ரன்பீர் கபூர் - ஆலியா பட் : என்னென்ன சொத்து இருக்கிறது தெரியுமா?
ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ஐந்தாண்டு கால டேட்டிங்கிற்கு பிறகு காதலித்து வந்தனர், தற்போது திருமணமும் ஆகிவிட்டது. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவருக்குமே திரைத்துறையில் புகழ்பெற்று, தனக்கென்ற பெயர்கள் உண்டு.
அதோடு இருவரும் புகழ்பெற்ற பாலிவுட் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். தம்பதிகள் இருவருமே தனித்தனியாகத் தங்களுக்கு எனப் ஒரு பெயரையும் அடையாளத்தையும் சம்பாதித்தும் உள்ளனர். இதனுடன் சில விலையுயர்ந்த சொத்துக்களையும் சம்பாதித்து வைத்திருக்கின்றனர்.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோருக்கு சொந்தமான 12 விலை உயர்ந்த பொருட்கள்
ரன்பீர் கபூர்:
ஆடம்பர அடுக்குமாடி
மும்பையில் 35 கோடி மதிப்பிலான ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு… வாஸ்து பாந்தரா பாலி மலையில், ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பை வைத்திருக்கிறார். 35 கோடிக்கு இந்த வீடு வாங்கப்பட்டது.
மேலும் இதைக் கௌரி கான் வடிவமைத்துள்ளார். வீட்டின் உள்ளே இன்ட்ரீயர் எல்லாம் மைல்டான பாஸ்டல் நிறங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உள்ளேயே ஒரு தியேட்டர் செட்-அப்பும் உள்ளது. அவரது இரண்டு நாய்க்குட்டிகளுக்காக ஒரு பெரிய பகுதியும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகவும் விலையுயர்ந்த ஸ்னீக்கர்கள் கலெக்ஷன்
ரன்பீர் கபூர் என்றாலே நினைவுக்கு வருவது, அவரது கேஷூவல் ஸ்டெயிலும் அவர் அணியும் அழகான ஸ்னீக்கர்ஸ் கலெக்ஷன்களும்தான். டிஎன்ஏ படி, நடிகர் ரன்பீர் நைக் எக்ஸ் ஆஃப்-ஒயிட் ஸ்னீக்கர்களை அணிந்திருப்பார். அதன் விலையோ ரூ. 2 லட்சத்து 74 ஆயிரம். மேலும், அவர் ரூ.81,823 மதிப்புள்ள நைக் ஏர்மேக்ஸ் 1 அட்மோஸ்-ம் வைத்திருக்கிறார். மேலும் சில இன்டர்வியூக்களில், அவர் சொன்னது “நான் ஒரு ஸ்னீக்கர் விரும்பி… நான் வழக்கமாக ஒவ்வொன்றிலும் இரண்டு ஜோடிகளை வாங்குவேன் - அவர்கள் சொல்வது போல், 'ஒன்று ராக் செய்ய, ஒன்று ஸ்டாக் செய்ய” என்கிறார் கபூர்.
50 லட்சம் மதிப்புள்ள டீலக்ஸ் வாட்ச்
ரன்பீர் கபூர் ஒரு வாட்ச் பிரியர்… ஆனால் அவர் வைத்திருக்கும் மிக நேர்த்தியான வாட்ச் கலெக்ஷன்களில் ஒன்று அவருக்கு அமிதாப் பச்சனால் பரிசாக வழங்கப்பட்டது. 2014 இல், பச்சன் அவருக்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ரிச்சர்ட் மில்லே RM 010 வாட்சை பரிசாக வழங்கினார். அவரது வாட்ச் கலெக்ஷனில் ரோலக்ஸ் முதல் ஹுப்லாட் வரையிலான பல்வேறு பிராண்ட்கள் உள்ளன. Richard Mille RM 010 என்பது ஒரு ஆட்டோமெட்டிக் வாட்ச்; 5 டைட்டானியம் பிரிட்ஜ்கள், ஸ்க்ரூ மற்றும் பேஸ்பிளேட் ஆகியவற்றுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்
இந்த SUVயும் 2017-இல் அவரது காஸ்ட்லி கலெக்ஷனில் சேர்க்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2.26 கோடியாகும். இது 3.0 லிட்டர் V6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 250bhp மற்றும் 600Nm டார்க் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது மணிக்கு 209kms வேகத்தில் செல்லும். இந்த காரில் எட்டு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் முழுநேர AWD அமைப்பும் உள்ளது. இந்த கார் 16 வகைகளில் வருகிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 2.31 கோடி முதல் ரூ. 3.41 கோடி வரை உள்ளது.
