மிதக்கும் தங்கம் : திமிங்கல வாந்தி கோடிக்கணக்கில் விலைபோகிறதா? - விற்பனைக்கு தடை ஏன்?

திமிங்கலம் வாந்தியை வெளியேற்றுவது என்பது இயற்கையில் நடைபெறும் மிகவும் அதிசயமான நிகழ்வாகும். இதன் அதீத மதிப்பு காரணமாக இதனை மிதக்கும் தங்கம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
மிதக்கும் தங்கம் : திமிங்கல வாந்தி கோடிக்கணக்கில் விலைபோகிறதா? - விற்பனைக்கு தடை ஏன்?
மிதக்கும் தங்கம் : திமிங்கல வாந்தி கோடிக்கணக்கில் விலைபோகிறதா? - விற்பனைக்கு தடை ஏன்?Twitter

திமிங்கல வாந்தி வியாபாரம் இந்தியாவில் பெருகி வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து காவல்துறையினர் இவற்றை பறிமுதல் செய்து ஹைத்ராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்புகின்றனர்.

திமிங்கலம் வாந்தியை வெளியேற்றுவது என்பது இயற்கையில் நடைபெறும் மிகவும் அதிசயமான நிகழ்வாகும். இதனால் அம்பர்கிரிஸ் என்று அழைக்கின்றனர்.

இதன் அதீத மதிப்பு காரணமாக இதனை மிதக்கும் தங்கம் என்றும் குறிப்பிடுகின்றனர். பொதுவாக ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இது அதிகமாக கிடைக்கிறது.

திமிங்கல வாந்தி என்பது என்ன?

திமிங்கல வாந்தி மெழுகு போன்ற பொருளாலானதாகும். இது திமிங்கலத்தின் குடலில் உருவாகிறது. பொதுவாக கடலில் மிதந்துகொண்டிருக்கும் போது நமக்குக் கிடைக்கிறது.

திமிங்கல வாந்தியை துல்லியமாக கண்டறிண்வது மிகவும் அபூர்வம் தான். சில நேரம் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் இறந்த பின்னர் அவற்றை வயிற்றுப்பகுதியில் கிடைக்கிறது.

புதிதாக எடுக்கப்படும் திமிங்கல வாந்தி மிகவும் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். ஆனால் சில நாட்கள் சென்றதும் மனதுக்கு இதமாக இருக்கும் மண் வாசனை வீசத்தொடங்கிறது.

வாசனை திரவியம் தயாரிப்பாளர்களுக்கு திமிங்கல வாந்தி ஒரு வரப்பிரசாதம் தான். இது மிக நீண்ட காலத்துக்கு வாசனையுடன் இருக்கும்.

மிதக்கும் தங்கம் : திமிங்கல வாந்தி கோடிக்கணக்கில் விலைபோகிறதா? - விற்பனைக்கு தடை ஏன்?
1 ரூபாய்க்கு இவ்வளவு மவுசா? இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் தெரியுமா?

மிதக்கும் தங்கம் - கருப்பு சந்தையின் ஃபேவரைட்!

உலகம் முழுவதும் கருப்பு சந்தையில் அதிகம் விற்கப்படும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது திமிங்கல வாந்தி.

அதிக டிமாண்ட் இருப்பதனால் அதிக விலையும் கொடுக்கப்படுகிறது.

2022ல் மட்டும் இந்தியா முழுவதும் 26 திமிங்கல வாந்தி கடத்தல் சம்பவங்களை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

திமிங்கல வாந்தியை விற்பனை செய்ய ஆன்லைன் தளம் கூட இருக்கிறது. அதில் கூறப்படுவதன்படி, ஒரு கிலோ திமிங்கல வாந்தியின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி!

இப்போது தெரிகிறதா இதனை ஏன் மிதக்கும் தங்கம் என அழைக்கின்றனர் என்பது?

மிதக்கும் தங்கம் : திமிங்கல வாந்தி கோடிக்கணக்கில் விலைபோகிறதா? - விற்பனைக்கு தடை ஏன்?
நியூசிலாந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?

திமிங்கல வாந்தியை தூபமாகவும், சிக்ரெட் மற்றும் சுருட்டுகளின் வாசனையை மேம்படுத்தவும், சளி, தலைவலி மற்றும் பிற உடல் நல பிரச்னைகளுக்கு உதவும் மருந்தாகவும், பிளேக்கிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது என வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெர்ம் திமிங்கலம் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை II இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது, மேலும் அதன் வாந்தியை விற்பனை செய்வது, மாற்றுவது, வைத்திருப்பது அல்லது வர்த்தகம் செய்வது சட்டவிரோதமானது.

மிதக்கும் தங்கம் : திமிங்கல வாந்தி கோடிக்கணக்கில் விலைபோகிறதா? - விற்பனைக்கு தடை ஏன்?
Loneliest Whale : உலகிலேயே தனிமையான திமிங்கலம் - மர்ம உயிரினம் கண்டறிப்பட்டது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com