பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியாபட். 2012 ஆண்டு முதல் நடித்துவரும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. கமர்ஷியல் படங்களிலும் சரி சவாலான பாத்திரங்களை ஏற்று நடிக்கும் போதிலும் சரி தனக்கேயான தனித்துவத்துடன் நடிக்கக்கூடியவர் அலியாபட்.
அலியா சமீபத்தில் நடித்த கங்குபாய் படத்தின் மூலம் பெண் மையக் கதையுடன் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நாயகிகள் வரிசையில் இரண்டாவதாக நடித்திருக்கிறார் அலியா.
டிஜிட்டல் யுகத்தில் எல்லா நிறுவனங்களும் தங்களது விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வழியாக வாடிக்கையாளர்களின் மொபைலிலேயே பதிவிடுகின்றனர். இதற்காக இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு பெரும் தொகை வழங்கப்படுகிறது.
அப்படி விளம்பரம் செய்யும் ஒரு பதிவுக்கு அலியாபட் 85 லட்சம் முதல் ஒரு கோடி வரை பெறுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
Duff & Phelps -ன் பிரபலங்களின் பிராண்ட் மதிப்பீட்டு 2021 அறிக்கை அலியா பட்டின் பிராண்ட் மதிப்பு 68.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது.
அலியாபட்டுக்கு இன்ஸ்டாகிராமில் 68.5 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்.
அடுத்ததாக அலியாபட் டார்லிங்ஸ் என்ற படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ரன்பீர் கபூருடன் திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust