நியூசிலாந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?

நியூசிலாந்து மொத்த உலகிலிருந்தும் தனித்திருக்கும் பகுதியாக இருக்கிறது. ஒளிரும் புழுக்கள், பெரிய பனிப்பாறைகள், பென்குயின்கள், கிவிப்பறவைகள் என இறக்கையின் பல அதிசயங்களை இங்குப் பார்க்கலாம்.
நியூசிலந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?
நியூசிலந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?Twitter

உலகில் இருக்கும் நாடுகளில் நியூசிலாந்து மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது.

ஒளிரும் புழுக்கள், பெரிய பனிப்பாறைகள், பென்குயின்கள், கிவிப்பறவைகள் என இறக்கையின் பல அதிசயங்களை இங்குப் பார்க்கலாம்.

மனிதர்கள் சமீபமாக குடியேறிய நாடு என்று நியூசிலாந்தைக் கூறலாம். 13ம் நூற்றாண்டில் பாலினேசியர்கள் தான் முதலில் குடியேரினர் எனக் கூறப்படுகிறது.

இது மொத்த உலகிலிருந்தும் தனித்திருக்கும் பகுதியாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு அண்டை நாடாக கருதப்பட்டாலும் ஆஸ்திரேலியாவிலிருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

நியூசிலாந்து குறித்து நீங்கள் வியக்கக் கூடிய 6 தகவல்கள் இந்த கட்டுரையில் காணலாம்.

எல்லாருக்கும் வாக்குரிமை அளித்த நாடு

நியூலாந்தில் 1893ம் ஆண்டிலேயே பெண்கள் உள்ளிட்ட சமூகத்திலிருக்கும் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. பல நாடுகளில் அப்போது அப்படி இல்லை.

நியூசிலந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு

கிவி

13ம் நூற்றாண்டில் தான் மனிதர்கள் நியூசிலாந்து வந்தனர் எனக் கூறியிருந்தேன். அதற்கு முன்னர் இங்கு வசித்தது யார்? நியூசிலாந்தில் மிகப் பெரிய வேட்டை விலங்குகள் எதுவும் இல்லை. வௌவால்களும் கிவிப்பறவையும் தான் அந்த நிலத்தின் புழுக்களைத் தின்று ஆட்சி செய்து வந்தன.

கிவிப்பறவைகள் நியூசிலாந்தில் உள்ள காடுகளில் புழுக்களைத் தின்று வாழ்ந்ததால் அவைப் பறக்கக் கூட இல்லை. இதனால் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியால் பறக்கும் தன்மையையும் இறக்கையையும் கூட கிவிப்பறவைகள் இழந்துவிட்டன.

கிவி என்றால் இந்த பறவையையும், கிவி பழம் மற்றும் நியூசிலாந்தில் பிறந்த குழந்தை என 3 பொருள்களை அங்கு குறிக்கும்.

நாட்டில் 30 விழுக்காடு காடுகள் தான்

ஆஸ்திரேலியாவைப் போல நியூசிலாந்தும் இரு தீவு நாடுதான். ஆனால் பாலைவனம் இல்லை.

நியூசிலாந்தில் அதிகமான காடுகள், மலைகள், ஆறுகள் இருக்கின்றன. இயற்கையான சொர்க்கமாக நியூசிலாந்து திகழ்கிறது.

மேலும் நாட்டில் பெருமளவு புல்வெளிகள் காணப்படுகின்றன. சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு உள்ள மக்கள் காடுகளையும், தேசிய பூங்காக்களையும், கிவிப் பறவையையும் பாதுகாத்து வருகின்றனர்.

நியூசிலந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?
கிவி : கோழி அளவுள்ள பறவைகள் ஈ.மு அளவு முட்டையிடுமா? பறக்காத பறவை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

நீளமான பெயர் கொண்ட ஊர்

Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu. இது தான் நியூசிலாந்து கிழக்கு கடற்கரையில் உள்ள அந்த ஊரின் பெயர்.

இதனை ஆங்கிலத்தில் “The place where Tamatea, the man on the big knees who slipped, climbed and swallowed mountains, known as the land eater, he played the flute to his loved one" என மொழிப்பெயர்க்கலாம்.

மனிதர்களை விட ஆடுகளின் எண்ணிக்கை அதிகம்

நியூசிலாந்தைப் பொருத்தவரையில் கால்நடை வளர்ப்பு தான் மிகப் பெரிய தொழில். குறிப்பாக செம்மறி ஆடுகள்.

நாட்டிலிருக்கும் பெரிய புல்வெளிகளில் மக்கள் மாடுகளையும் ஆடுகளையும் மேய்க்கின்றனர்.

மனிதர்களை விட 5-10 மடங்கு ஆடுகளின் எண்ணிக்கை அதிகம்.

நியூசிலந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?
2000 ஆண்டுகளுக்கு முன்பே நியூசிலாந்து சென்ற தமிழர்கள்? - ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்

3 மொழிகள்

ஆங்கிலம், சைகை மொழி மற்றும் மவோரி மொழியும் நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.

நாட்டில் உள்ள 17% மக்கள் பூர்வீக மவோரிகள். மவோரி மொழி ஒரு காலத்தில் அழியும் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தாலும் மக்கள் அதனை மீட்டுள்ளனர்.

நியூசிலந்து : மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு - 'இயற்கை சொர்க்கமாக' இருப்பது ஏன்?
Zealandia: நியூசிலாந்து ஆஸ்திரேலிய கண்டம் இல்லையா? - உலகின் 8 வது கண்டம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com