விஜய் : ரசிகர்களுடன் நடைபெறும் சந்திப்பு - காரணம் என்ன?

வாரிசு படத்தை துணிவை விட சிறந்த வெற்றிப்படமாக்குவதற்கே விஜய் இந்த சந்திப்பை மேற்கொள்கிறார் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
விஜய் : ரசிகர்களுடன் நடைபெறும் சந்திப்பு - காரணம் என்ன?
விஜய் : ரசிகர்களுடன் நடைபெறும் சந்திப்பு - காரணம் என்ன?ட்விட்டர்
Published on

நடிகர் விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் என்ன மாதிரியான விஷயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் இந்த சந்திப்பு நிகழும் தருணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் பிற மாவட்ட நிர்வாகிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 55 நாட்களில் வாரிசு படம் வெளியாக இருப்பது கவனிக்கத்தக்கது.

வாரிசு படத்துடனே துணிவு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. பொதுவாக இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்களை ஒரே நேரத்தில் திரையரங்குகளை அடையும் போது ரசிகர்களிடையே மோதல் ஏற்படும். ரசிகர்கள் அமைதியாக நடந்துகொள்ள வேண்டும் என ஏற்கெனவே ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனை அழுத்தமாக விஜய் இந்த சந்திப்பின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக படங்கள் வெளியாவதற்கு முன்னதாக ரசிகர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வது ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும். இதன் மூலமாக படமும் வெற்றிபெரும். வாரிசு படத்தை துணிவை விட சிறந்த வெற்றிப்படமாக்குவதற்கே விஜய் இந்த சந்திப்பை மேற்கொள்கிறார் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

தமிழில் தொடர்ந்து பல படங்களை வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்களின் ஆதர்சமாக இருக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாரிசு படத்தை வெளியிடவில்லை என சில நாட்களுக்கு முன்னர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார் உதயநிதி.

இந்த நிலையில் வாரிசு படத்தை மாஸ்டர் பட விநியோகிஸ்தரான செவன் ஸ்டூடியோஸ் விநியோகிக்க உள்ளனர்.

விஜய் : ரசிகர்களுடன் நடைபெறும் சந்திப்பு - காரணம் என்ன?
"தளபதி விஜய் சுவையான உணவளித்தார்"- சென்னை அனுபவங்களை ட்வீட் செய்த ஷாருக் கான்

இன்னொரு பக்கம் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு மொழிப்பதிப்பு வெளியாவதிலும் சிக்கல் நிலவுகிறது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் பண்டிகை நாட்களில் பிற மொழிப்படங்கள் வெளியாகக்கூடாது என்று கூறி வருகின்றனர். தெலுங்கு தயாரிப்பாளர்கள் இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என சிமான் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அறுவுறுத்தியிருக்கின்றனர்.

ஆனால் இந்த சிக்கல் வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு எதிரான நடவடிக்கையே அன்றி வாரிசு படத்துக்கோ, விஜய்க்கோ அல்லது தமிழ் திரைப்படங்களுக்கோ எதிரானது அல்ல என்றும் இது சில நாட்காளில் சுமூகமாக தீரக்கூடிய பிரச்னை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

விஜய் : ரசிகர்களுடன் நடைபெறும் சந்திப்பு - காரணம் என்ன?
வாரிசு vs துணிவு பொங்கலுக்கு உறுதி: இதுவரை மோதிக்கொண்ட விஜய், அஜித் படங்கள்- வென்றது யார்?

இந்த நிலையில் வாரிசு படத்துக்கு அடுத்ததாக விஜய் நடிக்கும் திரைப்படம் விக்ரம், கைதி திரைப்படங்களுடன் தொடர்புடைய LCU படமாக தான் உருவாகிறது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

விஜய் : ரசிகர்களுடன் நடைபெறும் சந்திப்பு - காரணம் என்ன?
Love Today : Short Film முதல் திரைப்படம் வரை ப்ரதீப் வைத்த கனெக்ஷன்- விஜய் கொடுத்த அனுமதி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com