மெர்சிடிஸ் - பென்ஸ் G63 AMG
இந்த சூப்பர் மாடல் காரை சொந்தமாக வைத்திருக்கும் நாட்டில் உள்ள ஒரு சில பிரபலங்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். இந்த கார் 5.5 லிட்டர் V8 பெட்ரோல் எஞ்சினுடன் 563bhp மற்றும் 760Nm டார்க் கொண்டுள்ளது.
இதன் விலை 2.14 கோடி மதிப்புடையது. AMG ரைடு கன்ட்ரோல் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், வெப்பநிலை-கட்டுப்பாட்டு கப் ஹோல்டர், 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பனோரமிக் ஸ்லைடிங் சன்ரூஃப் போன்ற மற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
ஆடி R8
அலியா பட் உடன் இணைந்து பிரம்மாஸ்திராவில் விரைவில் நடிக்கவிருக்கும் ரன்பீர்… ஆலியாபட்டும் இதே ஜெர்மன் தயாரிப்பான சூப்பர் காரை வைத்திருக்கிறார். இது 5.2-லிட்டர் V10 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 602bhp மற்றும் 560Nm உச்சபச்ச பீக் டார்க் கொண்டது. இந்த கார் ரூ. 2.72 கோடிக்கு வருகிறது.
ஆலியா பட்
அழகான அடுக்குமாடி குடியிருப்பு
பாந்த்ராவில் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு அழகான அடுக்குமாடி குடியிருப்பு. இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கிய பிறகு, நடிகை ஆலியா வாஸ்து பந்த்ராவில் ஒரு இடத்தை வாங்கினார். அது ஒரு அபார்ட்மெண்ட் 2,460 சதுர அடி இருக்கும். ரன்பீர் கபூர் 7வது மாடியில் தங்கியிருக்கும் நிலையில், ஆலியா பட் 5வது மாடியில் ரூ.32 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார்.
ரூ 2 கோடி மதிப்பிலான இன்டீரியர்களுடன் கூடிய பிரமிக்க வைக்கும் பணியிடம்
2020 ஆம் ஆண்டில், அலியா பட் களத்தில் குதித்துத் தனது தயாரிப்பு நிறுவனமான ‘எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸை’ தொடங்கினார். எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ். 2,800 சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும். இந்த அலுவலகத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான இன்டீரீயர்களும் உள்ளன.
லண்டனில் ஒரு வீடு
அலியா எப்போதும் லண்டனில் ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். அதேபோல அந்தக் கனவை நிறைவேற்றிவிட்டார். ஆலியா சொன்னது. “லண்டனில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதை 2018 இல் நிறைவேற்றிவிட்டேன்.
அந்த வீடு கோவென்ட் கார்டனில் உள்ளது. என் சகோதரி பகுதி நேரமாக அங்கே வசிக்கிறார்.” UK ரியல் எஸ்டேட் இணையதளத்தின்படி, அந்த இடத்தின் விலை நிச்சயமற்றதாக இருந்தாலும், Covent Garden-இல் உள்ள ஒரு சொத்தின் சராசரி விலை £1,045,417 மற்றும் £3,200,000 (சுமார் ரூ. 10.3 கோடி முதல் ரூ. 31.6 கோடி) வரை இருக்கும்.
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்
ரன்பீர் கபூரைப் போலவே, ஆலியா பட்டும் 2019-இல் தனது கார் கலெக்ஷனில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரையும் சேர்த்தார். காரின் டீசல் பதிப்பு 3.0 லிட்டர் V6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அதிகபட்சமாக 240 Bhp மற்றும் 500 Nm மேக்ஸிமம் பவர் கொண்டுள்ளது.
BMW 7 சீரிஸ்
நடிகை BMW 7-சீரிஸ், 740 எல்டி வேரியண்ட்டை வைத்திருக்கிறார். அதன் விலை ரூ 1.37 கோடி. இந்த காரில் 3.0 லிட்டர் ட்வின்பவர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 6-சிலிண்டர் எஞ்சின் உள்ளது மற்றும் அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் பீக் டார்க் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆடம்பரமான வேனிட்டி வேன்
வேனிட்டி வேன் என்பது பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு மிக முக்கியமான முதலீடாகும். இது அவர்களின் தேவையும்கூட. பட்டின் வேனிட்டியை வடிவமைத்தவர், கௌரி கான்.
இது மிகவும் நேர்த்தியான அழகுடன் இருக்கும். டிஸ்கோவை நினைவூட்டும் வகையில் கண்ணாடிகளும், லைட்டுகளும் பொருத்தப்பட்டிருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

