அரபு உலகின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள்தான் - விரிவான தகவல்

2021 ஆம் ஆண்டின் கணக்குப்படி உலகில் 660க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இருக்கிறார்கள். அரபுலகில் மட்டும் 22 பில்லியனர்கள் இருக்கிறார்கள்
Dubai, Arab Emirates

Dubai, Arab Emirates

Twitter

பாலைவனமாய் இருந்த வளைகுடா அரபு நாடுகள், 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கச்சா எண்ணெய் வளத்திற்கு பிறகு பணக்கார நாடுகளாக மாறிவிட்டன. இன்று எண்ணெய் மட்டுமல்ல, உரம், வேதிப்பொருட்கள், சர்க்கரை, நிதி மூலதனம், சுற்றுலா, ரியல் எஸ்டேட், ஆடை அலங்காரம், ஐ.டி துறை என்று பல துறைகளிலும் அரபுலக முதலாளிகள் கால் பதித்திருக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டின் கணக்குப்படி உலகில் 660க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இருக்கிறார்கள். அரபுலகில் மட்டும் 22 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இங்கே ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2021 ஆம் ஆண்டில் வெளியிட்ட 22 பேரில் டாப் 10 அரபுலக பில்லியனர்களை வரிசைக்கிரமமாக பார்ப்போம். இவர்களைத் தவிர பெரும் அரபு நிறுவனங்கள் உலக அளவில் முன்னணியில் இருக்கின்றன. இங்கே நாம் பார்ப்பது தனிநபர்களை மட்டும்தான். மேலும் அவர்களது நிகர சொத்து மதிப்பு என்பது அவர்களின் நிறுவன சொத்து மதிப்பு அல்ல. அவர்களுடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டுமே. நிறுவன சொத்து மதிப்பு சில மடங்கு அதிகம் இருக்கும்.

Nassef Sawiris

Nassef Sawiris

Twitter

1. நசீப் சாவீரிஸ் - Nassef Sawiris , எகிப்து, நிகர சொத்து மதிப்பு 8.3 பில்லியன் டாலர்

நசீப்பின் முக்கியமான தொழிற்துறைகள் கட்டுமானப்பணி மற்றும் நிதி முதலீடுகள். எகிப்து நாட்டின் பாரம்பரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் அடிடாஸ் நிறுவனத்தின் 6% பங்குகளை வைத்திருக்கிறார். நியூயார்க்கைச் சேர்ந்த மாடிசன் ஸ்கொயர் கார்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் 5% பங்குகளையும் இவர் வைத்திருக்கிறார். இந்த நியூயார்க் நிறுவனம்தான் என்பிஏவில் நிக்ஸ் கூடைப்பந்தாட்ட அணியையும், என்ஹெச்எல்லின் ரேஞ்சர்ஸ் ஹாக்கி அணியையும் வைத்திருக்கிறது. டெக்சாசிலும், ஐயோவாவிலும் உள்ள உலகின் மிகப்பெரிய நைட்ரஜன் உரத்தொழிற்சாலையான ஓசிஐ – நிறுவனத்தையும் இவர்தான் நடத்துகிறர். மேலும் ஓரஸ்காம் எனும் கட்டுமான நிறுவனத்தையும் நடத்துகிறார்.

Issad Rebrab

Issad Rebrab

Facebook

2. இசாத் ரிபிராப் - Issad Rebrab மற்றும் குடும்பத்தினர், அல்ஜீரியா, நிகர சொத்து மதிப்பு 4.8 பில்லியன் டாலர்

இக்குடும்பத்தினரின் முக்கியமான துறைகள் உணவு மற்றும் குளிர்பானம். இசாத் நிறுவிய செவிட்டால் நிறுவனம் அல்ஜீரியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனம். ஆண்டுக்கு 2 மில்லியன் டன் சர்க்கரையை இந்நிறுவனம் தயாரிக்கிறது. மேலும செவிட்டால் நிறுவனம் பிரான்சில் வீட்டுப் பொருட்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தையும், இத்தாலியில் இரும்பு எஃகு தொழிற்சாலையையும், ஜெர்மனியில் நீர் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இசாத் 8 மாதங்கள் சிறையில் இருந்து விட்டு 2020 ஜனவரியில் விடுதலை ஆனார்.

Dubai, Arab Emirates

டாடா குழுமம் வரலாறு : ஆசியாவின் காபி சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் டாடா | பகுதி 18

Majid Al Futtaim

Majid Al Futtaim

Twitter

3. மஜித் அல் பட்டெய்ம் - Majid Al Futtaim மற்றும் குடும்பத்தினர், ஐக்கிய அரபு அமீரகம், நிகர சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலர்

மஜித்தின் முக்கியமான துறைகள் ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை வர்த்தகம். 1992 ஆம் ஆண்டில் இவர் துவங்கிய எம்ஏஎஃப் எனும் நிறுவனம் அமீரகத்தில் 13 விடுதிகளையும் 26 மால்களையும் நடத்தி வருகிறது. மேலும் துபாயிலும், கெய்ரோவிலும் கூட இவருக்கு மால்கள் இருக்கின்றன. பிரான்சின் மிகப்பெரும் சில்லறை வர்த்தக நிறுவனமான கேராஃபோரின் ஹைப்பர்மார்க்கெட் என்று அழைக்கப்படும் மாபெரும் பேரங்காடிகளை மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியாவில் நடத்துவதற்கு மஜித் உரிமம் பெற்றிருக்கிறார்.

Naguib Sawiris

Naguib Sawiris

Facebook

4. நகூயிப் சாவிரிஸ் - Naguib Sawiris, எகிப்து, நிகர சொத்து மதிப்பு 3.2 பில்லியன் டாலர்

இவரும் எகிப்தில் ஒரு பாரம்பரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் நசீஃப்பும் ஒரு பில்லியனர்தான். தொலைத்தொடர்பு தொழில்தான் இவரது முக்கியத் துறை. தனது ஆரஸ்காம் டெலிகாம் நிறுவனத்தை 2011 ஆம் ஆண்டில் ரசியாவின் வியான் நிறுவனத்திற்கு பல பில்லியன் டாலருக்கு விற்றார். இவர் தலைவராக உள்ள ஆரஸ்காம் டிஎம்டி முதலீட்டு நிறுவனத்திற்கு எகிப்திலும், இத்தாலியிலும் நிறுவனங்கள் உள்ளன. யூரோ நியூஸ் எனப்படும் ஐரோப்பிய டிவி நிறுவனத்தின் பெரும்பான்மை உரிமை இவரிடமே உள்ளது. கரீபியின் தீவுகளில் இருக்கும் கிரானடாவில் இவருக்கு ஆடம்பரமான சில்வர்சான்ட்ஸ் எனப்படும் நட்சத்திர விடுதி இருக்கிறது.

Abdulla Bin Ahmad Al Ghurair

Abdulla Bin Ahmad Al Ghurair

Twitter

5. அப்துல்லா பின் அகமது அல் குரெய்ர் மற்றும் குடும்பத்தினர், ஐக்கிய அரபு அமீரகம், நிகர சொத்து மதிப்பு 2.8 பில்லியன் டாலர்

அமீரகத்தின் முன்னணி வங்கியான மாஷ்ரெக் வங்கியை 1967 இல் துவக்கியவர் இவர்தான். மேலும் உணவு, கட்டுமானம் போன்ற துறைகளில் பெரும் முதலீடு செய்திருக்கிறார். உலகின் மிக உயரம் கொண்ட கட்டிடமான பர்ஜ் காலிஃபாவின் வெளிப்புற தோற்றத்தை கட்டியது இவரது நிறுவனம்தான். மேலும் துபாய் மெட்ரோ நிறுவன வேலைகளையும் செய்திருக்கிறார். இறந்து போன இவரது சகோதரர் சைஃப் அல் குரெய்ரும் ஒரு பில்லியனர்தான்.

Mohamed Mansour

Mohamed Mansour

Twitter

6. முகமது மன்சூர் - Mohamed Mansour, எகிப்து, நிகர சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்

மன்சூரின் இறந்து போன தந்தை 1952 இல் ஆரம்பித்த மன்சூர் குழுமத்தில் இன்று உலகம் முழுவதும் 60,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் கார்களின் எகிப்து முகவராக 1975 இல் மன்சூர் குழுமம் செயல்படத் துவங்கியது. பிறகு ஜெனரல் மோட்டார்சின் உலகப் பெரும் முகவராக உயர்ந்திருக்கிறது. மேலும் கேட்டர்பில்லர் உபகரணங்களின் விநியோக உரிமையை எகிப்து உட்பட 7 ஆப்ரிக்க நாடுகளில் வைத்திருக்கிறது. ஹோசினி முபாரக் அதிபராக இருந்த போது மன்சூர் 2006 முதல் 2009 வரை போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியிருக்கிறார். இவரது சகோதரர்களும் பில்லியனர்கள்தான்.

