பொன்னியின் செல்வன் : ட்ரோலில் சிக்கிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் - என்ன காரணம்?

நிமோனியா, இரத்த உறைவு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சிக்கல்கள் வரக்கூடும். தோலின் கீழ் நீர்கட்டுதல், லேசான இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் அல்லது இரத்தமாற்றம் தேவைப்படும் என்கின்றனர்.
Aishwarya Rai
Aishwarya Rai Twitter
Published on

பொன்னியின் செல்வனின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் ட்ரோல்களில் சிக்கியுள்ளார். அழகுக்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டாரா என்ற பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்றுப் படமான பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் கலந்துக் கொண்ட நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டது.

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் வைரலாதையடுத்து அவர் பல கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

அவரது தோற்றத்திற்காக அவர் அவதூறாகப் பேசப்பட்டது மட்டுமின்றி, ஐஸ்வர்யா ராய் அழகுக்காக அறுவை சிகிச்சைக்கு செய்துகொண்டதாகப் பரவலான கருத்துகள் பரவி வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலும், ஐஸ்வர்யா கேன்ஸுக்குச் சென்றபோது, ​​​​அவர் இதேபோல ட்ரோல் செய்யப்பட்டார்.

Aishwarya Rai
ஜப்பான் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட் நடிகைகளின் பாடல்களை recreate செய்யும் பெண்| Video

ஒப்பனை அறுவை சிகிச்சை என்றால் என்ன?

ஒப்பனை அறுவை சிகிச்சை என்பது ஒரு நபருடைய தோற்றம் அல்லது வயதான அறிகுறிகளை நீக்குவதையே ஒரே நோக்கமாகக்கொண்டு நிகழக்கூடிய ஒரு விருப்பமான செயல்முறை ஆகும். இவை சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

கண்களுக்குக் கீழே உள்ள பகுதியை தூக்குதல், மூக்கை வடிவமைத்தல் மற்றும் உதடுகளை மாற்றி வடிவமைத்தல் எனப் பல விஷயங்களை இந்த பிளாஸ்டிக் சர்ஜெரி மூலம் செய்துகொள்கின்றனர்.

மிகவும் பிரபலமான ஒப்பனை அறுவை சிகிச்சை முறைகள்:

போடோக்ஸ்

போடோக்ஸ் என்பது சுத்திகரிக்கப்பட்ட புரதத்தை முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் ஊசி மூலமாக தசைகளில் செலுத்தப்படும் சிகிச்சை முறையாகும்

இது தவிர,

கன்னம் அறுவை சிகிச்சை, புருவம் தூக்குதல், முக சுருக்கம், லேசர் முடி அகற்றுதல், கண் இமை அறுவை சிகிச்சை, உடலின் பல பகுதிகள் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

Aishwarya Rai
31,000 ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்தனரா குகை மனிதர்கள் ? ஆய்வில் வெளியான தகவல்

ஒப்பனை அறுவை சிகிச்சையில் உள்ள பாதிப்புகள் என்னென்ன?

எந்தவொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இரத்தக் கட்டிகள் போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேயோ கிளினிக்கின் படி,

நிமோனியா, இரத்த உறைவு சில உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சிக்கல்கள் வரக்கூடும்.

தோலின் கீழ் நீர்கட்டுதல், லேசான இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் அல்லது இரத்தமாற்றம் தேவைப்படும் என்கின்றனர்.

நரம்பு சேதத்தால் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு, இது நிரந்தரமாக இருக்கலாம்

எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com