Varisu: "1990ல எனக்கு போட்டியா ஒருத்தர் இருந்தாரு" வைரலாகும் விஜய்யின் குட்டி ஸ்டோரி

இந்த முறையும் விஜய்யின் பேச்சுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மேடையில் விஜய் பேசிய விஷயங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன
விஜய்
விஜய் ட்விட்டர்
Published on

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'வாரிசு'. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் தமன் பின்னணி இசையமைத்திருக்கிறார்

பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடந்தது. சென்னையின் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவிற்கு ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே எதிர்பார்ப்புகள் கூடி விடும். இதற்கு காரணம், நடிகர் விஜய்யின் "குட்டி ஸ்டோரி".

இந்த முறையும் விஜய்யின் பேச்சுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மேடையில் விஜய் பேசிய விஷயங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன

விஜய்
விஜய் : ரசிகர்களுடன் நடைபெறும் சந்திப்பு - காரணம் என்ன?

படக்குழுவினர் பேசி முடித்து, படத்தின் பாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் நடிகர் விஜய் பேசினார். மேடைக்கு வந்ததும் வராததுமாக முதலில், ரஞ்சிதமே பாடல் பாணியில் ரசிகர்களுக்கு Flying Kiss கொடுத்தார் விஜய்.

"என் ரசிகர்களுக்கு கிஸ் கொடுக்க ஒரு புது ஸ்டைல் எனக்கு கிடைச்சிருக்கு" எனவும் குறிப்பிட்டார்

இதனை தொடர்ந்து பேசிய அவர், விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்த தானம் செய்து வருவது தனக்கு பெருமையாக இருக்கிறது என கூறினார். "ரத்த தானம் ரொம்ப முக்கியம். ரத்ததிற்கு சாதி மத வேறுபாடு கிடையாது. அதை பார்த்து நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்

அதன் பிறகு பேசிய விஜய், தனக்கு போட்டியாக யாரை பார்க்கிறார் என்பது குறித்து மனம் திறந்தார். 1990களில் தனக்கு போட்டியாக ஒரு நடிகர் வந்ததாகவும், போகப் போக இருவருக்குள்ளுமான போட்டி வலுவடைந்ததாகவும் சொல்லியிருந்தார்.

"அந்த நடிகர விட எப்படியாவது அதிக வெற்றி அடையணும்னு கடுமையா போராடினேன். நம்ம எல்லாருக்கும் அப்படிப்பட்ட போட்டியாளர் வேணும். அவர் பேர் ஜோசப் விஜய்!" என்றவர், நீங்கள் எப்போதும் உங்களுடன் போட்டி போடுங்கள் என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “நம்ம போகிற பாதை நிறைவா இருக்கணும்னா நாம தேர்ந்தெடுக்கிற பாதை சரியா இருக்கணும். நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றியை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும். தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும்.” என பேசினார்.

விஜய்
2022ல் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள்: 15வது இடத்தில் நடிகர் விஜய் - முதலிடத்தில் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com