Vijay: "பொறுப்பு வந்தது போல உணர்கிறேன்” கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் பேசியது என்ன?

பேசத் தொடங்கிய நடிகர் விஜய், “இது போன்ற நிகழ்வில் நான் முதல்முறையாக பேசுகிறேன். என் மனதில் ஏதோ பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி நான் உணர்கிறேன்” என்று கூறினார்.
Vijay: "ஆனா படிப்ப மட்டும்...” கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் பேசியது என்ன?
Vijay: "ஆனா படிப்ப மட்டும்...” கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் பேசியது என்ன?ட்விட்டர்
Published on

பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தார் நடிகர் விஜய்.

இந்த விருது வழங்கும் நிகழ்வானது, சென்னை நீலங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் செண்டரில் நடைப்பெற்று வருகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில் இருந்து பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மானவர்கள் உட்பட சுமார் 1500 மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகைகளை நடிகர் விஜய் வழங்கினார். பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், தான் மாணவனாக இருந்த சமயத்தில் நடந்த விஷயங்களை நினைவுக்கூர்ந்தார்.

பேசத் தொடங்கிய நடிகர் விஜய், “இது போன்ற நிகழ்வில் நான் முதல்முறையாக பேசுகிறேன். என் மனதில் ஏதோ பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி நான் உணர்கிறேன்” என்று கூறினார்.

மாணவனாக இருந்தபோது உங்களைப் போல முதலிடம் பிடிக்கும் மாணவனாக தான் இருக்கவில்லை எனவும், கல்வி ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தார்.

அப்போது, "நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க, படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது." என்ற அசுரன் பட வசனத்தை நடிகர் விஜய் பேசினார்.

மேலும், நாளைய வாக்காளர்களான நீங்கள் ஒருபோதும் காசுக்காக யாருக்கும் வாக்களிக்க கூடாது எனவும் அறிவுரைத்தார். கல்லூரிக்கு செல்லவுள்ள நீங்கள், வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கும் அதே நேரத்தில் தங்கள் பொறுப்பும், இலக்கும் என்ன என்பதை தெளிவாக முடிவு செய்யவேண்டும் என்றார்.

Vijay: "ஆனா படிப்ப மட்டும்...” கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் பேசியது என்ன?
”Vijay Uncle என்னைய பாக்க வாங்க”- அடம்பிடிக்கும் குழந்தைக்கு Video Call பேசிய நடிகர் விஜய்

இந்த கல்வி விருது வழங்கும் விழாவில், முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்படுகிறது.

ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்ள போக்குவரத்து வசதிகளையும், உணவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

வரும் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை ஒட்டி முதல் பாடலான, “நா ரெடி” பாடல் வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay: "ஆனா படிப்ப மட்டும்...” கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் பேசியது என்ன?
Vijay: தமிழ் சினிமாவில் Highest paid நடிகர் விஜய் - சம்பளம் ரூ.200 கோடியா? உண்மை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com