Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?
Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?Twitter

Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?

2003ம் ஆண்டு பிறந்த அப்து ரோசிக் சிறு வயதிலேயே ரிக்கெட்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய்க்கு சிகிச்சைப் பெற இவரது குடும்பத்தில் பொருளாதார வசதி இல்லாமல் போனது. இதுவே இவரது உயரம் குறையக் காரணம்.
Published on

அதுல் ரோசிக் இணையத்தில் அதிகம் தேடப்படும் பாடகராக இருக்கிறார்.

தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இவர் தஜிகிஸ் மொழியில் ராப் பாடல்களைப் பாடி பிரபலமானவர்.

சமூக வலைத்தள ட்ரெண்டுகளை பின் தொடர்பவர்கள் இவரை நிச்சயம் அறிந்திருப்பார்கள்.

இவர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணத்தில் பாடல் பாடி அசத்தியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வென்றார்.

டான் திரைப்படம் வெற்றி பெற்ற போது சிவகார்த்திகேயன் முன்னிலையில் பாடல் பாடி வைரலானார்.

இந்த ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் ஒருவராக இருக்கும் இவர் குறித்துக் காணலாம்.

19 வயதே ஆகும் இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகராக இருக்கிறார்.

3 அடி 1 இன்ச் உயரம் கொண்ட இவர் மிகக் குட்டையான பாடகர் என்பதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழைப் பெற்றுள்ளார்.

உலகிலேயே க்யூட்டான சிங்கர் இவர் என்பதும் தானே உண்மை!

2003ம் ஆண்டு பிறந்த அப்து ரோசிக் சிறு வயதிலேயே ரிக்கெட்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்த நோய்க்கு சிகிச்சைப் பெற இவரது குடும்பத்தில் பொருளாதார வசதி இல்லாமல் போனது. இதுவே இவரது உயரம் குறையக் காரணம்.

வறுமையில் இருந்த குடும்பத்தை தூக்கி நிறுத்த மிகச் சிறிய வயதிலேயே பாடத் தொடங்கிவிட்டார் ரோசிக்.

உயரம் குறைவு காரணமாக பள்ளியில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டார் ரோசிக்.

ஒரு கட்டத்தில் அவர் படிப்பை தொடராத அளவு மிகப் பெரிய பிரச்னையானது உருவகேலி.

Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?
கானிம் அல் முஃப்தா : குரான் ஓதி உலகக் கோப்பையைத் தொடங்கிவைத்த இளைஞர் யார்?

வளர்ந்த ரோசிக்குக்கு தெரிந்தது எல்லாம் பாடல்கள் மட்டும் தான்.

சமூக வலைத் தளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். குறிப்பாக அவரது பர்கர் உண்ணும் வீடியோ உலகமெங்கும் வைரலானது.

அப்போது வெளியுலகம் அப்து ரோசிக் என்ற இளைஞனின் வாழ்க்கையைக் கண்டுகொண்டது. அவரது பாடும் திறமையையும்!

அதன் பிறகு அப்து ரோசிக்கின் வாழ்க்கை முழுவதும் ஏற்றம் தான். உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து பாடல்கள் பாடி வருகிறார்.

Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?
Jhund : இவரின் நிஜ வாழ்க்கை கதைதான் அமிதாப் பச்சனின் ‘ஜுண்ட்’ - Inspiring Story

அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் இப்போதெல்லாம் பிரபலங்களுடனான செல்ஃபிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

அவரது வீட்டில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ஸ் கார் இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இவர் பிக்பாஸ் ஹிந்தியில் பங்கேற்றுள்ளார். இதுவே இந்த ஆண்டு அவர் பெரிய அளவில் பிரபலமடையக் காரணம்!

Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com