Vikram Movie Review: விக்ரம் திரைப்பட விமர்சனம்

யார் போதைப் பொருளைக் கடத்தியது, கொலைகளை செய்வது யார் என்கிற பரபர கதைக்குத் துப்பாக்கி, தோட்டாக்கள் கொண்டு தனது பாணியில் விறுவிறு திரைக்கதை அமைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஹீரோயின் இல்லாத, வயதானாலும் கம்பீரம் குறையாத பழைய விக்ரமாகவே 2k கிட்ஸுக்கும் அறிமுகமாகியிருக்கிறார் கமல்.
Vikram
VikramTwitter

நடிகர்கள் : கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி நாராயணன், செம்பன் வினோத் ஜோஸ், ஜாபர் சாதிக், சம்பத் ராம், ஹரீஷ் பேரடி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா, மைனா நந்தினி, மகேஷ்வரி, அனிஷ் பத்மநாபன், ஹரிஷ் உத்தமன், காயத்ரி சங்கர், மாரிமுத்து, ரமேஷ் திலக், அருள் தாஸ், கோகுல் நாத், ஆன்டனி வர்கீசி, ஸ்வதிஷ்டா கிருஷ்ணன்

போதையில்லாத சமூகத்தை உருவாக்க விரும்பும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு ஏற்படும் இழப்புகள், அதை அவன் எவ்விதம் எதிர்கொள்கிறான் என்பதுதான் விக்ரம் படம். இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமிருந்து மற்றுமொரு ஓர் இரவுப் படம். ஓர் இரவில் பல லட்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் காணாமல் போகிறது. அதையொட்டி ஒரு முகமூடி கும்பல் வரிசையாகக் கொலைகள் செய்து வீடியோ வெளியிடுகிறது. யார் போதைப் பொருளைக் கடத்தியது, கொலைகளை செய்வது யார் என்கிற பரபர கதைக்குத் துப்பாக்கி, தோட்டாக்கள் கொண்டு தனது பாணியில் விறுவிறு திரைக்கதை அமைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தன் வழக்கத்தை மீறிய ஒரு புதிய கமல் ஹாசனை இப்படத்தில் பார்க்க முடிந்ததே படத்தின் மிகப் பெரிய பலம். ஹீரோயின் இல்லாத, வயதானாலும் கம்பீரம் குறையாத பழைய விக்ரமாகவே 2k கிட்ஸுக்கும் அறிமுகமாகியிருக்கிறார் கமல். படத்தில் தன் பங்கு என்ன என்பதைக் கச்சிதமாகப் புரிந்து உடன் நடித்த கலைஞர்களுக்கும் சமபங்களித்த கதையைப் புரிந்து நடித்து அசத்தியிருக்கிறார்.

Kamal Hassan
Kamal HassanVikram

லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பட பவானியை மறக்கச் செய்து சந்தனமாக அச்சத்தைக் கூட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. உடல் மொழி, பேச்சு என அனைத்திலும் ஒரு புது பாணியை வெற்றிகரமாகக் கையாண்டு அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். கூலிங் கிளாஸைக் கழட்டாத தன் உக்கிர பார்வையால் காட்சிகளில் வீரியத்தைக் கூட்டியிருக்கிறார். வெல் டன் மக்கள் செல்வன்.

Vikram
விக்ரம் படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் தெரியுமா? | Cast and Crew Complete List

பகத் பாசில் இதுவரை மலையாளம் தவிர்த்து பிறமொழிப் படங்களில் நடித்திருந்தாலும் இது அவரின் முக்கிய சினிமா. அந்த அளவிற்கு அசத்தலாக நடித்திருக்கிறார். கறாரான உடல் மொழி, தீர்க்கமான பார்வை என அமர் கதாபாத்திரத்தில் படம் முழுக்க ரணகளப்படுத்தியிருக்கிறார். நரேன், செம்பன் வினோத், ஜாபர், வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்திருப்பவர், இளங்கோ குமரவேல் எனப் படத்தில் காஸ்டிங்தான் படத்தின் ஆகப் பெரும் பலம். ஒவ்வொரு கதாபாத்திரமும் தேவையறிந்து கச்சிதமாக எழுதி அதைத் திரையிலும் கொண்டு வர உழைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Vijay Sethupathy and Fahadh Faasil
Vijay Sethupathy and Fahadh FaasilVikram

இரவில் நடக்கும் கதைக்கு தன் கேமராவால் நியாயம் செய்திருக்கிறார் கிரிஷ் கங்காதாரன். சண்டைக்காட்சிகளில் கேமிங் போன்ற அவரது கேமரா கோணங்கள் காட்சிகளை நம்பகத்தன்மையாக்கி இருக்கிறது. படத்தின் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். துப்பாக்கி தெறித்தாலும் சரி, அதிரடி சண்டைகளானாலும் சரி அதைத் தேவைக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார்கள். சண்டை, எமோஷன் என பரபரப்பான படத்தின் பதைபதைப்பை குறையாமல் பார்த்துக்கொண்டதில் எடிட்டர் பிலோமின் ராஜின் பங்களிப்பு பெரியது.

Vikram
உலகச் சினிமா : நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய 60 இரானிய படங்கள் | Iran Movies

ஆரம்பிக்கலாங்களா தீம் தொடங்கி, பத்தல பத்தல பாடல் வரை எனர்ஜியேத்தி யங் கமலை கண்முன் நிறுத்தியதில் இசையமைப்பாளர் அனிருத்தின் பங்கு பெரியது. விறு விறு காட்சிகளில் பின்னணி இசையில் கூடேற்றியிருக்கிறார். இதற்குமுன் சொன்ன ஓர் இரவு கதை, அதே போதைப் பொருள் மிஸ்ஸிங் என தன் டெம்பிளேட்டில் களமிறங்கியதோடு, ஃபேன் பாய் மொமன்ட்டுடன் படத்தை இயக்கிய லோகேஷ், கொஞ்சம் தப்பியிருந்தாலும் நமக்குப் பொருந்திப்போகாத மேற்கத்திய உணவாகியிருக்கும் படத்தை, கிடா வெட்டி பிரியாணி சமைத்து மல்டி ஸ்டார் கதையில் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Vikram
விக்ரம் கமல் : IMDB பரிந்துரைக்கும் கமலின் 30 சிறந்த படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com