Deborah Hodge
Deborah HodgeTwitter

இங்கிலாந்து : பூனையைத் திருமணம் செய்து கொண்ட பெண்மணி - இதெல்லாம் காரணமா?

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது வளர்ப்பு பூனையைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Published on

இங்கிலாந்தின் சிட்காப் எனும் பகுதியில் வசித்து வருபவர் தெபொரா (வயது 40). இவர் இந்தியா எனப் பெயருடைய பூனை ஒன்றைச் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.

அவர் வசித்து வரக்கூடிய வீட்டின் உரிமையாளர் அவருடைய பூனையை அங்கு இருக்க அனுமதிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அந்த பூனையை தன்னுடனே வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட தெபொரா பூனையைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.Deborah Hodge

Deborah Hodge
Deborah HodgeTwitter

இது குறித்துக் கூறிய தெபொரா நான் எனது இரண்டு குழந்தைகளை இழந்துள்ளேன். அதனால் எனது பூனையை இழந்துவிடக்கூடாது என்பதற்காகத் திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்றார். மேலும் அது எனது வளர்ப்பு விலங்கு மட்டுமல்லாமல் எனது பிள்ளையைப் போலப் பார்த்துக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதன் மூலம் எங்களை இனி யாரும் பிரிக்க முடியாது என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இருவரும் மணப்பெண் மணமகன் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Deborah Hodge
அமெரிக்கா : ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை - எப்படி சாத்தியம் ?
logo
Newssense
newssense.vikatan.com