Allu Arjun: ரேஞ்ச் ரோவர் டு பிரைவேட் ஜெட் - புஷ்பா பட நடிகரின் சொத்துக்கள் என்னென்ன?
Allu Arjun: ரேஞ்ச் ரோவர் டு பிரைவேட் ஜெட் - புஷ்பா பட நடிகரின் சொத்துக்கள் என்னென்ன?ட்விட்டர்

Allu Arjun: ரேஞ்ச் ரோவர் டு பிரைவேட் ஜெட் - புஷ்பா பட நடிகரின் சொத்துக்கள் என்னென்ன?

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் அல்லு அர்ஜுனிடம் சில விலையுர்ந்த சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றின் புகைப்படங்களை அவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்வதுண்டு. அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்
Published on

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அல்லு அர்ஜுன், புஷ்பா திரைப்படம் மூலம் ‘பான் இந்தியா’ நடிகராக உயர்ந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியான நிலையில், அதன் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் அல்லு அர்ஜுனிடம் சில விலையுர்ந்த சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றின் புகைப்படங்களை அவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்வதுண்டு.

அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்

100 கோடி பங்களா

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது தங்கியிருக்கும் வீட்டின் மதிப்பு ரூ.100 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பங்களா வீட்டில் ஒரு பெரிய lawn, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், ஹோம் தியேட்டர் போன்ற வசதிகள் உள்ளன.

Vanity Van

கடந்த 2019ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் ஒரு வேனிட்டி வேனை சொந்தமாக்கினார். இதன் மதிப்பு ரூ.7 கோடி. அதில் AA என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வேனிட்டி வேன் என்பது நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் போன்றது. இதனுள், படுக்கையறை, கழிவறை என சகல வசதிகளும் இருக்கும்.

அல்லு அர்ஜுனின் வேனிட்டி வேனின் பெயர் The Falcon

Allu Arjun: ரேஞ்ச் ரோவர் டு பிரைவேட் ஜெட் - புஷ்பா பட நடிகரின் சொத்துக்கள் என்னென்ன?
Pushpa 2 Update : அல்லு - ஃபகத் ஆக்‌ஷன் காட்சிகள், சமந்தாவின் கேமியோ - படபிடிப்பு எப்போது?

சொகுசு கார்கள்

அல்லு அர்ஜுன் ஒரு கார் பிரியர். இவரிடம் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு ஹம்மர் எச் 2 கார் இருக்கிறது. மேலும், ரூ.2.39 கோடி மதிப்புடைய லேண்ட் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றும் உள்ளது. இந்த காரின் பெயர் பீஸ்ட்.

இதை தவிர இவரிடம் ஜாகுவார் XLJ, Volvo XC90 T8 Excellence and the BMW X6 M Sport ஆகிய கார்களும் உள்ளன.

தனியார் விமானம்

இந்தியாவில் தனியார் விமானம் சொந்தமாக வைத்திருப்பவர்கள் பட்டியலில் அல்லு அர்ஜுனும் உள்ளார். குடும்பத்தினருடன் வெகேஷனுக்கு இந்த தனியார் விமானத்தில் தான் அவர் செல்கிறார்

Allu Arjun: ரேஞ்ச் ரோவர் டு பிரைவேட் ஜெட் - புஷ்பா பட நடிகரின் சொத்துக்கள் என்னென்ன?
ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கை

நைட் கிளப்

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத்தில் சொந்தமாக நைட் கிளப் வைத்திருப்பதாக பின்க்வில்லா தளம் கூறுகிறது.

இதை தவிர கால் ஹெல்த் சர்வீசஸ் என்கிற ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப்பிலும் இவர் முதலீடு செய்திருக்கிறார்

ஒடிடி தளம்

தனது தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான அல்லு அரவிந்துடன் இணைந்து அல்லு அர்ஜுன் தொடங்கிய ஒடிடி தளம் தான் ஆஹா. ஆஹா தளத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகும்.

அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம், ரூ.30 கோடி என பின்க்வில்லா தளம் கூறுகிறது

Allu Arjun: ரேஞ்ச் ரோவர் டு பிரைவேட் ஜெட் - புஷ்பா பட நடிகரின் சொத்துக்கள் என்னென்ன?
மாளிகை, பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் - அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்கள் எவை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com