Najib Mikati

Najib Mikati

Facebook

7. நஜீப் மிக்காட்டி Najib Mikati , லெபனான், நிகர சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்

நஜீப் தனது மற்றொரு பில்லியனர் சகோதரரான டாஹாவுடன் இணைந்து பெய்ரூட்டில் எம்1 எனும் முதலீட்டு குழுமத்தை ஆரம்பித்தார். இக்குழுமம் தென்னாப்பிரிக்காவின் எம்டிஎன் தொலைத்தொடர்பு நிறுவனம், ஃபேஷன் நிறுவனமான பிபி ஜீன்ஸ் மற்றும் நியூயார்க், இலண்டன், மொனாக்கோ ஆகிய நகரங்களின் ரியல் எஸ்டேட் துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறது. நஜீப் தனது சகோதரருடன் இணைந்து 1982-இல் இன்வெஸ்ட்காம் நிறுவனத்தை துவங்கினார். இது லெபனானின் உள்நாட்டு சண்டை தீவிரமாக இருந்த போதே சாட்டிலைட் ஃபோன்களை விற்றது. மேலும் இந்த போன்களை ஆப்பிரிக்கா முழுவதும் விரிவுபடுத்தியது. கானா, லைபீரியா, பெனின் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் செல்போன் டவர்களை கட்டியிருக்கிறது.

Dubai, Arab Emirates

செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!

Hussain Sajwani

Hussain Sajwani

Twitter

8. ஹுசைன் சஜ்வானி - Hussain Sajwani, ஐக்கிய அரபு அமீரகம், நிகர சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலர்

துபாயில் இருக்கும் ஆடம்பர ரியல் எஸ்டேட் நிறுவனமான டாமெக் பிராப்பர்டிஸ் 2002 ஆம் ஆண்டில் ஹுசைனால் துவங்கப்பட்டது. மேலும் அமெரிக்க இராணுவத்திற்கும், கட்டுமான நிறுவனமான பெக்டெலுக்கும் உணவு அளிக்கும் தொழிலையும் நடத்தி வருகிறார். அமெரிக்க முன்னாள் அதிபரும் முதலாளியுமான டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து துபாயில் இரண்டு கால்ஃப் மைதானங்களை உருவாக்கியிருக்கிறார். சந்தைப்படுத்துதலில் அதிரடியாக செய்வது இவரது வழக்கம். சில நேரம் தனது அபார்ட்மெண்டுகளை வாங்குவோருக்கு உலகின் அதிக விலை கொண்ட லம்பார்கினி கார்களை அளித்திருக்கிறார்.

Suhail Bahwan

Suhail Bahwan

Twitter

9. சுஹைல் பெஹ்வான் - Suhail Bahwan, ஓமன், நிகர சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர்

சுஹைல் பெஹவான் குழுமத்தின் நிறுவனரும் தலைவரும் இவர்தான். ஓமனின் பாரம்பரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். வருடத்திற்கு இவர் நிறுவனம் 1.3 மில்லியன் டன் யூரியா உரத்தை தயாரிக்கிறது. மேலும் நிசான், பிடபிள்யூ கார்களின் முகவராகவும் இவர் நிறுவனம் இருக்கிறது.

Abdulla Al Futtaim

Abdulla Al Futtaim

Facebook

10. அப்துல்லா அல் ஃபட்டெய்ம் - Abdulla Al Futtaim, ஐக்கிய அரபு அமீரகம், நிகர சொத்து மதிப்பு 2.2 பில்லியன் டாலர்

இவர் அல் ஃபட்டெய்ம் குழுமத்தின் துணைத் தலைவரகாவும் இவர் மகன் இக்குழுமத்தை நடத்தவும் செய்கிறார். 1955 முதல் டோயோட்டா கார்களின் முகவராக இக்குழுமம் செயல்படுகிறது. தற்போது அமீரகத்தின் 30% வாகன சந்தை இக்குழுமத்திடம்தான் இருக்கிறது. மேலும் வாடகை கார் நிறுவனமான ஹெர்ட்ஸ், மரச்சாமான்களை தயாரிக்கும் இகியா, குழந்தைகள் பொருட்கள் மற்றும் வீடியோ விளையாட்டுகளை விற்கும் டாய்ஸ்ஆர்அஸ் போன்ற நிறுவனங்களின் உரிமத்தையும் இக்குழுமம் பெற்றிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com