Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

இன்ஸ்டாகிராமில் பிரபலமடைய 2கே கிட்ஸ்களின் தயவு வேண்டும். அந்த 2கே கிட்ஸ்களே ஒருவரின் தரிசனத்துக்காக ஏங்குகிறார்கள் என்றால் அது அமலா ஷாஜி தான். க்யூட்னஸ் ஓவர்லோடட் போஸ்டுகளால் கலக்கும் யார் இந்த அமலா ஷாஜி?
Amala Shaji
Amala ShajiNewsSense

சமீபத்தில் மிக வைரலான நடிகை பிரியங்கா மோகனை எடுத்துக் கொள்வோம். அவர் சூர்யா, சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்துவிட்டார். இனி இன்னும் பெரிய ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக செட்டில் ஆகிவிடுவார். இருந்து விட்டுப் போகட்டும் அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் எத்தனைப் பேர்? 2.7 மில்லியன். அது அமலா ஷாஜியை விட குறைவு. பிரியங்கா மோகன் மட்டுமல்ல ஐஷ்வர்யா மேனன், அதுல்யா ரவி என நடிகைகளுடன் கெத்தாக போட்டி போடுகிறார் அமலா ஷாஜி. இன்ஸ்டாகிராமில் பிரபலமடைய 2கே கிட்ஸ்களின் தயவு வேண்டும். அந்த 2கே கிட்ஸ்களே ஒருவரின் தரிசனத்துக்காக ஏங்குகிறார்கள் என்றால் அது அமலா ஷாஜி தான். க்யூட்னஸ் ஓவர்லோடட் போஸ்டுகளால் கலக்கும்…

யார் இந்த அமலா ஷாஜி?

கடவுளின் தேசமான கேரளா தொன்றுதொட்டு தமிழ் மண்ணுக்கு ஹீரோயின்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இப்போது ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரை வழங்கியிருக்கிறது. டிக் டாக்கின் பொற்காலம் ஒன்றிருந்தது நினைவிலிருக்கிறதா? அந்த நேரத்தில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்கள் காலை விழிப்பதே அமலா ஷாஜி எனும் குழந்தையின் முகத்தில் தான். க்யூட்னஸ் எனும் வார்த்தை புழக்கத்துக்கு வரும் போது சந்தோஷ் சுப்பிரமனியம் ஜெனிலியா, ஓகே ஓகே ஹன்சிகா வரிசையில் எடுத்துக்காட்டாக நின்றவர் அமலா ஷாஜி.

திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட அமலா கேரள டிக் டாக்கர்களில் முதன்மையானவராக இருந்த காலத்தில் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இது அமலா ஷாஜிக்கு எதிரான இலுமினாட்டிகளின் சதி என்று தான் ஃபாலோவர்கள் பொங்கி எழுந்தனர். பிறகு இன்ஸ்டாகிராம், மோஜ், யூடியூபில் அமலா தலைக் காட்டிய பிறகு தான் களவரம் அடங்கியது.

அமலா ஷாஜி வீடியோஸ்

டிக் டாக்கில் ஆபாசம், அசிங்கமெல்லாம் கோலோச்சி இருந்த காலத்தில் கொஞ்சம் ஹியூமரும், கொஞ்சம் காதலும், ஆட்டமும் பாட்டமுமென தரமான கன்டென்ட்களை உருவாக்கினார் அமலா. இப்போது வரை அது தான் அவரது ஸ்டைல். கற்பூரம் போல ட்ரெண்டுகளை கப் என பிடித்து ரீக்ரியேட் செய்து லைக்ஸ் வாங்குவதில் அவர் கில்லாடி. சமீபத்தில் ட்ரெண்டான அவரது காத்து வாக்குல ரெண்டு காதல் ரீல்ஸை பார்த்துவிட்டு வாருங்கள்.

ரீல்ஸ் என்றால் என்ன என்பதற்குச் சரியான வரையறை கிடையாது. அந்த சின்ன வீடியோவில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆடலாம் பாடலாம் சமைக்கலாம் டிப்ஸ் கொடுக்கலாம்…. ஆனால் எதுவுமே செய்யாமல் 2 ரியாக்‌ஷன்கள், ரெண்டு எஃபெக்டுகள், ஸ்லோமோஷன் தேவையான அளவு போட்டு மில்லியன் லைக்ஸ் அள்ளிவிடுவார் அமலா ஷாஜி. அது எப்படி என்று கேட்கிறீர்களா? நான் விளக்கினாலும் 2கே கிட்களை புரிந்து கொள்ள முடியாது விட்டுவிடுங்கள்.


சகோதரி அம்ரிதா உடன் ரீல்ஸ், சோலோ டான்ஸ் ரீல்ஸ், ட்ரெண்டிங் ரீக்ரியேஷன், அம்மா அப்பா உடன் ஃபேமிலி ரீல்ஸ், ரசிகர்கள் வந்தால் எமோஷனல் ரீல்ஸ், பண்டிகைகளில் புதிய ட்ரெஸ் ரீல்ஸ், அவற்றில் துணிக்கடை விளம்பரம், க்ளிப், வளையல் கொலுசு கடை விளம்பரம். யூடியூபில் வீலாக், அட்மின் ஷோஸ், லைவ் செஷன்ஸ் என பிஸியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் அமலா.

அழுக ஒன்னும் வேண்டாம் ஓகே

என் ரத்தத்தின் ரத்தங்களே என்றால் எம்.ஜி.ஆர். என் நெஞ்சில் குடியிருக்கும் என்றால் தளபதி விஜய். அது போல அமலா ஷாஜியின் வசனமாக மாறியிருக்கிறது “அழுக ஒன்னும் வேணாம் ஓகே”.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் தன்னை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் ஆனந்தத்தில் கண் கலங்க அந்த வசனத்தைச் சொல்லித் தேற்றுகிறார் அமலா. இந்த வீடியோ செம வைரலானது ஆனது. அமலா ஷாஜி ஃபேன்ஸ் கிளப், அமலா ஷாஜி அடிக்ட்ஸ், அமலா ஷாஜி உயிர் எனப் பல ரசிகர் பக்கங்களின் ஆதரவும் இருக்க இந்த தலைமுறையின் வெளிப்பாடாக திகழ்கிறார் அமலா ஷாஜி. கேரள ரசிகர்கள் கொஞ்ச, தமிழ் ரசிகர்கள் கெஞ்ச இரண்டு மாநிலத்துக்கும் 2கே கிட்ஸின் இணைப்பு மொழி இவர் தான்.

Amala Shaji Instagram to Age

தேடுறாங்க பாஸ்
தேடுறாங்க பாஸ்twitter

போட்டோவிலிருக்கும் கேள்விகள் தான் கூகுளில் அமலா குறித்து அதிகம் தேடப்பட்டவை. அவரது இன்ஸ்டாகிராம், புகைப்படங்கள் எல்லாம் மேலிருக்கும் வீடியோக்களை க்ளிக் செய்து பார்க்கலாம். 2001ம் ஆண்டு பிறந்த அவருக்கு இப்போது 20 வயது. Amala Shaji என்ற பெயரில் தான் யூடியூப் சேனல் இருக்கிறது. யூடியூபில் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கான டிக் இருக்கும்.

எங்கே செல்லும் இந்த பாதை

மிகவும் ஷாக்கிங் ஆக இருந்தது நம்மைச் சுற்றியிருக்கும் 10ல் ஒரு நபர் எதோ ஒரு வகையில் அமலா ஷாஜியை தெரிந்து வைத்திருப்பது தான். 100ல் ஒருவர் அவரது ரீல்ஸ்களை ரசிக்கிறார். 1000 ஒருவர் தினசரி அவரது கன்டென்டை பார்க்கிறார். 10000ல் ஒருவர் அவரது தீவிர ஃபாலோவராக இருக்கிறார். லட்சத்தில் ஒருவர் அமலா தான் என் உயிர் என்கிறார்.

சமீபத்தில் அமலா ஷாஜி ஸ்லேவ்ஸ் எனும் பெயரில் ஒரு பக்கத்தைத் தொடங்கினர் பேஸ்புக் வாழ் நெட்டிசன்கள். அது சர்ச்சையாகவே இழுத்து மூடிவிட்டு இன்ஸ்டாகிராம் தான் பாதுகாப்பு எனத் தஞ்சம் புகுந்து கொண்டனர். ஒரு ரீல்ஸ் செய்யும் பெண்ணுக்கு இவ்வளவு ரசிகர்கள் உருவாகுவார்கள் என்று யாராவது சொன்னால் ஐந்து வருடத்துக்கு முன் நாம் தலையை சொரிந்து கொண்டிருந்திருப்போம்.

Amala Shaji
சாணி காயிதம்: Fan எடிட் செய்த வீடியோவை பகிர்ந்து பாராட்டிய செல்வராகவன்

இன்ஸ்டாகிராம் உபயோகிக்கும் பல டீனேஜ் பெண் குழந்தைகள் தாழ்வுமனப்பான்மையிலும் மன அழுத்தத்திலும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு இன்ஃப்லூயன்சர்களும் ஒரு காரணம். அமலா ஷாஜியைப் பின் பற்றி பலரும் ரீல்ஸில் குதிக்க வேண்டாம் என்பதை எச்சரிக்கையாக இங்குப் பதிவு செய்ய விரும்புகிறோம். மற்றொரு நபரைப் போல மாற வேண்டும், பிரபலமடைய வேண்டும் என்பது உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வதாகும். உங்களைக் குறித்து பெருமை கொள்ளுங்கள். உங்களது உடல், மனதுடன் நீங்களாகவே உயருங்கள். ரீல்ஸில் கூட உங்களது தனித்துவத்தை பிரதிபலிக்க முயலுங்கள். அதுவே ஆரோக்கியமான வளர்ச்சி.

Amala Shaji
HBD பிரதீப் குமார்: தேம்பும் மனங்களை தேற்றும் குரல்; இந்த பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?

வெந்து தணிந்தது காடு

அமலா ஷாஜிக்கு ஃபாலொவ போடு

அமலா ஷாஜி சில மியூசிக் வீடியோக்களில் நடித்திருந்தாலும் அவருக்கு உரிய அங்கீகாரம் தர மறுக்கிறதா தமிழ், மலையாள திரைத்துறைகள் என்ற கேள்வி எல்லா 2கே கிட்ஸ்களின் மனதிலும் இருக்கிறது. நம்மள விட சின்ன ஊரு சின்னாளப்பட்டி என்பது போல 1.6 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கும் அனிகா, அஜித் குமாருக்கு மகளாக நடிக்கும் போது அமலா நடிக்க கூடாதா? விரைவில் ஐமேக்ஸ் திரையில் அமலாவின் க்யூட்னஸை கண்டுகளிப்போம் என எதிர்பாக்கலாம்.

Amala Shaji
Santhosh Narayanan: அட்டகத்தி முதல் Gulu Gulu வரை; திரையிசையின் மகான் சநா| Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com