ஏஜெண்ட் டீனா : விக்ரம் திரைப்படத்தில் தெறியாய் இருந்த இந்த Agent Tina யார்?

நேற்று வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் அதிரடிக் காட்டிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில், அனைத்து காட்சிகளுமே ரசிகர்களை சிலிர்த்துபோய் சில்லறை தெறிக்கவிட, வீட்டில் பணிப்பெண்ணாக அமைதியாய் இருந்து, ஏஜென்ட் டீனாவாக விஸ்வரூபம் எடுத்த நடனக் கலைஞர் வசந்தி தான் இன்று டாக் ஆஃப் தி டவுன்
ஏஜெண்ட் டீனா
ஏஜெண்ட் டீனாVikram

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஜூன் மூன்றாம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளிவந்தது விக்ரம் திரைப்படம். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கு பிறகு, நான்கு வருடங்கள் கழித்து வெளியாகிறது கமலின் திரைப்படம்.

கற்பனைக்கு மீறிய ஸ்டார் காஸ்ட், மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்கள், வெளிவந்த 3 படங்களில் 2ல் டாப் ஹீரோ, 4வது படத்தில் உலக நாயகன் என தொட்டதெல்லாம் பொன்னாக இருந்தது லோகேஷுக்கு.

2020ல் டீசர் வெளியானதிலிருந்து எப்போது திரைப்படம் வருமென எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு, ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் திரில்லராக விக்ரம் படத்தை கொடுத்திருந்தார் லோகேஷ்.

Vasantjhi
VasantjhiTwitter

திரையுலகில், இனி இவர் செய்ய என்ன தான் மிச்சம் இருக்கிறது என்று கேட்கும் அளவிற்குத் தீர்க்கதரிசியாக இருக்கும் கமலுக்கு, இப்படி ஒரு screen presence கொடுத்து அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த லோகேஷ், ஏஜென்ட் டீனாவின் கதாபாத்திரத்தால் கூடுதல் அப்ளாஸ் அள்ளுகிறார்.

Vasanthi
VasanthiTwitter

யார் இந்த ஏஜென்ட் டீனா?

திரைப்படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றும் வசந்தி தான் ஏஜென்ட் டீனா.


நடனத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட வசந்தி, குழு நடனக் கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி, அவரது திறமையால், பல நடன இயக்குநர்களுடன் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார்.

நயன்தாரா, விஜய், அஜித், சூர்யா என டாப் ஹீரோக்களுக்கு இவர் கோரியோகிராப் செய்துள்ளார். 30 வருட அனுபவம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள வசந்தி, விக்ரம் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

Vasanthi with Udhayanidhi Stalin
Vasanthi with Udhayanidhi StalinTwitter

2021ல் வெளியான மாஸ்டர் திரைப்படம் மூலம் இயக்குநர் லோகேஷுக்கு அறிமுகமானார் வசந்தி. தற்போது டான்ஸ் மாஸ்டர் தினேஷுக்கு அசிஸ்டன்ட் ஆக இருக்கும் இவர், தன் துறு துறு குணத்தால், அனைவரையும் இம்ப்ரஸ் செய்ய, லோகேஷ் அழைத்து இவருக்கு இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார்.


வெறும் நான்கு காட்சிகளில் மட்டுமே தோன்றும் வசந்தியின் அதிரடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன், ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சந்தனத்தின் (விஜய் சேதுபதி) ஆட்களுக்குமே ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் தான். 4 முதல் 5 நிமிடங்களுக்கு ஒரு கம்ப்லீட் ஆக்ஷன் காட்சியை வடிவமைத்திருக்கிறார் லோகேஷ் வசந்திக்கு.

வீரம் படத்தில், "அடிக்க அடிக்க எந்திரிச்சு வந்துட்டே இருக்கியே! யாரு டா நீ" என்று வில்லன் அஜித்தைப் பார்த்துக் கேட்பது போல வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருக்கையில், அவிழ்ந்த முடியை எடுத்து கொண்டை போடும் போது டரான்டினோ படத்தில் வருவது மாதிரி, Agent Tina, SPY, Batch 1986, என்று கார்ட் திரையில் தோன்ற, சிங்கப் பெண்ணாகத் தெறிக்கவிட்டார் வசந்தி.

இவரது கதாபாத்திரத்தை பாராட்டி மீம்களும் சமூக வலைத்தளங்கலில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது


தான் விக்ரம் படத்தில் நடித்த அனுபவங்களைப் பூரித்து பகிர்ந்துகொண்ட வசந்தி, " என்ன கொன்னுடாங்க. இல்லனா விக்ரம் 3 -லையும் நடிச்சிருக்கலாம்னு ஒரு வருத்தம் தான்" என்று ஜாலியாக குறிப்பிட்டார்

ஏஜெண்ட் டீனா
Vikram Movie Review: விக்ரம் திரைப்பட விமர்சனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com