பவி டீச்சர் முதல் சிலகம்மா வரை - 90ஸ் கிட்ஸ் கிரஷ் பிரிகிடாவின் க்யூட் ஸ்டோரி

பிரிகிடா என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை ஆனால் பவி டீச்சர் என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
brigida
brigidaTwitter

யூடியூபில் சிறு சிறு குறும்படங்களில் அல்லது ஆல்பம் பாடல்களின் நடித்தவர் திடீரென்று செலிபிரிட்டியாக மாறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

சாதாரணமாக டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கால் பதித்தவர்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்போம். அப்படிப் பிரபலமானவர்தான் பவி டீச்சர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிரிகிடா.

ஆஹா கல்யாணம்

பிளாக்ஷீப் யூடியூப் தளத்தில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆஹா கல்யாணம் “யூடியூப் வெப் சீரிஸ் மூலம் பிரிகிடா பிரபலமானவர். பிரிகிடா என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை ஆனால் பவி டீச்சர் என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

ஆஹா கல்யாணம் வெப் சீரிஸ் நடித்தபோது புடவை, தாவணி பாவாடை கட்டியும் கேமராவுக்காக கூட மேக்அப் போடாமல் நடித்த பவி டீச்சர் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியைப் போன்று பிரிகிடாவும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

அந்த சமயங்களில் பிரிகிடா குறித்த மீம் டெப்பிளேட்கள் தான் செம வைரல். 90ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வரும் பவி டீச்சருக்கு ஏகப்பட்ட ஆர்மிகள், ஃபேன் பேஜ்கள் உள்ளன.

brigida
Irfan's View : எவ்வளவு வருமானம் தெரியுமா? - இர்ஃபானின் ஒரு ஜாலி கதை

மாஸ்டர் படத்தில் பிரிகிடா

இந்த பிரபலத்தைத் தொடர்ந்து பிரிகிடா நேரடியாக 2020ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

அந்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கூட ஒரு வெப் தொடரில் நடித்தவருக்கு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து, வெள்ளித்திரையில் கால் பதித்தது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

brigida
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

சமூக வலைத்தளங்களில் பிரிகிடா

அவ்வப்போது மேக்கப் இல்லாமல் தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரிகிடாவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் குவிந்தன. தற்போதைய இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமான பாலோவ்ஸ்களை கொண்டுள்ள பிரிகிடா அடுத்தடுத்த படங்களில் நடித்த வருகிறார்.

brigida
2k kids : அமலா சாஜி முதல் ஆதி அண்ணா வரை - வைரலாகும் மீம்ஸ்

உதவி இயக்குநர் டு கதாநாயகி

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படத்தில் பிரிகிடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைக்கதை முறையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரிகிடா நிர்வாணமாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற வந்த பிரிகிடாவுக்கு பார்த்திபன் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இரவின் நிழல் படத்தில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பது குறித்து பிரிகிடாவிடம் கேள்வி எழுப்பியபோது, ''இரவின் நிழல் படத்தின் கதை தனிஒருவனை பற்றியது. அவன் வாழ்க்கையில் கெட்டது மட்டுமே நடந்துள்ளது. சேரிக்கு போனால் அங்கு அந்த மாதிரியான வார்த்தைகளைத்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக எதையும் மாற்றி விட முடியாது.' என்றார்.

இதையடுத்து சேரி மக்களை பிரிகிடா அவமதித்து விட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை கண்டித்தனர். இதையடுத்து பிரிகிடா டிவிட்டரில் மன்னிப்பு கேட்டார். அவருக்காக நடிகர் பார்த்திபனும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.மேலும் இந்த படம் என் திரைப்பயணத்தில் முக்கியமான தொடக்கம் என்றும் பிரிகிடா தெரிவித்துள்ளார்.

பவி டீச்சரில் தொடங்கி சிலகம்மா வரை பிரிகிடாவின் நடிப்பு திறனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com