ஊபெர் முன்னணி கால்டாக்ஸி நிறுவனமாக திகழ்கிறது. 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊபெர் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2017ம் ஆண்டு தாரா கோஸ்ரோஷாஹி பதவியேற்றார்.
இவர் களத்தில் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர்கள் என்ன மாதிரியான சவால்களை மேற்கொள்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள சில மாதங்கள் டிரைவராக பணியாற்றியிருக்கிறார்.
இவர் என்ன கற்றுக்கொண்டார்? என்ற அனுபவத்தை சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதில் பல அதிர்ச்சிகரமான விஷயங்களை சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.
"இந்த அனுபவம் டிரைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து புரிந்துகொள்ள உதவியது" என அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.
2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இப்படி ஓட்டியிருக்கிறார். இதற்காக பழைய டெஸ்லா காரை வாங்கிய அவர் டேவ் கே என்ற புனைப் பெயரில் செயல்பட்டுள்ளார்.
ஆபில் சேருவதே மிகவும் குழப்பமாக இருப்பதை அவர் கண்டறிந்திருக்கிறார். டெலிவரி ட்ரிரைவரா, பயணிகள் டிரைவரா என்பதை தேர்வு செய்யக் கூட கோஸ்ரோஷாஹி குழம்பியிருக்கிறார்.
அவர் ஓட்டுநராக இருந்த நாட்களில் பயணங்களை ஏற்காததால் ஆப்பால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
அதிகமாக பயணங்கள் வாடிக்கையாளர்களால் கட் செய்யப்பட்டிருக்கிறது. பயணிகள் அவர் எதிர்பாராத விதமாக கடுமையாக நடந்துகொண்டிருக்கின்றனர்.
அந்த அனுபவங்களை வைத்து ஓட்டுநர்கள் முன்கூட்டியே பயணிகளின் இறங்கும் இடத்தைப் பார்க்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
ஊபரில் டிப்பிங் வசதி உள்ளது. இதில் பயணிகள் அதிக பணம் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டு பின்னர் குறைவாக கொடுத்துள்ளனர். இதனை சரி செய்ய முடியவில்லை.
ஒட்டுமொத்தமாக இந்த அனுபவம் மிகவும் விபரீதமானதாக இருந்திருக்கிறது. இன்னும் செய்ய வேண்டிய மாற்றங்கள் பல இருப்பதாக தாரா கோஸ்ரோஷாஹி கூறியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust