இந்தோனீசிய குகையில் 31000 ஆண்டுகள் பழமையான, மருத்துவ ரீதியாக கால்களை வெட்டி எடுத்த மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்தோனீசியாவின் போர்னியாவில் உள்ள லியானோ டேபோ என்று குகையில் கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஒரு சிறுவனின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.
இதை ஆய்வு செய்து பார்க்கும்போது அது 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் எலும்புக்கூடு என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அந்த எலும்புக்கூட்டில் இடதுபுற காலுக்கு கீழே உள்ள எலும்புகள் கிடைக்கவில்லை.
மேலும் அது மருத்துவரீதியாக வெட்டி எடுத்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருப்பதை தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கால் எலும்பில் உடைந்தது போன்றோ, பாதிக்கப்பட்டது போன்றோ எந்த ஒரு தடயமும் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மருத்துவ ரீதியாக அந்த கால் சரிவர வெட்டப்பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். மேலும் கால்களுக்கு மேலே எந்த ஒரு உறுப்பும் பாதிக்கப்படவில்லை என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதன்மூலம் சமவெளியில் வந்து உழவுத் தொழில் செய்யத் தொடங்கும் முன்பு குகை மனிதர்களாக வாழ்ந்த போதே மருத்துவ ரீதியாக அறுவை சிகிச்சை செய்து ஒரு உறுப்பை நீக்கும் அளவு மருத்துவ அறிவை மனிதர்கள் பெற்றிருந்தனர் என்பதற்கு இது ஒரு ஆதாரமாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து கூறிய ஆய்வாளர்கள், காட்டு விலங்குகள் ஏதேனும் தாக்கி அதன் மூலம் தொற்று ஏதும் பரவாமல் இருப்பதற்காக இந்த அறுவை சிகிச்சை முறை நடந்திருக்கலாம் என கணித்துள்ளனர்.
மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளுக்கு இந்த சிறுவன் வாழ்ந்துள்ளான் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவே மிகவும் பழமையான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மனிதனின் எலும்புகள் என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதற்கு முன்பு ஏழாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மனிதனின் எலும்புக்கூடு உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. தற்போது இது 31,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு என்பதால் இதுவே உலகின் மிகப் பழமையான அறுவை சிகிச்சை செய்த மனிதனின் எலும்புக்கூடு என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
அமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust