின்கள் இஷ்டத்துக்கு வெளியாவதும், பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழப்பதும் நடந்து வருகிறது. எனவே முதலீடு செய்வதற்கு முன், அதிகாரப்பூர்வமற்ற, உறுதி செய்யப்படாத தகவல்களை வைத்து முதலீடு செய்ய வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.

Crypto Currency
ட்விட்டரை பாக்கெட்டில் போட்ட எலான் மஸ்க்: ட்விட்டர் கணக்கு மட்டுமல்ல ட்விட்டரே என்னது தான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com