Ajith Kumar 61 : 'துணிவே துணை' தான் டைட்டிலா? ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

ஆனால், மற்றொரு புறம் அஜித்தின் 'வி' சென்டிமென்ட் படி தான் டைட்டில் இருக்கும் என்றும் பேச்சுகள் இருக்கிறது. இன்னொரு தரப்பினர் இன்று மாலை டைட்டில் வெளியாகாது. அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி, நாளை டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கின்றனர்.
Ajith
AjithTwitter
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படத்தின் டைட்டில் வெளியாகயிருக்கிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித், ஹெச்.வினோத் கூட்டணியின் மூன்றாவது படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

மஞ்சு வாரியர், 'ராஜதந்திரம்' வீரா, மகாநதி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

ஏற்கெனவே சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இனி தாய்லாந்து மற்றும் பாங்காங்கில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என்று பரவலாக கூறப்படுகிறது.

இது வரை அஜித் படத்துக்கு துணிவே துணை அல்லது துணிவு என்று தலைப்பு வைக்க இருப்பதாக இணையத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. விஸ்வாசம் மற்றும் வீரம் படங்களில் அஜித்தின் காரில் துணிவே துணை என்று எழுதியிருக்கும். அதன் அடிப்படையில் தான் துணிவே துணை என்ற பெயர் பேசப்பட்டு வருகிறது.

Ajith
வெந்து தணிந்தது காடு - திரை விமர்சனம்

1976ல் ஜெய்சங்கர் நடிப்பில் ரிலீசான படத்தின் பெயரும் ‘துணிவே துணை’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மற்றொரு புறம் அஜித்தின் 'வி' சென்டிமென்ட் படி தான் டைட்டில் இருக்கும் என்றும் பேச்சுகள் இருக்கிறது. இன்னொரு தரப்பினர் இன்று மாலை டைட்டில் வெளியாகாது. அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி, நாளை டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கின்றனர்.

எது எப்படியாகினும் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராக இருக்கின்றனர்!

Ajith
அஜித் குமார் : திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை அள்ளிய AK

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com