Yash
YashTwitter

Yash : மாஸ் ஹீரோ vs காதல் மன்னன் - களவாணி பட ரீமேக்கில் நடித்த யாஷ்

கே.ஜி.எஃப் படத்தில் மாஸ் ஹீரோவாக நடித்துள்ள யாஷ், இதற்கு முன்னர் காதல் மன்னாக வலம் வந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Published on

2008ம் ஆண்டு வெளியான மோகின மனசு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் யாஷ். கன்னட மொழி பல படங்களை நடித்திருந்தாலும், உலகளவில் மெகா ஹிட் அடித்த கே.ஜி.எஃப் படம் தான் நடிகர் யாஷ் திரைத்துறையில் திருப்புமுனையாக அமைந்தது.

கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டாராக வலம் வரும் நடிகர் யாஷ், KGF படம் மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமானார். இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Yash
KGF 2 vs Beast : இது தமிழருக்கு அழகல்ல - பேரரசு
Kirataka
KiratakaTwitter

இப்படி மாஸா கிளாஸா வலம் வரும் யாஷ், கே.ஜி.எஃப் படத்திற்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று கிராடகா, இந்த படம் தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த களவாணி படத்தின் கன்னட ரீமேக் ஆகும்.

இப்படத்திலும் யாஷுக்கு ஜோடியாக ஓவியா தான் நடித்திருந்தார். தமிழில் ஓவியாவுடன் விமல் ரொமான்ஸ் செய்ததைப் போல் கன்னடத்தில் யாஷ் செய்துள்ளார். அப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதைப்பார்த்த ரசிகர்கள் ’ராக்கி பாயா' இது? என ஆச்சர்யமாக கேட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Yash
Yash : நாடக கலைஞர் முதல் KGF வரை - யார் இந்த யாஷ்?
logo
Newssense
newssense.vikatan.com