பார்வதி, நித்யா மேனன்
பார்வதி, நித்யா மேனன்twitter

Pregnancy டெஸ்ட்டை போஸ்ட் செய்த பார்வதி, நித்யா மேனன் - பின்னணி என்ன?

அந்த பதிவின் தலைப்பில் "அற்புதம் தோடங்குகிறது" (And, the wonder begins) என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
Published on

நடிகைகள் நித்யா மேனன், பார்வதி ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புதிய போஸ்ட் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் நித்யா மேனன் மற்றும் பார்வதி திருவோத்து. இவர்கள் இருவரும் சற்று நேரம் முன்பு இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தனர். அதில் Pregnancy Test Strip மற்றும் அருகில் குழந்தைகள் வாயில் வைக்கும் nipple ஒன்று இருந்தது. அந்த ஸ்ட்ரிப்பில் கர்ப்பம் தரித்திருப்பதற்கான அறிகுறியாக இரண்டு கோடுகள் இருந்தது.

பார்வதி, நித்யா மேனன்
Bigg Boss Janani : கொஞ்சும் ஈழத்தமிழ், கொஞ்சம் வாயாடி - ஜனனியின் பின்னணி என்ன?

அந்த பதிவின் தலைப்பில் "அற்புதம் தோடங்குகிறது" (And, the wonder begins) என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இருவரும் ஒரே சமயத்தில் இந்த பதிவை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் குழப்பத்தை விதைத்தனர். இவர்களில் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறாரா? இருவரும் கர்ப்பமா? இல்லை இவர்கள் அல்லாமல், குடும்பத்தினர், நண்பர்கள் வட்டாரத்தில் யாருக்கேனும் குழந்தை பிறக்கப்போகிறதா என்ற கேள்விகள் எழுந்தன.

திரைத்துறையை சேர்ந்தவர்களோ அந்த பதிவின் கீழ் கமென்ட்களை பதிவிட்டிருந்தனர். இறுதியில் மர்மம் அவிழ்ந்தது. இது இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு. இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

படம் கர்ப்பிணி பெண்களை மையமாக கொண்டு இருக்கும் என்பதால் இந்த புகைப்படத்தை அவர்கள் பகிர்ந்ததாகவும் தெரிவித்தனர். இந்த படத்திற்கு வண்டர் வுமன் (Wonder Women) என தலைப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பெங்களுரு டேஸ் திரைப்படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன். அந்த படத்திலும் நித்யா மேனன் மற்றும் பார்வதி திருவோத்து நடித்திருந்தனர்.

பார்வதி, நித்யா மேனன்
மன அழுத்தம் டு காதல் திருமணம்; காப்பகத்தில் மலர்ந்த காதல் - ஒரு நெகிழ்ச்சி கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com