காலங்காலமாக மற்ற மொழிகளிலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து மற்ற மொழிகளிலும் பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமாக மலையாளம்-தமிழ் சினிமா இடையே உள்ள பந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவற்றில் ஒரு சில படங்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.
நல்ல திரைப்படங்களை பார்க்க மொழி ஒரு தடையில்லை என்றாலும், அந்தந்த படத்தை அந்தந்த மொழிகளில் பார்த்தால்தான், அதில் ஒளிந்திருக்கும் நுணுக்கங்கள் புரியும். அந்த வகையில் கைகொடுத்து ரீமேக் கலாச்சாரம்.
அப்படி மலையாள சினிமா தமிழுக்கு தந்த சில முத்துக்களின் பட்டியல் இதோ:
மோகன்லால், கார்த்திகா இணைந்து நடித்த காந்தி நகர் ஸெகண்ட் ஸ்ட்ரீட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் அண்ணா நகர் முதல் தெரு. தமிழில் இத்திரைப்படத்தை இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான பாலு ஆனந்த் இயக்கினார். தமிழில், சத்யராஜ், ராதா, அம்பிகா, ஜனகராஜ், மனோரமா ஆகியோர் நடிப்பில் இப்படம் 1988ல் வெளியானது.
1991ல் கார்த்திக், பாணு பிரியா நடிப்பில் வெளியான கோபுர வாசலிலே திரைப்படம் 1990ல் மலையாளத்தில் வெளிவந்த பாவம் பாவம் ராஜகுமாரன் படத்தின் ரீமேக்காகும். புகழ்பெற்ற இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த முதல் படம் கோபுர வாசலிலே. மலையாளத்தில் பழம்பெரும் நடிகர் ஸ்ரீனிவாசன் எழுதி நடித்த இத்திரைப்படத்தை கமல் இயக்கியிருந்தார்.
2001ல் விஜய், சூர்யா, ரமேஷ் கன்னா நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம், 1999ல் மலையாளத்தில் ஜெயராம், முகேஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் நடித்து வெளிவந்தது. மலையாளத்திலும் இத்திரைப்படத்தை இயக்குநர் சித்திக் தான் இயக்கியுள்ளார். தமிழ் மலையாளம் இரண்டிலும் இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.
தன் ஸ்டைலுக்கும் வேகத்திற்கும் உலகளாவிய ரசிகர் கூட்டத்தைச் சேர்த்த சூப்பர் ஸ்டாரும் ரீமேக் படங்களில் நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அவர் நடித்திருக்கிறார் என்கிறது இந்த கட்டுறை.
மலையாளத்தில் மோகன்லால், நெடுமுடி வேணு, ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தேன்மாவின் கொம்பத் என்கிற படத்தின் ரீமேக் தான் முத்து. தேன்மாவின் கொம்பத்தை இயக்கியது பிரியதர்ஷன். தமிழில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் முத்து திரைப்படத்தை இயக்கியிருந்தார். ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு முக்கிய வேடங்களில் நடித்திருந்த இத்திரைப்ப்டம் 100 நட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது
மலையாளத்தில் ஃபாசில் இயக்கிய அனியாதிபிராவு படத்தின் ரீமேக் தான் காதலுக்கு மரியாதை திரைப்படம். ஷாலினி இரண்டு மொழிகளிலுமே ஹீரொயினாக நடித்திருக்க, தமிழில் தளபதி விஜய், குஞ்சாக்கோ போபனை ரீபிலேஸ் செய்திருந்தார்.
காதலுக்கு மரியாதை திரைப்படம் ஷாலினிக்கு தமிழில் முதல் படமாகவும், நடிகர் விஜய்யை ஒரு ரொமான்டிக் ஹீரோவாகவும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது
இந்த வசனததை மறந்தவர் இல்லை. இதை இன்றும் பயன்படுத்தாதவரும் இல்லை. இது சுந்தரா டிராவல்ஸ் படத்தில், கடனை எப்போது திரும்ப தருவீர்கள் என்று மதன் பாப் கேட்கும்போது நகைச்சுவை நடிகர் வடிவேலு சொல்லும் பதில்.
மலையாளத்தில் வெளிவந்த ஈ பறக்கும் திலக்கா திரைப்படத்தின் ரீமேக் தான் சுந்தரா டிராவல்ஸ். 2002ல் முரளி, வடிவேலு நடிப்பில் வெளிவந்த சுந்தரா டிராவல்ஸ் இன்றும் பலரால் ரசித்து பார்க்கப்படுகின்ற, முகங்களை சுளிக்கவைக்காத நல்ல நகைச்சுவை கொண்ட படம்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான மற்றுமொரு ரீமேக் திரைப்படம். மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடித்த மணிசித்திரதாளு திரைப்படத்தின் ரீமேக் தான் சந்திரமுகி. 2005ல் வெளியான சந்திரமுகி 100 நாட்களுக்கு மேல் ஓடியது. மலையாளத்தில் ஒரு சைக்கலாஜிகல் திரில்லராக எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தமிழில் ஹாரர் டிராமாவாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது
எதிர்பாராதவிதமாக, தற்காப்புக்காக மகளும் மனைவியும் ஒரு கொலை செய்கிறார்கள். அதை மறைத்து என்ன நடந்தாலும் தன் குடும்பத்தை காப்பாற்ற போராடும் தந்தை/கணவன். இருக்கமான சூழல், சிறு பிழை நடந்தாலும் குடும்பத்துக்கு ஆபத்து, அதே சமயத்தில் நடந்த சம்பவம் யாருக்கும் தெரியவும் கூடாது.
இந்த கதாபாத்திரமாகவே திரிஷ்யம் திரைப்படத்தில் மோகன்லால் வாழ்ந்த்திருந்தார் என்று பலரும் புகழ, தமிழில் இன்னும் உயிர் கொடுத்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். பாபநாசம் அப்பா மகள் பந்தத்தில் வந்த ஒரு தனித்துவமான திரைப்படமாகவும் இருந்தது.
பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த மெம்மரீஸ் திரைப்படத்தின் ரீமேக் தான் ஆறாது சினம். ஜீத்து ஜோசஃப் இயக்கிய மெம்மரீஸ் திரைப்படத்தை தமிழில் அறிவழகன் இயக்கியிருந்தார்.
மகளையும் மனைவியையும் இழந்து, தான் மிக விரும்பிய காவல் துறை சேவையையும் விட்டுவிட்டு குடித்துக்கொண்டிருக்கும் ஒரு போலீச் அதிகாரி, கடத்தபட்டு ஒரே பாணியில் கொல்லப்படுகிற புதிதாக திருமணமான ஆண்களை சீரியல் கில்லிங் செய்யும் ஆசாமியை டிரேஸ் செய்து பிடிப்பது தான் கதை. 2016ல் இப்படம் வெளியானது.
மலையாளத்தில் ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நோக்கெத்தா தூரத்து கண்ணும் நாத்து திரைப்படம். தமிழில் நதியா, ஜெய்ஷங்கர், பத்மினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் பின்னர் பல 80ஸ் கிட்ஸின் கிரஷாக, டிரெண்ட் செட்டராக வலம் வந்த நதியாவின் முதல் தமிழ் திரைப்படமாகும்.
வழக்கமாக வரும் அம்மா, அப்பா, அண்ணன்-தங்கை சென்டிமென்ட் அல்லாமல், ஒரு பாட்டியின் ஏக்கத்தை எடுத்துக்காட்டிய அழகான திரைப்படம் பூவே பூச்சூடவா. இன்றுவரை இதே எமோஷ்னோடு எந்த படமும் வெளிவந்ததில்லை என்றால் அது மிகையல்ல.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust