சூரரை போற்று: சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்குமா? மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சூரரை போற்று படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் கடந்த 2020 நவம்பர் மாதம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
சூர்யா
சூர்யாடிவிட்டர்
Published on

68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை நான்கு மணிக்கு அறிவிக்கப்படவுள்ளன.

2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் இந்த விருதுக்கு தகுதிபெறுகின்றன. இந்நிலையில், சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2020ஆம் ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மறைந்த நடிகர் பூ ராமு ஆகியோர் நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

சூரரை போற்று படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் கடந்த 2020 நவம்பர் மாதம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில், இந்தியில் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் ரீ மேக் செய்யப்படவிருக்கிறது. அதில் சூர்யாவும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

Simplify Deccan நிறுவனத்தின் நிறுவனர், ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு தான் இத்திரைப்படம் கதை. Simply Fly: A Deccan Odyssey என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளை அடிப்படையாகக்கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.

சிறந்த நடிப்பு, சிறந்த தொழில்நுட்பம், சிறந்த கதை வசனம், சிறந்த இயக்கம் என அடுக்கடுக்காக நல்ல விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்களுக்குமே வருத்தத்தைத் தந்திருந்தது.

சூர்யா
விக்ரம் 3 : துரைசிங்கம் டூ ரோலெக்ஸ் - இதுதான் கதையா? மற்றும் லோகியின் ட்வீட்

78வது கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த 10 இந்தியத் திரைப்படங்கள் பட்டியலில் சூரரை போற்று இடம் பெற்று, திரையிடப்பட்டது. மேலும் 93வது ஆஸ்கர் விருதுகளிலும் திரையிடப்பட்டாலும், விருது பட்டியலுக்கு படம் தேர்வாகவில்லை.

SIIMA திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைப்படம் என பல விருதுகளை அள்ளியிருந்தது சூரரைப் போற்று!

உலக சினிமாவின் கவனத்திற்கு சூரரை போற்று சென்றிருந்தாலும், திரைப்படத்தில் மாறனின் கைக்கு எட்டும் வாய்ப்புகள் எல்லாம் தவறுவது போலவே இத்திரைப்படத்திற்கான உலகளாவிய அங்கீகாரமும் கைநழுவிக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளின் பட்டியல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என National Film Awards அறிவித்துள்ளது.

சூரரை போற்று திரைப்படத்திற்கும், படக் குழுவினருக்கும் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அளவுகடந்து இருக்கிறது.

சூர்யா
ஜெய் பீம் சர்ச்சை : சூர்யா - ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com