அமலா பாலுக்கு தொல்லை: புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியதாக காதலர் கைது

அமலா பால் தனது காதலரும் திரைப்பட தயாரிப்பாளருமான பவ்னிந்தர் சிங் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பவ்னிந்தர் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Amala Paul's ex-boyfriend
Amala Paul's ex-boyfriendTwitter
Published on

அமலா பாலின் முன்னாள் காதலர் பவ்னிந்தர் சிங், பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த அமலாபால், தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படிப்படியாக வளர்ந்து விஐபி, தலைவா உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்து, 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக வெறும் மூன்று ஆண்டுகளில் பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

இந்நிலையில் அமலா பால் தனது முன்னாள் காதலரும் திரைப்பட தயாரிப்பாளருமான பவ்னிந்தர் சிங் மீது புகார் அளித்துள்ளார்.

Amala Paul's ex-boyfriend
விவாகரத்துக்கு பிறகும் டாட்டூவை அழிக்க விரும்பாத நாக சைதன்யா - சமந்தா முடிவு என்ன?

அதில் தனது பணம் மற்றும் சொத்துக்களை முறைகேடாக பவ்னிந்தர் பயன்படுத்தியதாகவும், திருமணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட போட்டோஷூட்டை, அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் அமலா பால் புகார் அளித்துள்ளார்.

கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் மன ரீதியாக, பொருளாதார ரீதியாக அழுத்ததிற்குள்ளானதாக அமலாபால் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இருவரும் இணைந்து சினிமா தொடர்பான நிறுவனத்தை நடத்தி வந்ததாக அமலாபால் அதில் குறிப்பிட்டு உள்ளார். புகாரின் அடிப்படையில் பவ்னிந்தர் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Amala Paul's ex-boyfriend
நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா பதில் : ”கூர்மையான பொருட்களை மறைத்து வைக்கணும் ”

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com