ஒயின் ஷாப் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரீநிதி - நிலைமைக்கு யார் காரணம்?

நக்‌ஷத்ரா உட்பட பல நெருங்கிய நண்பர்களும் ஸ்ரீநிதியின் சூழலை புரிந்து கொள்ளாமல் சண்டையிட்டதால், ஸ்ரீநிதி கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார். அதன் விளைவாக தன் உடலில் தானாகவே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு அதனை இன்ஸ்டாவிலும் பதிவிட்டார்.
 நடிகை ஸ்ரீநிதி
நடிகை ஸ்ரீநிதிTwitter

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநிதி, நேற்று மதுபான கடைக்குச் சென்று அங்கு மதுபானங்கள் வாங்கியதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட வெறும் வாய்க்கு அவள் கிடைத்தது போல அவர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டது.

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த யாரடி நீ மோகினி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீநிதி. சென்னையைச் சேர்ந்த இவருக்கு சின்னதிரையில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் இன்ஸ்டாவில் போட்டோஷூட், குறும்படம் என பிஸியாக இருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் வள்ளித்திருமணம் சீரியலின் நாயகி நக்‌ஷத்ரா தான் இவரின் பெஸ்ட் பிரண்ட். இதற்கு முன்னர் பிக் பாஸ் புகழ் கேப்ரில்லா உடன் நட்பாக இருந்தார். ஆனால் நக்‌ஷத்ரா உடன் நெருங்கிப் பழக ஆரம்பித்ததால், கேபி உடனான நட்பில் பிரச்சனை வந்துவிட்டது. அண்மையில் நக்‌ஷத்ராவுக்கும் ஸ்ரீநிதிக்கும் பெரிய கருத்து வேறுபாடு உருவாகி, சண்டை போட்டுப் பிரிந்துவிட்டனர். மேலும் இருவரும் இன்ஸ்டாவில் அன்ஃபாலோவில் உள்ளனர்.

 நடிகை ஸ்ரீநிதி
நடிகை ஸ்ரீநிதிTwitter

ஸ்ரீநிதியின் தந்தை மறைவுக்குப் பின்னர் அவரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஸ்ரீநிதிக்கு உறுதுணையாக இல்லை. எனவே தனி ஆளாகச் சம்பாதித்து குடும்பத்தைப் பார்த்து வருகிறார் ஸ்ரீநிதி. இந்நிலையில், ஸ்ரீநிதியின் அம்மா ராஜேஷ்வரி உடல்நிலை சரியில்லாதவர், அக்கா மாற்றுத்திறனாளி. இதனால் ஒட்டுமொத்த குடும்ப பாரமும் ஸ்ரீநிதியில் தலையில் விழுந்து விட்டது.

இதனால் ஆறுதலுக்காக நட்பு வட்டத்தைப் பெரிதும் சார்ந்திருந்தார். நக்‌ஷத்ரா உட்பட பல நெருங்கிய நண்பர்களும் ஸ்ரீநிதியின் சூழலை புரிந்து கொள்ளாமல் சண்டையிட்டதால், ஸ்ரீநிதி கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார். அதன் விளைவாக தன் உடலில் தானாகவே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு அதனை இன்ஸ்டாவிலும் பதிவிட்டார். நான் டிப்ரஷனில் இருக்கிறேன் என்று கலங்கி போஸ்ட் போட்டார். மேலும் யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கையில், பல பர்சனல் விஷயங்களையும் பகிர்ந்திருந்தார் ஸ்ரீநிதி.

 நடிகை ஸ்ரீநிதி
நடிகை ஸ்ரீநிதிTwitter

``என் அம்மா ஒரு அப்பாவி, எனக்காக நிறையக் கடன் வாங்குறாங்க. அவங்கள சிலர் பைத்தியம்னு சொல்றாங்க. என் அம்மா என்னை புரிஞ்சிக்கல. நான் பார்ட்டிக்கு போறேன். தப்பு பண்றேன்னு சொல்றாங்க. வாரம் முழுக்க உழைச்சிட்டு, ஒரு நாள் பார்ட்டிக்கு போவது தப்பா? என் நண்பர்களும் என்னை சரியா புரிஞ்சிக்கல’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீநிதியில் இந்த நிலை பரிதாபமாக இருப்பதாகப் பலர் கமெண்ட் செக்‌ஷனில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் நேற்று வெளியிட்ட வீடியோவால் தன் மீதிருந்த நல்ல அபிப்ராயங்களை மாற்றிவிட்டார் ஸ்ரீநிதி.

மேலும் ``தன் இந்த நிலைக்கு தன் நெருங்கிய தோழி நக்‌ஷத்ரா தான் காரணம் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அது தவறு, அவருக்கும் எனக்கும் சண்டை தான். ஆனால் அவரை நான் எந்த விதத்திலும் விட்டுத் தர மாட்டேன். அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவருக்குத் தொந்தரவு கொடுப்பவர்களைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போக கூட தயார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீநிதி.

இன்ஸ்டாவில் கிடைத்த நண்பர்களுடன் ஒயின் ஷாப்புக்கு சென்று தன் காதலனுக்காக பாட்டில் பாட்டில் ஆக மதுபானம் வாங்கி, அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாவிலும் பதிவிட்டிருக்கிறார். என் காதலருக்கு பிறந்த நாள், அதனால் அவருக்கு பிடிச்ச சரக்கு வாங்கி தரேன். ‘’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ``பெண்கள் மதுபான கடைக்கு அவர்களது உரிமை. ஆனால் மதுபானம் யார் அருந்தினாலும் தவறு தான். சமூகத்தின் முக்கிய இடத்தில் இருக்கும் ஒருவர் இப்படி மதுபான கடையில்; நிறைய பாட்டில்களை வாங்கி வீடியோ போட்டால் அவரை பின் தொடர்பவர்களின் பலரின் மனநிலையும் அப்படியே ஆகும்’’ என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

 நடிகை ஸ்ரீநிதி
இங்கிலாந்து : பூனையைத் திருமணம் செய்து கொண்ட பெண்மணி - இதெல்லாம் காரணமா?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com