முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு எதிரான அவதூறு வழக்கைத் தோற்ற சில நாட்களில் ஹாலிவுட் நடிகை ஆம்பரை திருமணம் செய்துகொள்ள சௌதியைச் சேர்ந்த நபர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த நபர் ஆம்பரின் முன்னாள் கணவர் ஜானியை விடத் தான் சிறந்தவன் எனக் கூறியுள்ளார்.
Gulf News -ஆல் மொழிபெயர்க்கப்பட்ட அந்த ஒலிப்பதிவு குறிப்பில் அவர் தனது விருப்பத்தை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார், “ஆம்பர் உனக்கான எல்லா கதவுகளும் அடைக்கப்படும் பொது உன்னைப் பார்த்துக்கொள்ள என்னைத் தவிர வேறு யாருமில்லை. சிலர் உன்மீது வெறுப்பைக் கக்குகின்றனர், உன்னைக் கேலி செய்கின்றனர், எனவே, நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். அல்லா நம் இருவரையும் ஆசிர்வதிப்பார். நான் உன் முன்னாள் கணவரை விடச் சிறந்தவன்”. என அந்த குரல்பதிவில் கூறுகிறார்.
ஆம்பர் ஹெர்ட் மீது ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கு கடந்த ஜூன் 2ம் தேதி முடிவுக்கு வந்தது. இதில் ஜானிடெப் வெற்றி பெற்றார். ஆண்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்பது ஜானி டெப் தரப்பு வாதமாக இருந்தது. அத்துடன், இது மீ2 செயல்பாட்டின் முடிவு என்றும் பத்திரிக்கைகள் எழுதின.
ஆம்பருக்கு நீதிமன்றம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன் டாலர்) அபராதத் தொகை விதித்தது எனினும் ஆம்பர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust