பல கோடி வரி பாக்கியா ? எஸ்.ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எஸ்.ஜே சூர்யா
எஸ்.ஜே சூர்யாTwitter
Published on

கடந்த (2002 - 2003 ) முதல் (2006 - 2007) வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கும் (2009 -10 ) ஆண்டு நிதி ஆண்டுகளுக்கும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனவும் வருமான வரியாக 7 கோடியே 57 லட்சம் ரூபாய் செலுத்த வருமான வரித்துறை சார்பில் நடிகர் எஸ்.ஜே சூர்யா மீது நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே சூர்யா சென்னை நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்

Law
LawTwitter

இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரிக்கணக்குக்கான மறுமதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே. சூர்யா சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், முறையான சோதனைக்கு பிறகே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக வருமானவரித்துறை சார்பில் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால், வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி அவரது மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.

எஸ்.ஜே சூர்யா
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை - வெளியானது சம்பள விவரம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com